ராஜாக்கமங்கலம் அருகே பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை

இரவு ஷீலா வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது நிது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது
ராஜாக்கமங்கலம் அருகே பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை
Published on

கன்னியாகுமரி :

ராஜாக்கமங்கலம் அருகே ராஜாக்கமங்கலம் துறை அந்தோணியார் குருசடிதெரு பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் (வயது52) மீனவர். இவரது மனைவி ஷீலா.இவர்களுக்கு ஒரு மகனும் நிது (22) என்ற மகளும் உள்ளார். நிது பட்டப்படிப்பு படித்துள்ளார். நேற்று மிக்கேல் கடல் தொழிலுக்கு சென்று இருந்தார்.ஷீலா மற்றும் அவரது மகனும் வேலைக்கு சென்று இருந்தனர்.வீட்டில் நிது மட்டும் இருந்தார்.

இரவு ஷீலா வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது நிது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷீலா கூச்சலிட்டார்.அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நிதுவை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.பின்னர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிது பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com