என் மலர்
உள்ளூர் செய்திகள்

தக்கலையில் திருமணத்திற்கு 11 நாளே உள்ள நிலையில் பட்டதாரி பெண் மாயம்
- கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை
- வருகிற 31-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே மணலிக்கரை புத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் உயில்சன். கட்டிட தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உண்டு. மூத்த மகள் பியுட்லின் ஜின்ஷா (வயது 23) இளங்கலை பட்டதாரி யான இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற 31-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில் 19-ந்தேதி இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பியுட்லின் ஜின்ஷா அதிகாலையில் மாயமாகி விட்டார். தாய் தந்தை மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் பியுட்லின் ஜின்ஷா குறித்த எந்த வித தகவலும் கிடைக்க வில்லை.
சம்பவம் குறித்து உயில்சன் கொற்றிக்கோடு போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விசாரணை நடத்திய நிலையில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
திருமணம் நடக்க 11 நாட்கள் இருந்த நிலையில் பியுட்லின் ஜின்ஷா கடத்தப்பட்டாரா இல்லை காதலனுடன் ஓடி சென்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் உறவினர் கள் மற்றும் ஊர்மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.






