search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி நகரில் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    X

    நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    தேனி நகரில் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    • தேனி அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற கூட்டம் தலைமையில் நடை பெற்றது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் உள்பட கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கையை முன்வைத்தனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற கூட்டம் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் நடை பெற்றது. துணைத்த லைவர் செல்வம், ஆணை யாளர் வீரமுத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சில ர்கள் சூர்யா பாலமுருகன், கடவுள், நாராயண பாண்டியன், விஜயன், பிரிட்டிஷ், மணிகண்டன், தினேஷ்குமார் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள், நகராட்சி நிர்வாக பணிகள் போன்ற 54 கூட்ட பொருள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசிய தாவது,

    சரஸ்வதி: உழவர் சந்தை திட்டச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், சந்திரகலா ஈஸ்வரி தேனி பகவதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    கவுன்சிலர் நாராயண பாண்டியன் பேசுகையில்,

    தேனி நகரில் தினசரி குப்பைகள் வாங்க வர வேண்டும் எனவும், சாக்கடைகளை சீராக தூர் வார வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். கவுன்சிலர் பாப்பா பேசும் போது தெருக்களில் தண்ணீர் வினியோகம் செய்யும் நேரத்தை அதி கரிக்க வேண்டும் என்பன உள்பட கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கையை முன்வைத்தனர்.

    கவுன்சிலர்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பதில் தெரிவித்தனர்.

    Next Story
    ×