search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் டிரைவரை கத்தியால் குத்திய போதை நபர் கைது
    X

    பஸ் டிரைவரை கத்தியால் குத்திய போதை நபர் கைது

    • இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    மேட்டுப்பாளையம், :

    மேட்டுப்பாளையம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளையில் 1சி 25 நகர பஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூருக்கு பெரியபுத்தூர் வழியாக இயங்கி வருகிறது. அந்த பஸ்சில் டிரைவராக மூடுதுறை மீனம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலக்குமார் (41) என்பவரும், கண்டக்டராக கணேசன் என்பவரும் பணியாற்றி வந்தனர்.

    நேற்று இரவு 7.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ் அன்னூருக்கு புறப்பட்டது. பஸ் வெளியே வரும் வழியில் சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த போதை நபர் ஒருவர் டிரைவரை கீழே இறங்கி வாடா என்று தகாத வார்த்தையால் திட்டி ரகளை ஈடுபட்டார் . டிரைவர் அருணாச்சலகுமார் கீழே இறங்கி ஏன் பஸ்சை மறித்து நிற்கிறாய், ஓரமாக செல், பஸ் செல்ல வேண்டும் என கூறினார். உடனே போதை நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டிரைவர் அருணாச்சலகுமாரின் கை மற்றும் வயிற்றுப் பகுதி கத்தியால் குத்தினார். . இதை சற்றும் எதிர்பாராத அருணாச்சல குமார் படுகாயம் அடைந்து அலறினார்.

    அவரை சக ஊழியர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அரசு பஸ் டிரைவரை கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் மணிகண்டன் (வயது 40) என்பது தெரியவந்தது. மேட்டுப்பாளையம் பஸ் நிலைய பகுதியில் டாஸ்மாக் கடைக்கு வருபவர்களிடம் காசு வாங்கி மதுகுடிப்பதை வாடிக்கையாக கொண்டு அந்த பகுதியிலேயே திரிந்துள்ளார். நேற்று போதை அதிகமாகி பஸ்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டு பஸ் டிரைவரை கத்தியால் குத்தி விட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தேவையான காவலர்களை நியமித்து பஸ் டிரைவர், கண்டக்டர், பயணிகள் மற்றும் பெண்கள் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×