search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் பேரூராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு - சாலையில் வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்
    X

    குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்.

    ஆலங்குளம் பேரூராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு - சாலையில் வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்

    • 1- வது வார்டு பகுதியில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • நான்கு வழி சாலை பணி நடைபெற்று வரும் பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சி யில் மொத்த முள்ள 15 வார்டுகளில் 1,2,9,10,11,12 மற்றும் 14 ஆகிய வார்டுகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் இந்த வார்டுகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 1- வது வார்டு பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டதால் அங்குள்ள மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் தண்ணீரையும் விலை கொடுத்தே வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நெல்லை - தென்காசி நான்கு வழி சாலை பணி நடைபெற்று வரும் பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் உடைப்பு சரி செய்யப்படாததால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் பாய்ந்து வீணாகிறது.

    இது குறித்து பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திற்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடுமையான கோடையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் தட்டுப்பட்டால் தவித்து நிற்கும் வேளையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலையில் பாயும் தண்ணீரைக் கண்டு பொதுமக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். பேரூராட்சியின் 1 மற்றும் 2-வது வார்டுகளில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து குடிநீரை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வரும் சூழல் காணப்படுகிறது.

    அதிகாரிகள், வீணாகச் செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தினாலே பொது மக்களுக்கு தாராளமாக குடிநீர் கிடைக்கும் என்பது ஆலங்குளம் பேரூராட்சி மக்களின் எண்ணமாக உள்ளது.

    Next Story
    ×