search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற திண்டுக்கல் மாணவர்கள் நெகிழ்ச்சி
    X

    கோப்பு படம்

    உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற திண்டுக்கல் மாணவர்கள் நெகிழ்ச்சி

    • மாணவ-மாணவிகளின் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய “நான் முதல்வன்“ என்கிற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • திண்டுக்கல்லில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது. வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய "நான் முதல்வன்" என்கிற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    "நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில் திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.

    இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ. மாணவிகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.

    திண்டுக்கல்லில் நடைபெற்ற 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜக்காப்பட்டியைச் சேர்ந்த கோகுலகண்ணன் என்ற மாணவர் தெரிவித்ததாவது:-

    நான், திண்டுக்கல் எம்.எஸ்.பி.சோலைநாடார் நினைவ மேல்நிலைப்பள்ளியில் படித்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். திண்டுக்கல்லில் நடைபெற்ற 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 12-ஆம் வகுப்பு முடித்த பின்னர் என்னென் உயர்கல்வி படிப்புகள் உள்ளன. அவற்றை எங்கெங்கு படிக்கலாம்.

    எந்தெந்த படிப்பிற்கு நுழைவுத்தேர்வு உண்டு என்பது போன்ற தகவல்களை அறிந்துகொண்டேன். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவி விஜயலட்சுமி தெரிவித்ததாவது:-

    நான், திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். திண்டுக்கல்லில் நடைபெற்ற 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

    உயர்கல்வி மேம்பாட்டிற்காக அரசு அறிவித்துள்ள சலுகைகள், கல்வி உதவித்தொகைகள், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு, முன்னுரிமை போன்ற தகவல்களை அறிந்துகொண்டேன். 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் உயர் கல்வி படிப்புகள், எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அறிந்துகொண்டேன். எனக்கும், என்னை போன்ற மாணவிகளுக்கும் இது பயனுள்ளதாக அமைந்தது என்றார்.

    Next Story
    ×