search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, காந்திநகர் பகுதியில்   வராத தண்ணீருக்கு வரி கேட்கும் நகராட்சி நிர்வாகம்
    X

    கலெக்டரிடம் திரவுபதி மனுகொடுத்து விட்டு வெளியே வந்த போது எடுத்தபடம்.

    தருமபுரி, காந்திநகர் பகுதியில் வராத தண்ணீருக்கு வரி கேட்கும் நகராட்சி நிர்வாகம்

    • எங்கள் தெருவில் தண்ணீர் வராததற்கு காரணம் தெருவில் உள்ள நபர்கள் அனைவரும் மின் மோட்டார் வைத்து மொத்த தண்ணீரை எடுக்கிறார்கள்.
    • கடந்த மூன்று வருடங்களாக தண்ணீர் வருவதில்லை.

    தருமபுரி,

    தருமபுரி காந்திநகர் ஏழாவது தெரு பகுதியில் வசித்து வருபவர் திரவுபதி. இவர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் இடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி காந்திநகர் ஏழாவது தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எங்களுடைய வீட்டில் நகராட்சி குடிநீர் இணைப்பு இருந்தும் கடந்த மூன்று வருடங்களாக தண்ணீர் வருவதில்லை. ஆனால் வருடா வருடம் தண்ணீர் வரி கட்டச் சொல்லி பில் மட்டும் கொடுக்கின்றனர். நாங்களும் வருடா வருடம்

    தண்ணீர் வரியை கட்டி வருகிறோம்.

    மேலும் எங்கள் தெருவில் தண்ணீர் வராததற்கு காரணம் தெருவில் உள்ள நபர்கள் அனைவரும் மின் மோட்டார் வைத்து மொத்த தண்ணீரையும் எடுத்து அடுக்குமாடி வீடுகளில் உள்ள டேங்கிற்கு ஏற்றி வைத்துக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர்.

    எங்களுடைய வீட்டிற்கு மட்டும் தண்ணீர் வருவதில்லை. கரண்ட் இல்லாத போது தண்ணீர் வருகிறது. கரண்ட் இருந்தால் அனைவரும் மோட்டார் போடுவதால் தண்ணீர் வருவதில்லை. ஆதலால் எங்களுடைய வீட்டிற்கு நகராட்சி மூலம் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×