search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
    X

    பூண்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

    • கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஏரிக்கு 590 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • ஏரியின் மதகுகள் அருகே ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. தற்போது கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஏரிக்கு 590 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் ஏரியின் மதகுகள் அருகே ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. சுமார் 5 கிலோ வரையிலான பெரிய மீன்களும் இறந்து கரை ஒதுங்கி உள்ளன.

    இதனால் மதகுகள் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுமார் 1 டன் மீன்கள் ஏரியில் செத்து மிதந்து வருகிறது. இதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×