search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லதங்காள் ஓடை  பாதுகாப்பை  வலியுறுத்தி  சைக்கிள் ஊர்வலம்
    X

    கோப்புபடம்.

    நல்லதங்காள் ஓடை பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் ஊர்வலம்

    • குளத்தின் பாதுகாப்பை வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.
    • திரளான இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள் ஊர்வலம் 44 கி.மீ., தூரம் நடைபெற்றது.

    மூலனூர் :

    நல்லதங்காள் ஓடை அணை பாதுகாப்பை வலியுறுத்தி, 44 கி.மீ., தூரம் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.வீ த லீடர்ஸ் அமைப்பு, பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றி, குளத்தை பராமரித்து வருகிறது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குளத்தின் பாதுகாப்பை வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.

    மூலனூர் பேரூராட்சி தலைவர் தெண்டபாணி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பொன்னிவாடி ஊராட்சி அலுவலகத்தில் துவங்கி பொதுமக்களும் வீ த லீடர்ஸ் அமைப்பினரும் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். பொன்னிவாடி ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம், தன்னார்வலர் சண்முகம் உள்ளிட்டோர் துவக்கி வைத்த ஊர்வலம் நல்லதங்காள் ஓடை அணையில் நிறைவு பெற்றது.

    திரளான இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள் ஊர்வலம் 44 கி.மீ., தூரம் நடைபெற்றது. மாணவர்கள், இளைஞர்களுடன் ஆம்புலன்ஸ் வாகனமும் பயணித்தது. பயண இலக்கை அடைந்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் ரமேஷ், அன்புராஜ், சத்தியமூர்த்தி, பாஸ்கர், பாலாஜி, சிவராம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×