என் மலர்tooltip icon

    கடலூர்

    • பதிவு செய்யாத நபர்களும் சேர்த்து 1250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மொத்தம் ரூ.1லட்சத்து 25 ஆயிரம் ரொக்கபரிசுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவிய போட்டி 'தூரிகை 2023'-க்கான ஆன்லைன் ரிஜிஸ்டர் ரேஷனில் 865 மாணவ மாணவிகள் பதிவு செய்திருந்தனர். மேலும் பதிவு செய்யாத நபர்களும் சேர்த்து 1250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதன் அடிப்படையில் 6 பிரிவு களில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 7 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் ஆயிரம், நான்காம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என 24 பிரிவினர்களுக்கு மொத்தம் ரூபாய் 1லட்சத்து 25 ஆயிரம் ரொக்கபரிசுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர். இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் திலீப் குமார் , மண்டல இணைப்பதிவாளர் நந்த குமார் , வங்கியின் பொது மேலாளர் (பொறுப்பு) , உதவி பொது மேலாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள், கலந்து கொண்டார்கள். 

    • ராஜேந்திரன், கொளஞ்சியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
    • கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராம நத்தம், மங்களூர் வட்டார கல்வி அலுவல கத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ெஜய பால் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர், மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர் சரவணன், துணைச் செயலாளர் வாசுகி, மகளிர் வலை யமைப்பு அமுதா, பொரு ளாளர் சுரேஷ், இயக்கப்புர வலர் ராஜேந்திரன், கொளஞ்சியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர். இதில் கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார்.
    • போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தங்கால் பழைய காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வீரமணி (வயது 24). இவர் கடந்த 4.5.2017 அன்று ஊ.மங்கலம் அம்பேத்கர் சிலை அருகே கடலூர்-விருத்தாசலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து வீரமணியின் தாய் அனுசுயா, சகோதரி ரதி ஆகியோர் நஷ்டஈடு பெற்றுத்தரக்கோரி கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் பலியான வீரமணியின் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட விழுப்புரம் போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.17 லட்சத்து 73 ஆயிரத்து 600 வழங்க வேண்டும் என கடந்த 18.3.2021 அன்று உத்தரவிட்டார். ஆனால் இதுநாள் வரை வீரமணியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வீரமணியின் குடும்பத்தினர், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், வீரமணியின் குடும்பத்துக்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.23 லட்சத்து 68 ஆயிரத்து 129 வழங்க வேண்டும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    • நகர போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    • வாரம் 2 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, கனகசபை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாகவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக மாநிலச் செயலர் எஸ்.ஜி.சூர்யா, அந்த கட்சி நிர்வாகி கவுசிக் சுப்ரமணியம் ஆகியோர் மீது சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் அளித்த புகாரின்பேரில், நகர போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற மேற்கண்ட இருவரும் சிதம்பரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 2-ல் ஆகஸ்ட் 9-ம் தேதி நீதிபதி சக்திவேல் முன்பு ஆஜராகினர். அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வாரம் 2 நாட்கள் கையெழுத்திட வேண்டும். என உத்தரவு பிறப்பித்ததை அடுத்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் முன்னிலையில் நிபந்தனை ஜாமீன் கையேட்டில் எஸ்.ஜி.சூர்யா கையெழு த்திட்டார். அவருடன் பாஜக முன்னாள் ராணுவவீரப் பிரிவு செயலாளர் பால சுப்பிரமணியன், விவசாயி அணி தலைவர் ரகுபதி உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

    • மணவாளநல்லூரில் இளையராஜாவுக்கு சொந்தமான விளை நிலத்தில் வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • இளையராஜா மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன். முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவருடைய மகன் இளையராஜா (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் விருத்தாசலத்தில் வள்ளலார் குடில் என்ற முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். மேலும் மணவாளநல்லூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இளையராஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் மணவாளநல்லூரில் இளையராஜாவுக்கு சொந்தமான விளை நிலத்தில் வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்வதற்காக இளையராஜா நேற்று மாலை 4 மணிக்கு தனது விளை நிலத்திற்கு சென்றார். அப்போது அவர், அங்கு வந்த வேளாண்மைத்துறை அதிகாரியுடன், பயிற்சி கூட்டம் தொடர்பாக பேசினார்.

    கூட்டம் முடிந்து மாலை 5.30 மணி அளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களை பார்த்ததும், இளையராஜா தனது காரை நோக்கி ஓடினார். உடனே அந்த கும்பலில் இருந்த ஒருவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால், இளையராஜாவை நோக்கி சுட்டார்.

    இதில் துப்பாக்கி குண்டு, அவரது இடுப்பு பகுதியில் பாய்ந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட இளையராஜா, தனது காரில் ஏறி கதவை பூட்டிக் கொண்டு, தப்பிச் செல்ல காரை இயக்க முயன்றார். அப்போது அந்த கும்பலை சேர்ந்த மற்றொருவர், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் இளையராஜாவை நோக்கி சுட்டார்.

    அந்த குண்டு கார் கண்ணாடியை துளைத்துக்கொண்டு, அவரது கழுத்தில் பாய்ந்தது. இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. மேலும் அந்தகும்பல் 2 முறை கார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து இளையராஜா, காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். ரத்தக்கறையுடன் வந்த அவரை மருத்துவக்குழுவினர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய ராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் தலைமையிலான விருத்தாசலம் போலீசார், அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து இளையராஜாவிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- நான் வேளாண்மைத்துறை நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக பார்வையிட சென்றேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆடலரசன், புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் வந்தனர். அதில் 2 பேர் துப்பாக்கியால் என்னை சுட்டனர். இதில் இடுப்பு மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது என்றார். இதனிடையே இளையராஜா மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூடு பற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஆடலரசன், புகழேந்திராஜா, சூர்யா, வெங்கடேசன், சதீஷ் உள்ளிட்ட 9 பேரை போலீசார் பிடித்து கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கள்ள துப்பாக்கி மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்தபோது செல்போனை பறிமுதல் செய்தனர்.
    • அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த சிறைச்சாலையில் 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது அறையில் உதவி ஜெயிலர் மணிகண்டன் திடீரென சோதனை நடத்த சென்றார். அப்போது அவரை எண்ணூர் தனசேகரன் தாக்க முயன்றார்.

    மேலும் ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் பாட்டில்களை வீசி கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்கிலும் எண்ணூர் தனசேகரனுக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்தபோது செல்போனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதனால் எண்ணூர் தனசேகரனை சிறைக்காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நேற்று தனசேகரன் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக சென்னை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மாலை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    அப்போது சிறைக்காவலர்கள் எண்ணூர் தனசேகரன் அறையை மீண்டும் சோதனை செய்தனர். சோதனையில் அவரது அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறைக்காவலர்கள் அந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து சிறைக்காவலர்கள் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். எண்ணூர் தனசேகரன் இருந்த அறையிலிருந்து மீண்டும் சிறைக்காவலர்கள் செல்போன் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை பெற்றோரிடம் கூறினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தில் 15 வயது பெண் மனநலம் பாதிக்கப்பட்டு பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 6-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 25 வயது சிறுவன், சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மேலும், அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியில் வரும் போதெல்லாம், மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை, அவரது பெற்றோர் மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை பெற்றோரிடம் கூறினர். சிகிச்சை முடிந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதன்படி சிறுமியின் தாயார், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

    • ெரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • லலிதாவிற்கு சிறிது நாளாக உடல்நிலை பாதித்துள்ளது.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் ரெயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கொடுக்கூரை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி லலிதா(30) இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். லலிதாவிற்கு சிறிது நாளாக உடல்நிலை பாதித்துள்ள நிலையில் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இன்று அதிகாலை அவரது சொந்த ஊரான கொடுக்கூரில் இருந்து விருத்தாசலத்திற்கு பஸ்சில் வந்த லலிதா, விருத்தாசலம் டவுன் ெரயில் நிலையத்திலிருந்து மணிமுத்தாறு பாலத்தின் மேல் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று விருத்தாசலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ெரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் ெரயில்வே போலீசார் லலிதா உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து லலிதாவின் குடும்ப த்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு வேலைக்கு சென்றார்.
    • சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக இறந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வடகுதெரு புளியந்தோப்பு கோவில் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் மதியழகன் (வயது 24) பெயிண்டர்.இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் புறவழிச்சாலையில் வந்தபோது எதிரே வந்த மினி லாரி இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்தனர். இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அசோக்குமாரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
    • மீண்டும் மீண்டும் தனது கைகளை கிழித்துக் கொண்டார்.

    கடலூர்:

    காடாம்புலியூர் பேர்பெரியான்குப்பம் கந்தன் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார் (வயது 23) ரவுடி. அப்பகுதியில் நடைபெற்ற திருட்டு குறித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த அசோக்குமாரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது போலீசா ரிடம் வாக்குவாதம் செய்த அசோக்குமார், தான் வைத்திருந்த பிளேடால் கையை கிழித்து க்கொண்டார். சந்தேகத்தின் பேரில் என்னை கைது செய்ய துடிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையம் முன்பு நின்று கூச்சலிட்டார். மேலும், பிளேடால் மீண்டும் மீண்டும் தனது கைகளை கிழித்துக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு பின் அசோக்கு மாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 12 பேருக்கு பரிசுத்தொகைகளுக்குரிய காசோலைகள், பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கினார்.
    • இலவச பஸ் பயணத்திற்கான அரசாணைகள் வழங்கி சிறப்பித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ்மன்றம் சார்பில் கவிதை, கட்டுரைப் பேச்சுப் போட்டிகள், அண்ணல் அம்பேத்கர், கருணாநிதி பிறந்தநாள்களின் கொண்டாட்டத்திற்கான பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் 34 பேருக்கு பரிசுத்தொகை களு க்குரிய காசோலைகளும் சான்றிதழ்களும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

    மேலும், திருக்குறள் முற்றோதல் முடித்த மாணவிக்குப் பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழ் மற்றும் தமிழில் சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளர்கள் 12 பேருக்கு பரிசுத்தொகைகளுக்குரிய காசோலைகள், பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கினார். மொத்தமாக 47 பேருக்கு ரூ. 2,19,000 பரிசுத்தொகைகளுக்குரிய காசோலைகள் வழங்கினார். அத்துடன் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு இலவச பஸ் பயணத்திற்கான அரசாணைகள் வழங்கி சிறப்பித்தார்.இதில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அன்பரசி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பவுன்ராஜ் ஏரிக்கரைக்கு சென்று அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • பவுன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பவுன்ராஜ் (வயது 26), இன்று காலை மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து ஏரிக்கரைக்கு சென்று அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மரத்தில் தற்கொலை செய்து கொண்ட பவுன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×