search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே 41 அடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
    X

    41 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    கடலூர் அருகே 41 அடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

    • காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடை பெற்றது
    • மாலையில் சீதா ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த டி.குமராபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற 41 அடி காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்க ப்பட்டு இன்று (ஞாயிற்று க்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி காலை மகா சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. மாலையில் தேவதா பிரதிஷ்டை நடைபெற்றது. நேற்று மாலை வாஸ்து சாந்தி ஹோமம், அங்கு ரார்பணம், வேத திவ்ய பிரபந்தம் தொடக்கம், அக்னி பந்தனம், மகா சாந்தி ஹோமம், முதல் கால யாகசாலை நடைபெற்றது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடை பெற்றது. பின்னர் யாக சாலையில் வைக்க ப்பட்டுள்ள புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலமாக புறப்பட்டது. தொடர்ந்து "ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்" என்ற பக்தி முழக்க த்துடன் புனித நீர் கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரபந்த சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தி யுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சீதா ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×