என் மலர்tooltip icon

    கடலூர்

    • 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருந்த னர்.
    • போலீசார் அங்கு விரைந்து சென்று கருப்பு கொடிகளை அகற்றினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் பெரிய நற்குணம், ஆதனூர். வீர முடியா நத்தம் உள்ளிட்ட கிரா மங்களில் 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருந்த னர். இதுகுறித்து சேத்தியாத் தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று கருப்பு கொடிகளை அகற்றினர்.

    • போலீசார் சி.சி.டி.வி காட்சி மூலம் விசாரணை
    • கடையின் மேற்கூரை பெயர்ந்து கிடந்தது

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அறியநாற்றி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி அனிதா (வயது 25). இவர் வேப்பூர் அடுத்த கூட்டுரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் வேலை முடிந்து இரவு அனிதா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து நேற்று காலை அனிதா தனது கடைக்கு சென்றார். கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் மேற்கூரை பெயர்ந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனிதா கடையில் சோதனை செய்தபோது 25 விலையுயர்ந்த செல்போன், 2 லட்சம் ரொக்க பணம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து இன்று காலை அனிதா வேப்பூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு நடந்த கடைக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகள் மூலம் செல்போன் கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    • பீகாரை சேர்ந்த சோட்டாவை பிடிக்க தனிப்படை விரைந்தது
    • தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவரது மகனான இளையராஜா. தி.மு.க பிரமுகர். கடந்த 8-ந்தேதி இவர் மணவாளநல்லூர் அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கி யால் சுட்டது. துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த இளையராஜா தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து விருத்தா சலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் உத்தர வின் பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமையிலான தனிப்ப டை போலீசார் மண வாளநல்லூர் ஆடலரசு, புகழேந்தி, சரவணன், வெங்கடேசன், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த விஜயகுமார், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சூர்யா, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அருண்குமார் மற்றும் வெங்கடா ம்பேட்டையை சேர்ந்த சதீஸ்வரன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். கைது செய்யப்படட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கி கள், 2 இரும்பு ராடுகள், 1 கத்தி, 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து போலீ சார் பிடிபட்டவர்களை கோர்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசாரின் விசாரணை யில் இளையராஜாவின் அண்ணன் நீதிராஜன் மண வாள நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஆடலரசு வின் தாய் மங்கையர்கரசி தேர்தலில் போட்டியிட்டார் அப்போது இளையராஜா தரப்பினருக்கும் ஆடலரசு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோத தகராறில் பழிதீர்க்கும் விதமாக ஆடலரசு சென்னையில் தனியார் உணவு டெலிவரி வேலை செய்யும் பாளை யங்கோட்டை நண்பரான விஜயகுமாரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி விஜயகுமார் சென்னையில் முகமது யூனிஸ் என்பவர் மூலம் பீகாரில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கு 2 துப்பாக்கி கள் மற்றும் 3 புல்லட்டுகளை கடந்த 2 மாதத்திற்கு முன்பு வாங்கி கொடுத்தது தெரிய வந்தது. இதன்மூலம் திட்ட மிட்டபடி ஆடலரசு தரப்பி னர் இளையராஜாவை கொலை செய்ய முயற்சி மேற்கொண்டனர்.

    இவர்களுக்கு துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்த சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த அபுபக்கர் மகன் முகமது யூனிசை தனிப்படை போலீசார் சென்னையில் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட முகமது யூனிசை போலீசார் விருத்தாசலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி னர். இதில் முகமது யூனிஸ் பீகார் மாநிலம் சோட்டா என்பவரிடமிருந்து இந்த துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சோட்டா என்பவரை பிடிக்க பீகார் மாநிலத்திற்கு விரைந் துள்ளனர். பிடிபட்ட முகமது யூனிசிடம் போலீ சார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்கு வரத்தை ஒழுங்கு படுத்துதல் முறையாக கடை பிடிக்க வேண்டும்.
    • ஒலி பெருக்கி உரிமம் அனுமதி பெற வேண்டும்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வின்போது, பொது அமைதி, பொது பாதுகாப்பு, போக்கு வரத்தை ஒழுங்கு படுத்துதல் முறையாக கடை பிடிக்க வேண்டும். விநா யகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஒரு அமைப் பாளரும் பரிந்துரைக்கப் பட்ட படிவத்தில் முறையே வருவாய் கோட்டாட்சியர், துணை கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சிலை நிறுவும் இடத்தின் நில உரிமையாளரின் சம்மத கடிதம், சிலை நிறுவும் இடம் பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைகள் அல்லது சம்பந்தப்பட்ட துறையிடம் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும்.

    ஒலி பெருக்கி பயன் படுத்தும் உரிமமானது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அலுவலரிடமிருந்து ஒலி பெருக்கி உரிமம் அனுமதி பெற வேண்டும். ஒலி பெருக்கியினை பயன் படுத்தும்போது ஒலியின் அளவு பரிந்துரைக்கப்பட்ட டெசிபல் அளவு வரம்பினை மிகாமல் பயன்படுத்த வேண்டும். சிலை அமைப்பா ளர்கள் தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டு மானத்திற்கு பயன்படுத்து வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தற்காலிக கட்ட மைப்புக்கள் பந்தல்களில் எளிதில் உள்ளே நுழையவும், வெளியேறும் வழிகளை அமைத்தல் மிக அவசியம். தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளிடமிருந்து தடை யில்லா சான்று பெற்று சிலையை நிறுவ வேண்டும். மின்சாரம் வழங்குவதற்கான ஆதாரத்தைக் குறிக்கும் கடிதம் மற்றும் மின்சாரம் தற்காலிகமாக வழங்கப்பட்ட தற்கான ஆதாரம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் பஸ் கண்டக்டர் கடத்தியதாக புகார்
    • வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    புதுவை மாநிலம் கரிக்க லாம்பாக்கம் பெருங்க ளூர் கிராமத்தை சேர்ந்த வர் மாரிமுத்து மகள் வேதஸ்ரீ (வயது 19). இவர் லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பண்ருட்டி அடுத்த புலவனூர் கிராமத்தில் உள்ள உறவினரான மணி கண்டன் (34) என்பவரது வீட்டிற்கு வந்தார். சில நாட்கள் இங்கேய தங்கி ருந்த வேதஸ்ரீ, நேற்று முன்தி னம் இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கல்லூரி மாணவியை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து மணிகண்டன் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் வேதஸ்ரீயை தேடினர். இதில் வேத ஸ்ரீக்கும் தனியார் பஸ் கண்டக்டருக்கும் பழக்கம் இருந்ததாக தெரிந்தது. மேலும், புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பஸ் கண்டக்டர் அஜித், தனது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார் என மணி கண்டனிடம் கூறினர். இதையடுத்து தனது வீட்டில் தங்கியிருந்த மாணவி வேதஸ்ரீயை தனியார் பஸ் கண்டக்டர் கடத்தி சென்று விட்டதாக பண்ருட்டி போலீசாரிடம் மணிகண்டன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி வேதஸ்ரீயை தேடி வருகின்றனர்.

    • பா.ஜ.க. நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர்.
    • முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீரென்று புதுப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது. பா.ஜ.க. கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் வினோத், சுரேஷ், பிச்சைப்பிள்ளை, மேகநாதன், மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன், ஸ்ரீதர், பிரபு மற்றும் நிர்வாகிகள் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரண்டனர்.

    பின்னர் பா.ஜ.க. நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை. ஆகையால் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    இதையடுத்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நின்று கோஷம் எழுப்பி விட்டு செல்கிறோம் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். அதற்கும் போலீசார் அனுமதி அளிக்காததால் ஒரு சில பா.ஜ.க.வினர் தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் எதிராக கண்டனம் கோஷம் எழுப்பினர்.

    போலீசார் அனுமதி வழங்கவிட்டாலும் எங்கள் முற்றுகை போராட்டம் தொடரும் என கூறிக்கொண்டு இந்து சமய அறநிலைத்துறை அலுவலகம் முன்பு அவசர அவசரமாக சென்று தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த போலீசார் பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தினர். இதில் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.

    மேலும், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீரென்று புதுப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக அங்கிருந்த போலீசார் பா.ஜ.க. நிர்வாகிகள் 100 பேரை கைது செய்தனர். அருகிலிருந்த தனியார் மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். பா.ஜ.க.வினரின் போராட்டத்தில் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • தி.மு.க. மாநாடு போல இந்த சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது
    • நரேந்திர மோடி, மணிப்பூர் மக்களை பற்றி கவலைப் படாமல் உள்ளார்.

    கடலூர்:

    நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மகன் திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;-

    நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் மகன் திருமண விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. தி.மு.க. மாநாடு போல இந்த சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக நெய்வேலி தொகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியா என்ற பெயரை கேட்டாலே பயந்து பீதியடைகின்றனர். இதனால் பாரத் என்ற பெயரை பா.ஜ.க. தூக்கிப்பிடிக்கிறது. ஜீ 20 மாநாட்டை நடத்துவதில் ஆர்வம் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் மக்களை பற்றி கவலைப் படாமல் உள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி, இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யவேண்டும். தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. பல்வேறு அணிகளாக சிதைந்து கிடக்கிறது. இதில் பல அணிகள் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    • செந்தில்நாதன் அதே பேப்பர் ஸ்டோரில் வேலை செய்து வந்த ராமச்சந்திரன் என்பவரின் செல்போனை திடீரென்று வாங்கி சோதனை செய்தார்.
    • கடந்த 2021 முதல் தற்போது வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதை கண்டறிந்தார்.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலத்தில் தனியார் பேப்பர் ஸ்டோர் உள்ளது. இதன் உரிமையாளர் செந்தில்நாதன் என்பவர், அதே பேப்பர் ஸ்டோரில் வேலை செய்து வந்த ராமச்சந்திரன் (வயது 41) என்பவரின் செல்போனை திடீரென்று வாங்கி சோதனை செய்தார். அதில் பேப்பர் ஸ்டோருக்கு திருமண அழைப்பிதழ் அச்சிட வரும் வாடிக்கையாளர்களிடம் தனது ஜிபே எண்ணை கொடுத்துள்ளார். அதன் மூலம் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளார்.

    கடந்த 2021 முதல் தற்போது வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதை கண்டறிந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் செந்தில்நாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பேரில் கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபாவளி சீட்டு பணம் கட்டியதற்குண்டான பொருட்களை வனிதா வழங்கவில்லை.
    • ரம்யாவை ரூபன் மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் வனிதா. இவரிடம் கடலூர் சொத்திக்குப்பத்தை சேர்ந்த ரம்யா, ராணி ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். தீபாவளி சீட்டு பணம் கட்டியதற்குண்டான பொருட்களை வனிதா வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரம்யா, ராணி ஆகியோர், தங்கள் கட்டிய பணத்தை வனிதாவிடம் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று ரம்யா, ராணி ஆகியோர் பணத்தைக் கேட்டு வனிதாவிடம் மீண்டும் சென்றனர். அப்போது 2 பேரையும் வனிதா, ரூபன் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், ரம்யாவை ரூபன் மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரம்யா, ராணி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வனிதா, ரூபன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக விளங்க வேண்டும் என்று சொல்வேன்.
    • இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராசேந்திரனின் இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி காணொலிக் காட்சி வாயிலாக ஆற்றிய உரை வருமாறு:-

    தனது தொகுதிக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில், சபா. ராசேந்திரன் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இது என்னை விட நெய்வேலி தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, நெல்லிக்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட மலட்டாறு திட்டத்தை நிறைவேற்ற வைத்தார். இதனால், அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    பொதுவாக, திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போது, என்னோட பேச்சின் இறுதியில், நான் ரெண்டு கோரிக்கைகள் வைப்பேன். மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்கிற முதல் கோரிக்கை.

    ராசேந்திரன் இல்லத் திருமண விழாவிலே நான் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். கண்டிப்பாக தமிழில் தான் பெயர் வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

    அதேபோல, இன்னொரு கோரிக்கை என்னவென்றால், மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக விளங்க வேண்டும் என்று சொல்வேன். நம்முடைய வீடு மட்டும் அல்ல, நாடும் நன்றாக இருக்க வேண்டும். அதற்காகவும் பங்களிக்க வேண்டும் என்று சொல்வேன்.

    நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், 2024 பாராளுமன்றத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்.

    ஆகவே, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் இருக்கிற 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும். அப்படி முழு வெற்றியை பெற்றால்தான் அடுத்து அமையப்போகிற ஒன்றிய ஆட்சியிலும் நாம் முக்கியப் பங்காற்ற முடியும்.

    நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க இந்தத் திருமண விழாவில் உறுதி எடுத்துக் கொண்டு, "நாற்பதும் நமதே நாடும் நமதே" என்ற முழக்கத்துடன் விடைபெறுகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • படுகாயம் அடைந்த இளையராஜா தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • திட்டமிட்டபடி ஆடலரசு தரப்பினர் இளைய ராஜாவை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவரது மகனான இளையராஜா. தி.மு.க பிரமுகர். நேற்று முன்தினம் மாலை இவர் மணவாளநல்லூர் அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கியால் சுட்டது. துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த இளையராஜா தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்ப ட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் உத்தரவின் பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமை யிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் தே.கோபுராபுரம் அருகே பதுங்கி இருந்த மணவா ளநல்லூரை ஆடலரசு, புகழேந்தி, சரவணன், வெங்கடேசன், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த விஜயகுமார், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சூர்யா, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அருண்குமார் மற்றும் வெங்கடா ம்பேட்டையை சேர்ந்த சதீஸ்வரன் ஆகிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்படட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், 2 இரும்பு ராடுகள், 1 கத்தி, 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணைக்கு பின் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்ப ட்டவர்கள் பின்னர் கோ ர்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    இதுகுறித்து விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கூறிய தாவது:- இளையராஜாவின் அண்ணன் நீதிராஜன் மணவாள நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்த லின்போது ஆடலரசு வின் தாய் மங்கையர்கரசி தேர்தலில் போட்டியிட்டார் அப்போது இளையராஜா தரப்பினருக்கும் ஆடலரசு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இளையராஜா ஆடலரசுவை தாக்கி உள்ளார். இந்த தாக்குதல் அடிக்கடி நடந்துள்ளது. இந்த விளைவின் காரணமாக ஆடலரசு சென்னையில் உணவு டெலிவரி வேலை செய்யும் பாளைய ங்கோட்டை நண்பரான விஜயகுமாரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி விஜயகுமார் சென்னையில் சலீம் என்பவர் மூலம் பீகாரில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கு 2 துப்பாக்கிகள் மற்றும் 3 புல்லட்டுகளை கடந்த 2 மாதத்திற்கு முன்பு வாங்கியு ள்ளார். திட்டமிட்டபடி ஆடலரசு தரப்பினர் இளைய ராஜாவை துப்பா க்கியால் சுட்டுள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்த சென்னையை சேர்ந்த சலீமை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சென்னை விரைந்து ள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

    • காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடை பெற்றது
    • மாலையில் சீதா ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த டி.குமராபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற 41 அடி காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்க ப்பட்டு இன்று (ஞாயிற்று க்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி காலை மகா சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. மாலையில் தேவதா பிரதிஷ்டை நடைபெற்றது. நேற்று மாலை வாஸ்து சாந்தி ஹோமம், அங்கு ரார்பணம், வேத திவ்ய பிரபந்தம் தொடக்கம், அக்னி பந்தனம், மகா சாந்தி ஹோமம், முதல் கால யாகசாலை நடைபெற்றது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடை பெற்றது. பின்னர் யாக சாலையில் வைக்க ப்பட்டுள்ள புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலமாக புறப்பட்டது. தொடர்ந்து "ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்" என்ற பக்தி முழக்க த்துடன் புனித நீர் கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரபந்த சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தி யுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சீதா ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×