என் மலர்tooltip icon

    கடலூர்

    • சுவிட்சை தொட்ட பொழுது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து ள்ளார்.
    • வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தார்.

    கடலூர்:

    வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதுஅடுத்த 24 மணிநேரத்தில், மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்தது .கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், லால்பேட்டை, வேப்பூர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    பலத்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் கடும் வெயிலும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு ெபாதுமக்கள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    வானமாதேவி - 32.0, குப்பநத்தம் - 31.0,குறிஞ்சிப்பாடி - 30, வடக்குத்து - 30,அண்ணாமலைநகர் - 26.4,விருத்தாசலம் - 26.0, பரங்கிப்பேட்டை - 22.8, கடலூர் - 21,கொத்தவாச்சேரி - 21, பண்ருட்டி - 20, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 18, கலெக்டர் அலுவலகம் - 17.2, லக்கூர் - 15.4,. காட்டுமயிலூர் - 15,காட்டுமன்னார்கோவில் - 14.3, புவனகிரி - 14, மீ-மாத்தூர் - 14, சிதம்பரம் - 11, வேப்பூர் - 10,தொழுதூர் - 8.5, சேத்தியாதோப்பு - 8, லால்பேட்டை - 8, பெல்லாந்துறை - 6.2,கீழ்செருவாய் - 4. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 423.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதுஅடுத்த 24 மணிநேரத்தில், மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்தது .கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், லால்பேட்டை, வேப்பூர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    பலத்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் கடும் வெயிலும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு ெபாதுமக்கள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    வானமாதேவி - 32.0, குப்பநத்தம் - 31.0,குறிஞ்சிப்பாடி - 30, வடக்குத்து - 30,அண்ணாமலைநகர் - 26.4,விருத்தாசலம் - 26.0, பரங்கிப்பேட்டை - 22.8, கடலூர் - 21,கொத்தவாச்சேரி - 21, பண்ருட்டி - 20, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 18, கலெக்டர் அலுவலகம் - 17.2, லக்கூர் - 15.4,. காட்டுமயிலூர் - 15,காட்டுமன்னார்கோவில் - 14.3, புவனகிரி - 14, மீ-மாத்தூர் - 14, சிதம்பரம் - 11, வேப்பூர் - 10,தொழுதூர் - 8.5, சேத்தியாதோப்பு - 8, லால்பேட்டை - 8, பெல்லாந்துறை - 6.2,கீழ்செருவாய் - 4.

    கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 423.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை சின்னதுரை புகார் கொடுத்தார்.
    • குமரகுரு என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறியுள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது24) பி.காம் பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் பிற்பகல்3.30 மணிக்கு பண்ருட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். இரவு வரை வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை சின்னதுரை புகார் கொடுத்தார். புகாரில் குமரகுரு (28) என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறியுள்ளனர். இது குறித்துபண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.

    • சரியாக சமைக்க தெரியாதா என கேட்டு திட்டியுள்ளார்.
    • குமரவேலை கீழே தள்ளி கட்டையால் தாக்கியுள்ளார்.

    கடலூர்:

    சேத்தியாதோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 55). இவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மதுப்பிரியரான குமரவேல், குடித்துவிட்டு வீட்டில் உணவருந்தினார். அப்போது மருமகள் நிஷாவிடம் மீன் குழம்பு நன்றாக இல்லை, இதைக் கூட சரியாக சமைக்க தெரியாதா என கேட்டு திட்டியுள்ளார். இதனை தனது கணவர் வந்தவுடன் நிஷா (21) நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயகணேஷ் (24) தனது தந்தை குமரவேலை கீழே தள்ளி கட்டையால் தாக்கியுள்ளார்.

    இதில் பலத்தகாயம் அடைந்த குமரவேல், சிதம்பரம்  அரசு மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டார். மேல் சிகிச்சை க்காக தஞ்சாவூர் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமாரவேலுவின் மனைவி சித்ரா (50), சேத்தியாதோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜெய்கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

    • கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    • பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ.கே. பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். விவசாயி. இவருக்கும் அழகியநத்தத்தை சேர்ந்த காந்தி பிரியாவிற்கும் திருமணமாகி தஸ்விக் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. காந்தி பிரியா தனது தாய் வீடான அழகியநத்தத்தில் தனது குழந்தையுடன் தங்கி இருந்தார்.

    நேற்று கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் காந்தி பிரியா தனது குழந்தை தஸ்விக்ராஜை வீட்டுக்கு கொண்டு வந்தார். நேற்று இரவு திடீரென்று குழந்தைக்கு வயிறு உப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திபிரியா தனது உறவினர்களுடன் குழந்தை தஸ்விக்ராஜை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர். நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்3 மாத ஆண் குழந்தை திடீரென்று இறந்தது அந்த கிராமத்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காடாம்புலியூர் போலீசார் விசாரணை
    • உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் சாலை ஓரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக பண்ருட்டிக்கு வந்தார்? எவ்வாறு காயம் ஏற்பட்டது? என்பது குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கர்குமார் பேர்பெரியான் குப்பம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
    • எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த செடுத்தான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சங்கர்குமார் (வயது 17). இவர் பேர்பெரியான் குப்பம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலப்பகுதிக்கு சென்றுள்ளார்.

    பின்னர் அங்கிருந்து பள்ளிக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவன் சங்கர்குமாரை பத்திரமாக மீட்டனர்.

    • பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் அருண்தம்புராஜ் வேண்டுகோள்
    • அலங்கார ஆடைகள் மட்டுமே பய ன்படுத்த ப்படவேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழா வினை கொண்டாடு ம்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.

    இதில் களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்ப ட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்த ப்படலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்க ப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ண ப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த மக்கக் கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ண ப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பய ன்படுத்த ப்படவேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.உப்பனாறு ,தேவனா ம்பட்டினம் கடற்கரை,கொள்ளிடம் ஆறு மற்றும்வெள்ளாறு விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டா டும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பஸ் நிலையத்தில் திடீரென வாகன சோதனை நடத்தினர்.
    • சரியாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக கடலூர், விருத்தாசலம் செல்லும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதை தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா மற்றும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் பஸ் நிலையத்தில் திடீரென வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்களில் ஏறி கட்டண சீட்டுகளைப் பெற்று அவை சரியாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதிக கட்டணம் வசூலித்த பஸ்சுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறுகையில் அனைத்து பஸ் கண்டக்டர்களும் சரியான பயணச்சீட்டையே பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    • மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 19 மனுக்களும், இதர மனுக்கள் 225 ஆக மொத்தம் 622 மனுக்கள் பெறப்பட்டன.
    • ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர், செப்.12-

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவல ர்களுடன் மாவட்ட கலெ க்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவி த்தொகை, மாற்றுதிறனாளி கள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

    நேற்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 142 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 44 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 59 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 63 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 38 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 32 மனுக்களும், மாற்றுத்தி றனாளி நல அலுவலகம் தொடர்பாக 19 மனுக்களும், இதர மனுக்கள் 225 ஆக மொத்தம் 622 மனுக்கள் பெறப்பட்டன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதா ரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவி த்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடி ப்படை வசதிகள் குறி த்தான மனு க்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறை களுக்கு உட்பட்டு விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகரன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிதம்பரம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து நகைக்கடை உரிமையாளர் மனைவி பலியானார்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழரதவீதி பகுதியை சேர்ந்தவர் மங்கேஷ்குமார். இவரது மனைவி சுபாங்கி (வயது 42). மங்கேஷ்குமார் கீழரத வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சுபாங்கியின் தம்பி நாம்தேவ் கடந்த சில நாட்களாக தனது அக்காள் சுபாங்கிக்கு கார் ஓட்டும் பயிற்சி அளித்து வருகிறார். வழக்கம்போல் இன்று காலையில் சுபாங்கிக்கு நாம்தேவ் கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து வந்தார்.

    இந்த கார் சிதம்பரத்தில் இருந்து தெற்கு பிச்சாவரம் சாலையில் சென்றது. அப்போது சுபாங்கி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் இருந்த வடிகால் ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கார் ஆற்றில் வேகமாக பாய்ந்ததால் காரில் இருந்த சுபாங்கி, அவரது தம்பி நாம்தேவ் ஆகியோர் செவ்வதறியாது திகைத்தனர். பின்னர் நீரில் கார் மூழ்கியது. காரில் இருந்து தம்பி நாம்தேவ் மட்டும் போராடி வெளியே வந்து விட்டார். ஆனால் சுபாங்கியால் காரை விட்டு வெளியேவர முடியவில்லை. நாம்தேவ் காருக்குள் மாட்டிக்கொண்ட அக்காளை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் மீட்க முடியவில்லை. அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களின் உதவியுடன் நாம்தேவ் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் உடனடியாக தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய காரை போராடி மீட்டனர்.

    நீரில் மூழ்கி நீண்ட நேரம் ஆனதால் காருக்குள் இறந்த நிலையில் சுபாங்கி கிடந்தார். இதனையடுத்து அண்ணாமலைநகர் போலீசார் காரினுள் இறந்து கிடந்த சுபாங்கி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுபாங்கிக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • அறக்கட்டளை ஒன்றை விருத்தாசலத்தில் நடத்தி வருகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஹவுசிங்போர்டை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் மணவாளநல்லூரை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.தியாகராஜன் மகனும், தி.மு.க பிரமுகருமான இளையராஜாவை கடந்த 8-ந்தேதி 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றனர். அவர்களை விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    இந்த கொலை முயற்சி வழக்கில் புகழேந்தியும் உள்ளார். புகழேந்தி இந்த வழக்கில் முக்கிய குற்றவாலியான ஆடலரசு தம்பி ஆவார். இவர் அறக்கட்டளை ஒன்றை விருத்தாசலத்தில் நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளைக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி புகழேந்தி வீட்டின் முன்புறம் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று புகழேந்தி வீட்டிற்கு வந்தது. அப்போது அந்த கும்பல் வீட்டின் முன்பு இருந்த ஆம்புலன்சை கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இன்று காலை வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×