என் மலர்
கடலூர்
- போலீசார் அந்த லாரியை சோதனை செய்ய டிரைவரிடம் லாரியின் பின்பக்க கதவை திறக்க உத்தரவிட்டார்.
- கடத்தல் பிரிவு அதிகாரிகள் இன்று காலை கடலூரில் இருந்து திட்டக்குடிக்கு சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரவு திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமை யிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக விருத்தாசல த்திலிருந்து தொழுதூர் நோக்கி மினி லாரி ஒன்று வந்தது. அந்த மினி லாரியை மடக்கிய போலீசார் அந்த லாரியை சோதனை செய்ய டிரைவரிடம் லாரியின் பின்பக்க கதவை திறக்க உத்தரவிட்டார். உடனே மினி லாரி டிரைவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். இதை பார்த்த போலீசார் டிரைவரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி லாரியின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து பார்த்தபோது லாரியில் மூட்டை மூட்டைாயக ரேஷன் அரிசி இருந்தது. சுமார் 50 கிலோ எடை கொண்ட 25 ரேஷன் அரிசி மூட்டைகளிலிருந்த 1.5டன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த சம்பவம் பற்றி திட்டக்குடி போலீசார் கடலூர் உணவு பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உணவு பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் இன்று காலை கடலூரில் இருந்து திட்டக்குடிக்கு சென்றனர் . அவர்களிடம் திட்டக்குடி போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை ஒப்படைத்தனர். இதனையடுத்து உணவு பொருள் கடத்தல் பிரிவினர் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்தி வந்து போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் கடந்த 6 மாதத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை.
- தமிழகத்தில் தற்போது பால், நெய் விலையை அரசு 5-வது முறையாக உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
கடலூர்:
கடலூர் பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார். முன்னதாக கடலூர் அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மாட்டோம் என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என தெரிவித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியதாகும். இறையாண்மைக்கு எதிரான செயலாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
கர்நாடகா அரசு யாரையும் மதிக்கவில்லை. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் 2 முறை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 6 மாதத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. மேலும் தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு 2 லட்சம் ஏக்கர் கருகி வருகின்றது. தண்ணீர் இல்லாத விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கர்நாடகா அரசுக்கு உடனடியாக அழுத்தம் தர வேண்டும். மேலும் காவிரி தண்ணீர் கர்நாடகாவில் உள்ளதால் தண்ணீர் தரமாட்டோம் என கர்நாடகா அரசு கூறியுள்ள நிலையில் தமிழகத்தில் கூடங்குளம், கல்பாக்கம், நெய்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை நாங்கள் தரமாட்டோம் என கூறினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பதனை தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது பால், நெய் விலையை அரசு 5-வது முறையாக உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம். நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றது. இதனை முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி.யில் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கூடுதல் விலையில் நிலம் கையகப்படுத்த வேண்டும் என தொடர்ந்து பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றோம். தற்போது தமிழகத்தில் காற்றாலை, சூரிய ஒளி மூலமாக 36,000 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகின்றது. ஆனால் என்.எல்.சி. மூலமாக 800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி நடைபெற்று வருகின்றது. பசுமையாக வளர்ந்து வரும் நிலத்தை அழித்து மின்சாரம் பிற மாநிலத்திற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழக அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடுகிறார்கள். ஆனால் விளைநிலத்தை நாசப்படுத்தும் வகையில் தற்போது 3-வது சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த போவதாக தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வருகின்றது. மேலும் என்.எல்.சி. நிர்வாகம் 65 ஆயிரம் ஏக்கர் நிலத்தை குத்தகையாக பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் விவசாயத்தை பாதுகாக்க குத்தகையை ரத்து செய்து அரசு அக்கறையுடன் இருக்க வேண்டும். மேலும் என்.எல்.சி. 3வது சுரங்கத்திற்கு 3700 கோடி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் 26 கிராமத்தில் இருந்து நிலம் கையகபடுத்த உள்ளனர். இதில் 9 கிராமமான காவிரி, டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் நானும் டெல்டாக்காரன் என கூறுகிறார்.
சட்டமன்றத்தில் 100 சதவீதம் நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். ஆனால் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழக அரசு ஏன் செயல்படுகிறது? இது சம்பந்தமாக சரியான முறையில் எந்த தகவலும் தெரிவிக்க மாட்டார்கள். ஆகையால் பா.ம.க. என்றும் மண், மக்களை காப்பாற்ற வேண்டும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெல் உற்பத்தியில் 4-வது மாவட்டமாக இருந்து வருகின்றது. ஆனால் என்.எல்.சி. மூலமாக சொற்ப மின்சாரம் தயாரிப்பதற்காக என்.எல்.சி.க்கு தமிழக அரசு ஏன் ஆதரவாக உள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.
கடலூர் சிப்காட் பகுதியில் வசிக்கும் பெண்களின் தாய்ப்பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக தற்போது ஆய்வறிக்கையில் கூறப்பட்டு வருவது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இது மட்டும் இன்றி சைமா தொழிற்சாலை மூலமாக பரங்கிப்பேட்டை பகுதியில் 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாய கழிவுகளை பைப் மூலமாக கடலூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு அதனை சுத்திகரித்து கடலில் விடப்போவதாக தெரிய வருகிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
கடலூர் மாநகரத்தில் மருத்துவ கல்லூரி கண்டிப்பாக அமைக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஏரியை ரூபாய் 115 கோடி செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. ஆனால் சரியான முறையில் தூர்வாராமல் பெருமளவில் ஊழல் நடந்து வருகின்றது. இதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கொண்டு உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். மதுவிலக்கு குறித்து தமிழக அரசு பேச்சு மூச்சு இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என முதலமைச்சர் கூறியது என்ன நிலையில் உள்ளது.
இவ்வாறு கூறினார்.
- அனிதா பி.ஏ.முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- பண்ருட்டி போலீசில் அவரது தாய் அஞ்சலாட்சிபுகார் கொடுத்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் அடுத்த அன்னக்காரன் குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் அனிதா (23). இவர், பி.ஏ.முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்தவர் காணாமல் போனார். பல இடங்களில் தேடி யும் கிடைக்காததால். பண்ருட்டி போலீசில்வஅவரது தாய் அஞ்சலாட்சிபுகார் கொடுத்தார். புகாரில் பெத்தான்குப்பத்தை சேர்ந்த சிவமணியை (30) அனிதா காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவு ம்கூறியுள்ளார்.
- இந்திைய திணித்து வரும்மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
- இதன் காரணமாக கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
கடலூர்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். மக்களின் ஒற்றுமையை சீர் குைலப்பதை தடுக்க வேண்டும். இந்திைய திணித்து வரும்மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை கடலூர் அருகே உள்ள மேல்பட்டாம் பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.
பின்னர் மேல்பட்டாம்பாக்கம் இரட்டை ரோட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக திரண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர் மேல்பட்டாம்பாக்கம் காமராஜர் சிலை அருகே கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 160 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
- ஷாலினி பண்ருட்டியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.
- அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
கடலுார்:
பண்ருட்டி- கடலுார் சாலையை சேர்ந்தவர் முருகவேல். இவர் கோயம்புத்தூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (வயது 19). கோயம்புத்தூரில் பி.எஸ்.சி. ரேடியோலஜி படித்து வருகிறார். இந்நிலையில் ஷாலினி கடந்த ஒரு மாதமாக பண்ருட்டி யில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இரவு சாப்பிட்டுவிட்டு ஷாலினி தூங்க சென்றார். இன்று காலை எழுந்து பார்த்த போது ஷாலினியை காணவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ஷாலினியின் தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஷாலினியை தேடி வருகின்றனர்.
- துணிகள் மற்றும் ரொக்கம் 20 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக கூறப்படுகிறது.
- திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி சாவடி பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு வணிக நிறுவன ங்கள் உள்ளன. அதில் ஜவுளி கடைகள், ஹோட்டல்கள், செல்போன் சர்வீஸ் கடைகள் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்களும் உள்ளன.
இந்த நிலையில் ஈகிள் டெக்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஜவுளி கடையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட துணிகள் மற்றும் ரொக்கம் 20 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக கூறப்படுகிறது. அதேபோல அதன் அருகே உள்ள கணபதி செல்போன் சர்வீஸ் கடையில் பழுது நீக்கத்தி ற்காக வந்திருந்த விலை உயர்ந்த 3 செல்போன்களும், 500 ரூபாய் ரொக்கமும் திருடு போனது. இதே போல வேறு சில கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்தன. ஆனால் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவ னங்களின் உரிமையாளர்கள் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருப்பதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சேகரை தேடி வருகிறார்கள்.
கடலூர்:
பண்ருட்டி லிங்க் ரோட்டைசேர்ந்தவர் சேகர் (62) ஓய்வு பெற்ற கூட்டுறவு சார் பதிவாளர். இவர் கடந்த 29-ந் தேதி இரவு 10 மணி அளவில் வீட்டிலிருந்து திருப்பதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து சேகரின் மனைவி சந்திரிகா பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சேகரை தேடி வருகிறார்கள்.
- நாகராஜ் வீட்டிற்கு செல்லவில்லை.
- போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஜோடுகுளிகுண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது42) கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் கடலூர் ஆல்பேட்டை பெண்ணையாறு மேம்பாலம் பணிக்கு வந்தார். வேலை முடிந்து கடந்த மாதம் 29-ந் தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார். ஆனால் நாகராஜ் வீட்டிற்கு செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கோவிந்தம்மாள் கடலூர் புதுநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
- சுயமாக மருந்து, மாத்திரைகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
கடலூர்:
தமிழகத்தில் மழை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
புதுவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிர் இழந்து உள்ளனர். கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் உள்பட 6 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் சாரா செலின் பாலிடம் கேட்டபோது கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களை 24 மணி நேரமும் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லை.
தற்போது மழை காலம் என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வீட்டின் தோட்டத்தில் உள்ள டயர்கள் மற்றும் தேங்காய் ஓடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இதே போல் ஏ.சி. மற்றும் குளிர் சாதன பெட்டிகளில் தண்ணீர் இருந்தால் அவற்றை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவற்றில் தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும். 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி அதற்குரிய மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும்.
சுயமாக மருந்து, மாத்திரைகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
- கடலூர் ஜி.எச் மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக குழந்தையின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ.கே. பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். விவசாயியான இவருக்கும் அழகியநத்தத்தை சேர்ந்த காந்தி பிரியாவிற்கும் திருமணமாகி தஸ்விக் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது.
காந்தி பிரியா தனது தாய் வீடான அழகியநத்தத்தில் தனது குழந்தையுடன் தங்கி இருந்தார். நேற்று கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் காந்தி பிரியா தனது குழந்தை தஸ்விக்ராஜை வீட்டுக்கு கொண்டு வந்தார்.
நேற்று இரவு திடீரென்று குழந்தைக்கு வயிறு உப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திபிரியா தனது உறவினர்களுடன் குழந்தை தஸ்விக்ராஜை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர்.
நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், 3 மாத குழந்தை தஸ்விக் ராஜாவின் பெற்றோர் குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், " கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை இறக்கவில்லை.
கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று குழந்தைக்கு 2ம் கட்ட தடுப்பூசி போடப்பட்டது. வீட்டிற்கு சென்ற குழந்தைக்கு இரவு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அதற்கு இயற்கை மருந்து கொடுத்துள்ளனர். அதன்பிறகுதான் குழந்தை இறந்துள்ளது. இந்த குழந்தையுடன் 6 குழந்தைகளுக்கு ஒரே தடுப்பூசியில் இருந்து மருந்து செலுத்தப்பட்டது. அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள். இந்த குழந்தையும் தடுப்பூசி போடப்பட்டு அரை மணி நேரம் கவனிப்பில் வைக்கப்பட்டு நலமுடன் இருப்பதை அறிந்த பிறகே வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். அதனால், குழந்தை தடுப்பூசி குறைப்பாடால் இறக்கவில்லை.
குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய கடலூர் ஜி.எச் மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே உண்மையான காரணம் தெரியவரும்" என்றார்.
- இரவு நேரத்தில் கடைக்குள் மேற்கூரை வழியாக புகுந்து உள்ளே சென்றுள்ளனர்.
- 4 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் மர்ம நபர்கள் தொடர்ந்து தக்காளி திருட்டில் ஈடுபட்டு வந்தனர். தற்பொழுது திட்டக்குடியில் ராமநத்தம் - விருத்தாச்சலம் மாநில சாலையோரம் உள்ள பன்னீர் முட்டை கடையில் இரவு நேரத்தில் கடைக்குள் மேற்கூரை வழியாக புகுந்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் உள்ள 4 ஆயிரம் பணத்தை எடுப்பதும் மற்றும் பொருள்கள் எடுக்கும் காட்சிகள் அங்குள்ளசி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளதை வைத்து திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த சிறுவன், கோழியூரை சேர்ந்த சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
- பாவாடை சம்பவ இடத்திலேயே பலியானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாடை(48 )விவசாயி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆவட்டியில் இருந்து வெங்கனூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் போது ஆந்திராவில் இருந்து கேரளா நோக்கி சென்ற கார் இவரது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் 200 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு பாவாடை சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






