என் மலர்
கடலூர்
- இதற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.
- முடிவில் தொகுதி அமைப்பாளர் டாக்டர் கார்த்திக்கேயன் நன்றி கூறினார்.
கடலூர்:
கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பாக மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடை பெற்றது. இவ்விழாவில் வேளா ண்மை துறை அமைச்ச ரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரு மான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலந்து கொண்டு முட்டம் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கூடுதல் மருத்துவ உபகர ணங்களை வழங்கினார். இதற்கு மாவட்ட மருத்து வர் அணி அமைப்பாளர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர். ராமச் சந்திரன் வரவேற்றார். தொகுதி அமைப்பாளர்கள் டாக்டர்கள் கடலூர் கலைக் கோவன், சிவசெந்தில், கிருஷ்ணராஜ், வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர்கள் அவினாஷ், அருண், மாவட்டத் துணைத் தலைவர் செல்வம், வடி வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முட்டம், வடலூர், கடலூர் புதுப்பாளையம், புதுச்சத்திரம், புவனகிரி, கிருஷ்ணாபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு மருத்துவ உபகர ணங்கள் வழங்கப் பட்டது. முடிவில் தொகுதி அமைப்பாளர் டாக்டர் கார்த்திக்கேயன் நன்றி கூறினார்.
- இதில் அதிர்ச்சியடைந்த பூசாரி, இது குறித்து ஊர் பிரமுகர்களிடம் கூறினார்.
- உண்டியலில் ரூ.50 ஆயிரம் காணிக்கை பணம் இருக்கலாம் என புகாரில் கூறியுள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலை வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூட்டி விட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். நேற்று மாலை 4.30 மணி அளவில் கோவிலுக்கு வந்து பார்க்கும் போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கோயில் உன்டியலை காணவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த பூசாரி, இது குறித்து ஊர் பிரமுகர்களிடம் கூறினார். அவர்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதில் உண்டியலில் ரூ.50 ஆயிரம் காணிக்கை பணம் இருக்கலாம் என புகாரில் கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே கோயிலில் இதற்கு முன்னர் திருட முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. அதே நாளில் பொன்னியம்மன் கோவில் உண்டியலை உடைக்கவும் முயற்சி நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநத்தம் அருகே பனையாந்தூர் திரவுபதி அம்மன் கோவில், ஆலம்பாடி அய்யனார் கோவில் உண்டியல்கள் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வாகையூரில் உண்டியல் திருட்டு நடந்துள்ளது. ராமநத்தம் சுற்றுவட்டார பகுதி கோவில்களின் உண்டியலை திருடர்கள் குறி வைத்து கொள்ளை யடிக்கின்றனர். இவர்களை பிடிக்க முடியாமல் ராமநத்தம் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.
- தீனதயாளன் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியாளராக உள்ளார்.
- இந்நிலையில் தீனதயாளன் அம்மாவிற்கும், கவிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் தீனதயாளன். இவர் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி இவரது மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த மானூர் கிராமத்தை சேர்ந்த கவிதா (வயது 30) என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தீனதயாளன் அம்மாவிற்கும், கவிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனை தீனதயாளன் கேட்காததால், ஆத்திரமடைந்த கவிதா வீட்டின் அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த ஆபத்தான மரணக்குழியில் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.
- 3 பேரையும்மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .
கடலூர்:
பண்ருட்டி அடுத்த திருவதிகை செட்டி பட்டறை காலனியை சேர்ந்தவர் தமிழ் வளவன்(26).இவர்தனது மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு விவசாய வேலையாக பண்ருட்டிக்கு வந்தார். அதே பகுதியை சேர்ந்த அகிலன் (21), வீரவேல் (20)ஆகியோர் இவருடன் அதேமோட்டார் சைக்கிளில் வந்தனர் பண்ருட்டி-கடலூர் சாலை தண்டு பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்தஆபத்தான மரணக்குழியில்மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.
அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயத்துடன் சாலையோர கால்வாயில் விழுந்து கிடந்த தமிழ் வளவன்,அகிலன்,வீரவேல் ஆகிய 3 பேரையும்மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
- லெனின், இளைஞரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட் பட்ட முதுநகர் பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அருண்தம்பு ராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரி, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜய லட்சுமி செந்தில், பால சுந்தர், மாவட்ட பிரதிநிதி கள் துர்கா செந்தில், மஸ்கட் புகழேந்தி, பகுதி துணை செயலாளர்கள் வக்கீல் பாபு, லெனின், இளைஞரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.
- சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் பைபாஸ் சாலை வழியாக மினி பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது. அந்த பஸ்சின் முன்னால் மோட்டார் சைக்கிளிலில் தனியார் உணவு டெலிவரி வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது வாலிபர் மினி பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து மினி பஸ் டிரைவர், உணவு டெலிவரி வாலிபர் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பஸ் டிரைவர் ஏன் வழிவிடாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாய் என்று தனியார் உணவு டெலிவரி வாலிபரிடம் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் உடனே பஸ் டிரைவரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். மேலும் உணவு டெலிவரி வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.
இதை பார்த்த பஸ் நிலையத்தில் அருகில் இருந்தவர்கள் இவர்களை பிடித்து சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர். இந்நிலையில் இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை யிடும் காட்சியை அங்கிரு ந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்கலில் வெளி யிட்டனர். இந்த வைரலான வீடியோ காட்சி மூலம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொள்ள உத்தர விட்டார். உத்தரவின்பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மினி பஸ்சை ஓட்டி வந்தது சிதம்பரம் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 35) என்பதும், தனியார் உணவு டெலிவரி வாலிபர்கோவிந்தசாமி பகுதியை சேர்ந்த கணேஷ் (41) என்பதும் தெரிய வந்தது. பின்னர் இவர்களிடம் போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபட க்கூடாது என்றும், மேலும் இதுபோன்று பொது மக்களுக்கு இடையூராக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.
- சிவப்பு மற்றும் ரோஜா வண்ணப் பூக்களே அதிகமாக பயிரிடப்படுகிறது
- விவசாயிகள் ஈடுபடும் போது வரத்து அதிகரித்து விலை குறைவது இயல்பாகும்.
கடலூர்:
விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி பேரூராட்சியில் கண்ணைக் கவரும் விதத்தில் கோழிக்கொண்டைப் பூக்கள் காட்சியளிக்கிறது. பொதுவாக கோழிக்கொண்டைப் பூக்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ரோஜா வண்ணங்களில் பூக்கும். ஆனால் சிவப்பு மற்றும் ரோஜா வண்ணப் பூக்களே அதிகமாக பயிரிடப்படுகிறது. வாசமில்லாத மலர் என்றாலும் கண்ணைக் கவரும் இதன் அழகு மற்றும் 8 நாட்கள் வரை வாடாத தன்மை ஆகியவையே இந்த பூக்களை அதிகம் பயன்படுத்துவதற்குக் காரணமாகிறது.
இந்த கோழிக்கொ ண்டைப் பூக்களை மாலையில் வைத்துக் கட்டும் போது ரோஜாப்பூக்களின் தோற்றத்தைத் தருகிறது. இதனாலே இந்த பூக்களுக்கு எல்லா சீசனிலும் வரவேற்பு உள்ளது. பண்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரேவிதமான பயிர் சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபடும் போது வரத்து அதிகரித்து விலை குறைவது இயல்பாகும். இதனால் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இவை மழைக்காலம், கோடைக் காலம், குளிர் காலம் என எல்லா பருவங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.
- கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
கடலூர்:
வடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. பண்ருட்டி சாலை ெரயில்வே கேட் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் குறிஞ்சிப்பாடி வட்டச் செயலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இந்த போராட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்தி திணிப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் மறியல் செய்தனர். இதில் ராஜேந்திரன், சுப்பிரமணி, பன்னீர்செல்வம், ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். நெய்வேலி டி.எஸ்.பி.ராஜ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டுமானத்தில் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கடலூர்:
வடலூரில் நெய்வேலி உட்கோட்ட காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் நெய்வேலி டவுன்ஷிப் சாகுல்ஹமீத், தெர்மல் லதா, மந்தாரக்குப்பம் மலர்விழி, ஊமங்கலம் பிருந்தா, குறிஞ்சிப்பாடி வீரசேகரன், வடலூர் ராஜா, குள்ளஞ்சாவடி பாண்டிசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் உரிமையாளரின் அனுமதி பெற வேண்டும். அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறையில் அனுமதி பெற வேண்டும்.ஒலி பெருக்கி பயன்படுத்தினால் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். ஒலிபெருக்கி டெசிபல் அளவினை குறைத்து பயன்படுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டுமானத்தில் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். விழாவின் போது பொது அமைதி, பொது பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவோர் மற்றும் இந்து முன்னணியினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
- போலீசார் மூட்டைகளை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
- குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
கடலூர்:
திட்டக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை, போலீஸ்காரர்கள் முருகானந்தம், ராஜா, பவானி ஆகியோர் வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் முட்டைகளை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. 40 அரிசி முட்டைகளில் சுமார் 1080 கிலோ எடையுள்ள அரிசி இருந்தன.
இதேபோல் திட்டக்குடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதனை சோதனை செய்தபோது, ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. 13 அரிசி மூட்டைகளில் சுமார் 750 கிலோ ரேஷன் அரிசி இருந்தன. இதனை தொடர்ந்து 2மினி வேன் மற்றும் 1830 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 3 பேரை போலீசார் கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். வேப்பூர் கூட்ரோட்டில் பிடிபட்ட நபர்கள் திட்டக்குடி கோவிலூர் சேர்ந்த வீரமணி, ரவி,நெசலூர் சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் என தெரிய வந்தது. மேலும் திட்டக்குடி பகுதியில் அரிசி பறிமுதல் செய்யும்போது டிரைவர் தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3பேரை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
- அரையிறுதி போட்டியான பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டியான 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு செல்ல முடியும்.
- பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ராமதாஸ் முடிவு செய்வார்.
கடலூர்:
கடலூர் பாராளுமன்ற தொகுதி கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கடலூர் வன்னியர் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
பா.ம.க. கட்சி தொடங்கி 35 ஆண்டு காலம் ஆகிய நிலையில் எத்தனையோ போராட்டங்கள், மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். பா.ம.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பல்வேறு பிரச்சனைகளுக்கும், கொள்கை முடிவுகளுக்கும் தீர்வு கண்டு அதிகாரத்திற்கு வந்து செய்வதை விட அதிகாரம் வருவதற்கு முன்பே முதலமைச்சரை கையெழுத்து போட வைப்பது தான் சாதனை. அதை தான் பா.ம.க. செய்து வருகிறது.
வருகிற 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சிக்கு கண்டிப்பாக வரும். அதற்கு முன்னோட்டம் தான் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ஆகும். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றேன். அனைத்து தரப்பு மக்களும் அடுத்தடுத்து பா.ம.க. தான் ஆட்சிக்கு வரும் என்கிறார்கள்.
ஆகவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அரையிறுதி போட்டியான பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டியான 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு செல்ல முடியும். பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார். நீங்கள் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும். மேலும் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. மிகப்பெரிய வெற்றி பெற போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்த போது செல்போனை பறிமுதல் செய்தனர்.
- அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று விட்டதாக சிறை காவலர்களிடம் எண்ணூர் தனசேகரன் தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறை சாலை உள்ளது. இந்த சிறைசாலையில் 100-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த சிறைசாலையில் 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது அறையில் உதவி ஜெயிலர் மணிகண்டன் திடீரென சோதனை நடத்த சென்றார். அப்போது அவரை எண்ணூர் தனசேகரன் தாக்க முயன்றார்.
மேலும் ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் பாட்டில்களை வீசி கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்கிலும் எண்ணூர் தனசேகரனுக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்த போது செல்போனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதனால் எண்ணூர் தனசேகரனை சிறைக்காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 7-ந்தேதி தனசேகரன் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக சென்னை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மாலை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
அப்போது சிறைக்காவலர்கள் எண்ணூர் தனசேகரன் அறையை மீண்டும் சோதனை செய்தனர். சோதனையில் அவரது அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறைக்காவலர்கள் அந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று எண்ணூர் தனசேகரன் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று விட்டதாக சிறை காவலர்களிடம் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறைக் காவலர்கள் அவரை மீட்டு சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உண்மையிலேயே அதிக மாத்திரைகளை தின்றாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






