என் மலர்
நீங்கள் தேடியது "grandmother's house"
- திவ்யா கடலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணி செய்து வந்தார்.
- இது குறித்து ராஜலட்சுமி, கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடலூர்:
கடலூர் நத்தப்பட்டு அருகேயுள்ள டி.குமாரபுரத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி மகள் திவ்யா (வயது 24). இவர் செம்மண்டலத்தில் உள்ள தனது பெரியம்மாவின் வீட்டில் தங்கி, கடலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணி செய்து வந்தார். கடந்த 11-ந் தேதி காலை 6 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற திவ்யா வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ராஜலட்சுமி, கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், காணாமல் போன நர்சு திவ்யாவை தேடி வருகின்றனர்.
- விருத்தாசலம் அருகே பாட்டி வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணை காணவில்லை.
- இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே சாவடிகுப்பத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கீர்த்தனா(வயது19). இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 4-ந் தேதி மாலை தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு கீர்த்தனா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் பாட்டி வீட்டிற்கு செல்லவில்லை, அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கும் அவரை காணவில்லை. இதுகுறித்து கீர்த்தனாவின் தந்தை சுப்பிரமணி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி காணாமல் போன கீர்த்தனாவை தேடி வருகின்றனர்.






