என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மின்வாரிய ஊழியர் பலி
- சாத்திப்பட்டு அருகே வந்த போது எதிரில் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
நெய்வேலியை அடுத்த வடக்குவெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 48). மின்வாரிய பணியாளர். இவர் இவரது மகளான சுவேதாவை (18) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பண்ருட்டி நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது சாத்திப்பட்டு அருகே வந்த போது எதிரில் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தையும், மகளும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்தவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சங்கர் பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சுவேதாவை, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






