என் மலர்tooltip icon

    கடலூர்

    • சிதம்பரத்தில் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • எட்டுவிதமான வாகனங்களில் பிள்ளையார் வீதியுலா நடைபெற்றது.

    கடலூர்: சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள்கள் உற்சவம் கடந்த செப்.9-ப் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    தினந்தோறும் இரவு எட்டுவிதமான வாகனங்களில் பிள்ளையார் வீதியுலா நடைபெற்றது. 9-ம் நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை, விநாயகர் வீதி உலா நடைபெற்றது. பல்லக்கு உற்சவத்துடன் நாளை விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராமச்சந்திரன் தலைமையிலான பக்தர்கள் செய்திருந்தனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
    • பெரியவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட வண்ண வண்ண விநாயகர் சிலையை வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் பெரியவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட வண்ண வண்ண விநாயகர் சிலையை வாங்கி சென்றனர். மேலும் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட பூஜை பொருட்கள், பழ வகைகள், அவல்,பொறி, எருக்கம் பூ மாலை அருகம்புல் மாலை போன்றவற்றை ஆர்வமாக வாங்கி சென்றனர்.இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு விநாயகர் சிலையை கொண்டு சென்று அபிஷேகம் செய்து மற்றும் தீபாராதனை காண்பித்து கொழுக்கட்டை, நாவல் பழம் போன்றவற்றை படைத்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் 1300 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதி கோரினர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், தமிழக அரசின் விதிகளுக்கு உட்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினார்.அதன்படி, விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்த பல்வேறு பதிகளை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.மேலும், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடும் இடங்களில் விழா குழுவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து போலீசார் அனுமதியுடன் 3 அல்லது 5-ம் நாள் விநாயகர் சிலையை அரசு அனுமதி வழங்கிய இடத்தில் கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    • திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு கோவில் உண்டியலை ஓடையில் வீசி சென்ற கொள்ளையர்கள்.
    • ராமநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்க ள் திருடிச் சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலின் உண்டியல் கடந்த 16-ந்தேதி மர்மநபர்களால் திருடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல ராமநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்க ள் திருடிச் சென்றனர். இந்த கொள்ளை சம்ப வங்கள் குறித்து துப்பு கிடைக்காததால், கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் ராமநத்தம் போலீசார் திணறி வருகின்றனர்.

    வாகையூர் அருகேயுள்ள ஆக்கனூர் கிராமத்தில் ஓடை உள்ளது. இதனை சுற்றியுள்ள நிலங்களில் களை எடுக்க பெண்கள் சென்றனர். அப்போது ஓடை அருகே உடைந்த நிலையில் ஒரு உண்டியல் கிடந்தது. அருகில் சென்று பார்த்த போது உண்டியல் மீது வாகையூர் செல்லியம்மன் கோவில் உண்டியல் என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து வாகையூர் கிராம பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர். உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள், உண்டியலை ஆக்கனூர் ஓடை அருகே வீசி சென்றிருக்கலாம் என கிராம பிரமுகர்கள் அனுமானித்தனர். இதையடுத்து ஓடையில் இருந்த உண்டியலை மீட்டு கோவிலுக்கு கொண்டு வந்தனர். மேலும், இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    • விபத்தில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.
    • விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    சேலத்தில் இருந்து கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்பிற்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் இன்று அதிகாலை 5.30 மணியளவில் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் அருகே வந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையின் குறுக்கே போடப்பட்டுள்ள தடுப்பு கட்டை மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

    அதிகாலை நேரம் என்பதால் தூக்க கலக்கம் தெளிந்த பயணிகள் பஸ் மோதிய வேகத்தில் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

    இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட பஸ்சில் இருந்த 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திவ்யா கடலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணி செய்து வந்தார்.
    • இது குறித்து ராஜலட்சுமி, கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கடலூர்:

    கடலூர் நத்தப்பட்டு அருகேயுள்ள டி.குமாரபுரத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி மகள் திவ்யா (வயது 24). இவர் செம்மண்டலத்தில் உள்ள தனது பெரியம்மாவின் வீட்டில் தங்கி, கடலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணி செய்து வந்தார். கடந்த 11-ந் தேதி காலை 6 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற திவ்யா வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ராஜலட்சுமி, கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், காணாமல் போன நர்சு திவ்யாவை தேடி வருகின்றனர்.

    • சாத்திப்பட்டு அருகே வந்த போது எதிரில் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    நெய்வேலியை அடுத்த வடக்குவெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 48). மின்வாரிய பணியாளர். இவர் இவரது மகளான சுவேதாவை (18) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பண்ருட்டி நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது சாத்திப்பட்டு அருகே வந்த போது எதிரில் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தையும், மகளும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்தவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சங்கர் பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சுவேதாவை, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துப்பாக்கி தோட்டாக்கள் இருந்த இடத்தை மீண்டும் தோண்டி பார்த்தபோது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • தோட்டாக்கள் துருப்பிடித்து இருந்ததால் தடவியில் நிபுணர்கள் சோதனைக்கு அனுப்பப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆறு உள்ளது. இந்த தென்பெண்ணையாற்றின் குறுக்கே கும்ந்தாமேடு தரைப்பாலம் உள்ளது. இதன் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மேலும் மீனவர்கள் சிறிய படகுகள் மூலமாக வலைவிரித்து மீன் பிடித்தும் வருகின்றனர் . இந்த நிலையில் தற்போது ஆற்றில் குறைந்த அளவில் தண்ணீர் செல்வதால் நேற்று மாலை புதுச்சேரி மாநிலம் குமந்தாமேடு பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் மீன் பிடிக்க ஆற்றில் இறங்கினர். அப்போது சேற்று பகுதிகளில் கால் வைக்கும் போது சிறிய அளவிலான இரும்பு பொருட்கள் சிக்கின. அதனை எடுத்து பார்த்தபோது துப்பாக்கி தோட்டாக்கள் என்பது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அந்த தோட்டாக்களை எடுத்து கொண்டு ஆல்பேட்டை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் வழங்கினர். க்ஷ இத்தகவல் அறிந்த போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களிடம் இருந்த தோட்டாக்களை பார்வையிட்டனர். பின்னர் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்த இடத்தை மீண்டும் தோண்டி பார்த்தபோது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சிறிய முதல் பெரிய அளவுள்ள 169 தோட்டாக்கள் சிக்கியது . இதனை தொடர்ந்து கைப்பற்றிய தோட்டாக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பார்வையிட்டார். இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 169 துப்பாக்கி தோட்டாக்கள் துருப்பிடித்து இருந்ததால் தடவியில் நிபுணர்கள் சோதனைக்கு அனுப்பப்பட உள்ளது. அங்கு துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் குண்டு சோதனை செய்யும் நிபுணர்கள் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களை தீவிர ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் இந்த தோட்டாக்கள் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள்? எந்த ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பது தெரிய வரும் . கடந்தமாதம் தென்பெண்ணை ஆற்றில் துப்பாக்கி கைப்பற்றிய இடத்தில். தோட்டாக்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் அந்த இடத்தில் ஆயுதங்கள் உள்ளனவா? மேலும் துப்பாக்கிகள் தோட்டாக்கள் உள்ளதா? என்பதை சோதனை செய்ய உள்ளோம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தெரிவித்தார். இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் சோதனை செய்தபோது 8 தோட்டாக்கள் மீண்டும் கிடைத்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த தோட்டக்களையும் போலீசார் மீட்டு ஏற்கனவே கிடைத்த 169 தோட்டக்களுடன், 8 தோட்டாக்களை சேர்த்து அனுப்பப்பட உள்ளன. இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் இருந்த இடத்தை முழுவதுமாக தோண்டப்பட்டு மேலும் ஏதேனும் தோட்டாக்கள் , துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் உள்ளதா? என்பதனை சோதனை செய்ய உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடலூர் தென்பெண்ணை ஆற்றில் தோண்ட தோண்ட தோட்டாக்கள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் .
    • ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரதம் முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். கடலூர் துறைமுகத்தில் எப்போதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் . இந்த நிலையில் இன்று ஆவணி மாதம் கடைசி நாள் என்பதாலும், நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலை முதல் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.

    பின்னர் தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதில் பெரிய வகை பாறை மீன் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் ரூ.400 முதல் 450 வரையிலும், பெரிய வகை நெத்திலி கிலோ ரூ.200 கனவாய் வகை மீன் கிலோ ரூ.150-க்கும், பெரிய வகை இறால் கிலோ ரூ.500-க்கும், நண்டு ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, விளாம்பழம், பேரிக்காய், கம்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.
    • கடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கோலகலாமாக கொண்டா டப்பட உள்ளது. கடலூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பா திரிப்புலியூர் உழவர் சந்தை, முதுநகர், கூத்தப்பாக்கம் பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து சதுர்த்தி விழாவுக்கு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்தது. வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகருக்கு படையல் இடுவதற்காக வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, விளாம்பழம், பேரிக்காய், கம்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 100 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கதாகும்

    இதனை தொடர்ந்து பொரி, கடலை, சுண்டல் உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் கடைகளில் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பயன்படும் வகையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனையும் தீவிரமாக நடந்தது. கடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. சிலையின் அளவை யொட்டி விற்பனை செய்யப்பட்டது. வீட்டில் வைத்து வழிபட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளுடன் அலங்கார வண்ண குடைகளையும் சிலர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும், அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலைகள் விற்பனையும் நடந்தது. இதனை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். பூஜை பொருட்கள் வாங்கு வதற்காக கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பா திரிப்புலியூர், முதுநகர் கடை வீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • இந்து சமய அறநிலைதுறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். பிரார்த்தனை செய்தவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து சென்று வருகின்றனர்.

    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு உள்ள மலையில் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் இந்து சமய அறநிலைதுறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது.

    ஆவணி மாதம் முடிந்து நாளை புரட்டாசி மாதம் தொடங்குவதால் தேவநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவந்திபுரம் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. மேலும் திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.

    இந்நிலையில் கோவில் திருமண மண்டபத்தில் 76 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 25 திருமணங்கள் என 101 திருமணம் நடைபெற்றது இதனால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர். 

    • நல்ல தண்ணீர் பிடித்து வைக்கும் சிறு, சிறு பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும்.
    • குளிர்சாதனப் பெட்டிக ளின் பின்புறம் உள்ள டப்பாவில் தண்ணீர் சேர விடக்கூடாது.

    கடலூர்:

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொட ர்பாக கடலூர் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதா வது:- கடலூர் மாநகராட்சி நிர்வாகத்தால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஈடிஸ் கொசுக்கள் மழை தண்ணீர், நல்ல தண்ணீரில் மட்டுமே முட்டை இடும். இந்த ஈடிஸ் கொசுக்கள் கருப்பு வெள்ளை கலரில் இருக்கும். பொதுமக்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டி களை மூடி வைக்க வேண்டும். நல்ல தண்ணீர் பிடித்து வைக்கும் சிறு, சிறு பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும். மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் டேங்கு களை மூடி வைக்க வேண்டும். வீட்டில் பூந்தொட்டிகள் வைத்திரு ந்தால், அவைகளில் அதிக மாக தண்ணீர் ஊற்றி, தண்ணீர் தேங்கும் அளவுக்கு வைக்கக் கூடாது. படிக்கட்டுகளின் கீழ், மொட்டை மாடிகள் மற்றும் வீட்டின் அருகில் தேவையில்லாத பெயிண்ட் டப்பா, சிரட்டை, பிளாஸ்டிக் பாட்டில்கள், சாப்பாடு பார்சல் வாங்கி வந்த பிளாஸ்டிக் அட்டை பெட்டிகள், பழைய ஷூக்கள், உடைந்த ஹெல்மெட்டுகள் போன்ற உபயோகமற்ற அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்ப டுத்த வேண்டும்.

    வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிக ளின் பின்புறம் உள்ள டப்பாவில் தண்ணீர் சேர விடக்கூடாது. வீட்டின் பின்புறம் உள்ள பகுதி களில் ஆட்டு உர ல்களை போட்டு வைக்கக் கூடாது. மழை நீர் தேங்கும் வண்ணம் எந்த பொரு ளையும் போட்டு வைக்கக் கூடாது. குறிப்பாக வீட்டில் தூங்கும்போது கொசுக்கள் கடிக்காத வண்ணம் கொசு வலைகளை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு முழுக் கை சட்டை, முழுக் கால் பேண்ட் போட வேண்டும். மேலும், யாருக்கேனும் 2, 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் வந்தால், கண்டிப்பாக அரசு பொது மருத்து வமனைக்கு சென்று, டாக்டர் ஆலோச னைப்படி மருந்துகள் எடுத்து க்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • முன்னாள் உதவி ஆளுநர் சுதன் பவர் டெக் பூங்குன்றன் வாழ்த்துரை ஆற்றினார்.
    • இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கடலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் சுரேஷ்பாபு வரவேற்றார். மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்தை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் உதவி ஆளுநர் சுதன் பவர் டெக் பூங்குன்றன் வாழ்த்துரை ஆற்றினார்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்ட இயக்குனர் கார்த்திகேயன், சங்க செயலாளர் ஏர்டெல் ரவி, பொருளாளர் வேல்முருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். இதில் உறுப்பினர்கள் மதியழகன், சிவக்கொழுந்து, சிவகுருநாதன், ஞானமணி, மகேஷ், அருள், தினேஷ்குமார், விஜயன்பிள்ளை, கலைச்செல்வம், கல்கி ஸ்ரீதர், ஆனந்த்ராஜா, சிவானந்தம், கிருபாநிதி, சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜவான் பவன் சந்திப்பில் இருந்து முதல் டவுன்ஹால் வரை நடந்த இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    ×