என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும், கடலூர் கலெக்டர் வேண்டுேகாள்
  X

  பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும், கடலூர் கலெக்டர் வேண்டுேகாள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுேகாள் விடுத்துள்ளார்.
  • டெங்கு காய்ச்சல் என்பது ஏடீஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் ஆகும்.

  கடலூர்:

  கடலூர் மாவட்ட ககெ்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியினை முன்னிட்டு பல்வேறு வகையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் என்பது ஏடீஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் ஆகும். காய்ச்சல், தலைவலி ,கண்களை சுற்றி வலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, உடம்பில் சிவப்புநிற தடிப்புகள் ஆகிய அறிகுறிகள் இருந்தால் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம். இவைகள் பொதுவாக தானாகவே சரியாகிவிடும் என்றாலும் சில சமயங்களில் இளம் வயதினரையும் முதியோர்களையும் அதிக அளவில் தாக்கி இறப்பினை உண்டாக்கும் தன்மை உடையது.

  இந்நோயினை பரப்பும் கொசுக்கள் திறந்த வெளியில் தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உடைந்த மண்பானைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் பைகள், வாகன டயர்கள் போன்றவற்றில் மழை நீர் போன்றவை தேங்குவதாலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் நீர் கொள்கலன்கள், குளிர்சாதனப்பெட்டி, காற்றுக்குளிருட்டிகள், ஏ.சி. எந்திரங்கள் போன்ற தண்ணீர் சேகரணமாகும் அனைத்து விதமான கொள்கலன்களில் பெருமளவில் உற்பத்தியாகின்றன.இவ்வகையான கொசுக்கள் பொதுவாக பகல் நேரங்களில் மனிதனை கடிப்பதினால் தன் முழு உணவான ரத்தத்தினை உறிஞ்ச பல நபர்களை கடித்து அதிக நபர்களுக்கு இக்கிருமியை பரப்புகிறது. இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும். இதன் பொருட்டு பொது மக்கள் மழை நீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமாகவும், வீட்டு உபயோகப் பொருட்களில் நீர் சேகரம் ஆவதை தவிர்ப்பதின் மூலமும் நீர் கொள்கலன்களில் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர்த்துவதின் மூலமாகவும் இவ்வகையான கொசுக்களின் உற்பத்தியை பெரிதும் கட்டுப்படுத்தலாம். சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாகவும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

  பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் தன்னிச்சையாக மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் போலி மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான காய்ச்சல் பரிசோதனைகள் செய்து அதற்குண்டான அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டாம் .கொசு புழுக்கள் உற்பத்தி ஆகாமல் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும் படியும் குடிநீரை காய்ச்சி ஆறவைத்து குடிக்கும் படியும், 2அல்லது 3நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

  Next Story
  ×