என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்.
திட்டக்குடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ : போக்குவரத்து போலீசாரை நியமிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- இது தினமும் தொடர்கதையாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
- போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்ய வேண்டு
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி- விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் திட்டக்குடியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி வாகனங்கள், பள்ளி வாகனங்கள், இருச க்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், விவசா ய டிராக்டர்கள் என அதிக அளவில் வாகனங்கள் சாலையில் செல்வதால் சில நேரத்தில் அவசரத் தேவைக்கு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.
இது தினமும் தொடர்க தையாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. முதியவர்கள், பெண்கள், பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் சாலையோரம் செல்ல முடியாமல் ஆபத்தா ன நிலையில் செல்கின்றனர் .திட்டக்குடியில் போக்குவ ரத்து போலீசார் நியமனம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் இதுவரை போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை. எனவே மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு திட்டக்குடியில் போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்ய வேண்டும் என சமூக பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.