search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை புரட்டாசி மாதம் தொடங்குகிறது: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஒரே நாளில் 101 திருமணம்
    X

    ஆவணி மாத கடைசி முகூர்த்த நாளான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் திருமணம் நடைபெற்ற காட்சி.

    நாளை புரட்டாசி மாதம் தொடங்குகிறது: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஒரே நாளில் 101 திருமணம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்து சமய அறநிலைதுறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். பிரார்த்தனை செய்தவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து சென்று வருகின்றனர்.

    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு உள்ள மலையில் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் இந்து சமய அறநிலைதுறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது.

    ஆவணி மாதம் முடிந்து நாளை புரட்டாசி மாதம் தொடங்குவதால் தேவநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவந்திபுரம் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. மேலும் திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.

    இந்நிலையில் கோவில் திருமண மண்டபத்தில் 76 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 25 திருமணங்கள் என 101 திருமணம் நடைபெற்றது இதனால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர்.

    Next Story
    ×