search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் தென்பெண்ணையாற்றில்  தோண்ட தோண்ட கிடைக்கும் தோட்டாக்கள்
    X

    கடலூர் தென்பெண்ணையாற்றில் தோண்ட தோண்ட கிடைக்கும் தோட்டாக்கள்

    • துப்பாக்கி தோட்டாக்கள் இருந்த இடத்தை மீண்டும் தோண்டி பார்த்தபோது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • தோட்டாக்கள் துருப்பிடித்து இருந்ததால் தடவியில் நிபுணர்கள் சோதனைக்கு அனுப்பப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆறு உள்ளது. இந்த தென்பெண்ணையாற்றின் குறுக்கே கும்ந்தாமேடு தரைப்பாலம் உள்ளது. இதன் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மேலும் மீனவர்கள் சிறிய படகுகள் மூலமாக வலைவிரித்து மீன் பிடித்தும் வருகின்றனர் . இந்த நிலையில் தற்போது ஆற்றில் குறைந்த அளவில் தண்ணீர் செல்வதால் நேற்று மாலை புதுச்சேரி மாநிலம் குமந்தாமேடு பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் மீன் பிடிக்க ஆற்றில் இறங்கினர். அப்போது சேற்று பகுதிகளில் கால் வைக்கும் போது சிறிய அளவிலான இரும்பு பொருட்கள் சிக்கின. அதனை எடுத்து பார்த்தபோது துப்பாக்கி தோட்டாக்கள் என்பது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அந்த தோட்டாக்களை எடுத்து கொண்டு ஆல்பேட்டை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் வழங்கினர். க்ஷ இத்தகவல் அறிந்த போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களிடம் இருந்த தோட்டாக்களை பார்வையிட்டனர். பின்னர் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்த இடத்தை மீண்டும் தோண்டி பார்த்தபோது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சிறிய முதல் பெரிய அளவுள்ள 169 தோட்டாக்கள் சிக்கியது . இதனை தொடர்ந்து கைப்பற்றிய தோட்டாக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பார்வையிட்டார். இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 169 துப்பாக்கி தோட்டாக்கள் துருப்பிடித்து இருந்ததால் தடவியில் நிபுணர்கள் சோதனைக்கு அனுப்பப்பட உள்ளது. அங்கு துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் குண்டு சோதனை செய்யும் நிபுணர்கள் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களை தீவிர ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் இந்த தோட்டாக்கள் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள்? எந்த ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பது தெரிய வரும் . கடந்தமாதம் தென்பெண்ணை ஆற்றில் துப்பாக்கி கைப்பற்றிய இடத்தில். தோட்டாக்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் அந்த இடத்தில் ஆயுதங்கள் உள்ளனவா? மேலும் துப்பாக்கிகள் தோட்டாக்கள் உள்ளதா? என்பதை சோதனை செய்ய உள்ளோம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தெரிவித்தார். இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் சோதனை செய்தபோது 8 தோட்டாக்கள் மீண்டும் கிடைத்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த தோட்டக்களையும் போலீசார் மீட்டு ஏற்கனவே கிடைத்த 169 தோட்டக்களுடன், 8 தோட்டாக்களை சேர்த்து அனுப்பப்பட உள்ளன. இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் இருந்த இடத்தை முழுவதுமாக தோண்டப்பட்டு மேலும் ஏதேனும் தோட்டாக்கள் , துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் உள்ளதா? என்பதனை சோதனை செய்ய உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடலூர் தென்பெண்ணை ஆற்றில் தோண்ட தோண்ட தோட்டாக்கள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×