என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடலுாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்
- கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
கடலூர்:
வடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. பண்ருட்டி சாலை ெரயில்வே கேட் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் குறிஞ்சிப்பாடி வட்டச் செயலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இந்த போராட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்தி திணிப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் மறியல் செய்தனர். இதில் ராஜேந்திரன், சுப்பிரமணி, பன்னீர்செல்வம், ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். நெய்வேலி டி.எஸ்.பி.ராஜ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






