search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் பஸ் நிலையத்தில் மினி பஸ் டிரைவர், உணவு டெலிவரி வாலிபர் மோதல்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
    X

    சிதம்பரம் பஸ் நிலையத்தில் மோதிக் கொண்ட தனியார் மினி பஸ் டிரைவர் ஸ்ரீராம், உணவு டெலிவரி வாலிபர் கணேசை படத்தில் காணலாம்.

    சிதம்பரம் பஸ் நிலையத்தில் மினி பஸ் டிரைவர், உணவு டெலிவரி வாலிபர் மோதல்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

    • வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் பைபாஸ் சாலை வழியாக மினி பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது. அந்த பஸ்சின் முன்னால் மோட்டார் சைக்கிளிலில் தனியார் உணவு டெலிவரி வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது வாலிபர் மினி பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து மினி பஸ் டிரைவர், உணவு டெலிவரி வாலிபர் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பஸ் டிரைவர் ஏன் வழிவிடாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாய் என்று தனியார் உணவு டெலிவரி வாலிபரிடம் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் உடனே பஸ் டிரைவரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். மேலும் உணவு டெலிவரி வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.

    இதை பார்த்த பஸ் நிலையத்தில் அருகில் இருந்தவர்கள் இவர்களை பிடித்து சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர். இந்நிலையில் இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை யிடும் காட்சியை அங்கிரு ந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்கலில் வெளி யிட்டனர். இந்த வைரலான வீடியோ காட்சி மூலம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொள்ள உத்தர விட்டார். உத்தரவின்பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மினி பஸ்சை ஓட்டி வந்தது சிதம்பரம் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 35) என்பதும், தனியார் உணவு டெலிவரி வாலிபர்கோவிந்தசாமி பகுதியை சேர்ந்த கணேஷ் (41) என்பதும் தெரிய வந்தது. பின்னர் இவர்களிடம் போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபட க்கூடாது என்றும், மேலும் இதுபோன்று பொது மக்களுக்கு இடையூராக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×