பண்ருட்டி இளம்பெண் மாயம்

ஷாலினி பண்ருட்டியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
பண்ருட்டி இளம்பெண் மாயம்
Published on

கடலுார்: 

பண்ருட்டி- கடலுார் சாலையை சேர்ந்தவர் முருகவேல். இவர் கோயம்புத்தூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (வயது 19). கோயம்புத்தூரில் பி.எஸ்.சி. ரேடியோலஜி படித்து வருகிறார். இந்நிலையில் ஷாலினி கடந்த ஒரு மாதமாக பண்ருட்டி யில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இரவு சாப்பிட்டுவிட்டு ஷாலினி தூங்க சென்றார். இன்று காலை எழுந்து பார்த்த போது ஷாலினியை காணவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ஷாலினியின் தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஷாலினியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com