search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க பிரமுகர் கொலை முயற்சி துப்பாக்கி வாங்கி தந்த முகமது யூனிசிடம் விருத்தாசலம் போலீசார் தீவிர விசாரணை
    X

    தி.மு.க பிரமுகர் கொலை முயற்சி துப்பாக்கி வாங்கி தந்த முகமது யூனிசிடம் விருத்தாசலம் போலீசார் தீவிர விசாரணை

    • பீகாரை சேர்ந்த சோட்டாவை பிடிக்க தனிப்படை விரைந்தது
    • தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவரது மகனான இளையராஜா. தி.மு.க பிரமுகர். கடந்த 8-ந்தேதி இவர் மணவாளநல்லூர் அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கி யால் சுட்டது. துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த இளையராஜா தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து விருத்தா சலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் உத்தர வின் பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமையிலான தனிப்ப டை போலீசார் மண வாளநல்லூர் ஆடலரசு, புகழேந்தி, சரவணன், வெங்கடேசன், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த விஜயகுமார், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சூர்யா, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அருண்குமார் மற்றும் வெங்கடா ம்பேட்டையை சேர்ந்த சதீஸ்வரன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். கைது செய்யப்படட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கி கள், 2 இரும்பு ராடுகள், 1 கத்தி, 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து போலீ சார் பிடிபட்டவர்களை கோர்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசாரின் விசாரணை யில் இளையராஜாவின் அண்ணன் நீதிராஜன் மண வாள நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஆடலரசு வின் தாய் மங்கையர்கரசி தேர்தலில் போட்டியிட்டார் அப்போது இளையராஜா தரப்பினருக்கும் ஆடலரசு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோத தகராறில் பழிதீர்க்கும் விதமாக ஆடலரசு சென்னையில் தனியார் உணவு டெலிவரி வேலை செய்யும் பாளை யங்கோட்டை நண்பரான விஜயகுமாரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி விஜயகுமார் சென்னையில் முகமது யூனிஸ் என்பவர் மூலம் பீகாரில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கு 2 துப்பாக்கி கள் மற்றும் 3 புல்லட்டுகளை கடந்த 2 மாதத்திற்கு முன்பு வாங்கி கொடுத்தது தெரிய வந்தது. இதன்மூலம் திட்ட மிட்டபடி ஆடலரசு தரப்பி னர் இளையராஜாவை கொலை செய்ய முயற்சி மேற்கொண்டனர்.

    இவர்களுக்கு துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்த சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த அபுபக்கர் மகன் முகமது யூனிசை தனிப்படை போலீசார் சென்னையில் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட முகமது யூனிசை போலீசார் விருத்தாசலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி னர். இதில் முகமது யூனிஸ் பீகார் மாநிலம் சோட்டா என்பவரிடமிருந்து இந்த துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சோட்டா என்பவரை பிடிக்க பீகார் மாநிலத்திற்கு விரைந் துள்ளனர். பிடிபட்ட முகமது யூனிசிடம் போலீ சார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×