என் மலர்tooltip icon

    கடலூர்

    • வெங்கடேஷ் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கோவை சென்றார்.
    • நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    வடலூர் அருகே உள்ள வெங்கட்டம் குப்பத்தை சேர்ந்த முரளிநாயுடு மகன் வெங்கடேஷ் (29) என்ஜினீயர். இவர் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கோவை சென்றார். பின்னர், 17-ந்தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வடலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • திட்டக்குடி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
    • மாணவி தினமும் ராமநத்தத்திற்கு வந்து அங்கிருந்து நடந்து இந்த பள்ளிக்கு வருவது வழக்கம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழு தூரில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு தொழு தூர், ராமநத்தம், வேப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வருவர். வேப்பூரில் இருந்து பிளஸ்-2 மாணவி தினமும் ராமநத்தத்திற்கு வந்து அங்கிருந்து நடந்து இந்த பள்ளிக்கு வருவது வழக்கம்.

    இந்நிலையில் பிளஸ்-2 மாணவியை பின்தொடர்ந்து 2 வாலி பர்கள் வந்தனர். அப்போது அந்த வாலிபர்கள் மாணவி யிடம் காதலிக்க வற்புறுத்தி தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை அந்த மாணவி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைகேட்ட மாணவியின் தாய் வாலிபரிடம் சென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார்.

    ஆனால் நேற்று பள்ளிக்கு வந்த மாணவியிடம் மது போதையில் அதே வாலி பர்கள் சில்மிஷம் செய்த னர். இதுகுறித்து மாணவியின் தாய் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ராமநத்தத்தை சேர்ந்த விஜய் (வயது 26), பிரவீன்குமார் (22) ஆகிய 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • விஜய நிர்மலா பண்ருட்டி- கடலூர் சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
    • வழக்கு பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுச்சேரி கிருஷ்ணா நகர் 11-வது கிராஸ் ரோஜா தெரு வை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி விஜய நிர்மலா (வயது43), இவர், பண்ருட்டி- கடலூர் சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இங்கு பண்ருட்டி சாமியார் தர்காவை சேர்ந்த சம்சுதீன் தன்னுடன் ஒருவரை அழைத்து கொண்டு கடைக்கு சென்று குடிப்பதற்கு பணம் கேட்டு ஆபாசமாக திட்டி மிரட்டி மாமுல் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்துகடையின் உரிமையாளர் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார்.பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் கண்ணன் சம்சுதீன் மற்றும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
    • புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் கடலூரில் இருந்து திருவந்திபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    இக்கோவிலில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி கும்பிட்டு செல்வார்கள். இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு தேவநாத சாமியை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 5 மணி முதல் பொதுமக்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தனர். முன்னதாக அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் திருவந்திபுரம் பகுதியில் திரண்டனர். பின்னர் தங்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு சாலக்கரை இலுப்பை தோப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரத்தில் மதியம் வரை 3 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவர்.

    இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவில் முன்பு அமைத்திருந்த நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷம் எழுப்பி சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் கடலூரில் இருந்து திருவந்திபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன. மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் 150-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • கெடிலம் ஆற்றின் தண்ணீர் இல்லாத கரைப்பகுதியில் மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
    • பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் கெடிலம் ஆற்றின் குறுக்கே அண்ணா பாலம் உள்ளது. இன்று காலை அந்த வழியாக சென்ற பொது மக்கள் ஏராளமானோர் கெடிலம் ஆற்றில் திரண்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கெடிலம் ஆற்றின் தண்ணீர் இல்லாத கரைப்பகு தியில் மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இந்த தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இறந்த நிலையில் கிடந்த மூதாட்டி உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எப்படி இறந்தார்? தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் 

    • திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் தற்போது கடலூர் மத்திய சிறையில் உள்ளார்.
    • இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு, கடலூர் கலெக்டரிடம் அனுமதி கோரினார்.

    கடலூர்:

    முத்தாண்டிகுப்பம் அடுத்த பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார் (வயது 24). இவர் கொள்ளை, திருட்டு, கொலை மிரட்டல் போன்ற குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் தற்போது கடலூர் மத்திய சிறையில் உள்ளார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பண்ருட்டி போலீசார் கடலூர் மாவட்ட போலீசாருக்கு பரிந்துரைத்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு, கடலூர் கலெக்டரிடம் அனுமதி கோரினார். இதற்கு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் அனுமதியளித்ததை தொடர்ந்து, அசோக்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரை கைது செய்த பண்ருட்டி போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அசோக்குமார் மீது திருட்டு, தீண்டாமை வன்கொடுமை வழக்கு,பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய வழக்கு என 6 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சந்தேகம் அடைந்த நாகராஜ் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த டி. புதுப்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 41). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் தனது வீட்டுக்கு வந்து முன்பக்க கதவை திறக்க முயன்றார். அப்போது கதவை திறக்க முடியாததால் சந்தேகம் அடைந்த நாகராஜ் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தார். அப்போது பின்பக்கம் கதவு திறந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்ற நாகராஜ் தனது அறையில் இருந்த பீரோவை பார்த்த போது திறந்து இருந்தது. அதிலிருந்த 6.5 தங்க நகை, வெள்ளி பொருட்களை காணவில்லை. இந்த நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இது குறித்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் நாகராஜ் தனது வீட்டை பூட்டிவிட்டு கதவின் அருகாமையில் சாவியை வைத்துவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அந்த சாவியை கொண்டு முன்பாக்க கதவை உடைக்காமல் திறந்து, உள் பக்கமாக கதவை பூட்டி விட்டு பொருட்களை திருடி கொண்டு, பின்பக்கமாக தப்பி சென்றது தெரியவந்தது. மேலும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடங்களை சேகரித்து சென்றனர். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்து 3 வயது மகன் உள்ளான்.
    • படுகாயம் அடைந்த சுப்ரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ராமநத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வி.சித்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி மகன் சுப்ரமணியன் (வயது 32) விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்து 3 வயது மகன் உள்ளான். இந்நிலையில் நேற்று இரவு சுப்ரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் வி.சித்தூர் பகுதியில் இருந்து ராமநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் ஜே.சி.பி வாகனம் ஒன்று வந்தது. ராமநத்தம் போலீஸ் நிலையம் முன்பு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஜே.சி.பி வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கி ளில் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சுப்ரமணியன் கீழே விழுந்தார். இதில் எதிர்பாராத விதமாக ஜே.சி.பி வாகனத்தின் சக்கரங்களில் சிக்கி பலத்த படுகாயம் அடைந்தார்.

    விபத்து போலீஸ் நிலையம் முன்பு நடந்ததால் உடனே விரைந்த ராமநத்தம் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த சுப்ரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ராமநத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சை க்காக 108 ஆம்புலன் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலே சுப்ரமணியன் உயிரி ழந்தார். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஜேசிபி வாகன டிரை வரான தச்சூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (22)என்பவரை கைது செய்தனர். அப்போது கார்த்திக் மதுபோதையில் இருந்ததால் போலீசாரு டன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஜே.சி.பி எந்திர டிரைவர் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியது போ லீசாரின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ஜே.சி.பி எந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் கார்த்திகிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தப்பியோடியவர் ‌ வடபாதி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பது போலீ சாருக்கு தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுபாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடபாதி கிராமத்தில் உள்ள ஏரியில் கள்ளத்தனமாக சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் அப்பகு திக்கு இன்று காலை விரைந்து சென்றனர். அப்போது ஏரிக்க ரையின் மீது அமர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடிக்க போலீசார் முயன்றனர்.

    அருகில் இருந்த மோட்டார் சைக்கிளில் அவர் தப்பிவிட்டார். இதையடுத்து ஏரிக்கரையில் வைக்கப்பட்டிருந்த 500 பாக்கெட் கள்ளச்சாராயம், லாரி டியூபில் இருந்த சுமார் 100 லிட்டர் அளவு கொண்ட சாராயம் ஆகியவற்றை சிறுபாக்கம் போலீசார் கைப்பற்றினார். மேலும், தப்பியோ டியவர் வடபாதி கிராம த்தைச் சேர்ந்த ராயப்பி ள்ளை மகன் சரத்குமார் (வயது 30) என்பது போலீ சாருக்கு தெரியவந்தது. இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரகண்டநல்லூரில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • இதையடுத்து அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் அரங்கண்டநல்லூர் போலீசார் மணம்பூண்டி மேடு ரவுண்டானா அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்.சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனையிட்டனர்.

    அவரிடம் சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா இருந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சோலைவண்டிபுரத்தை சேர்ந்த சுப்பரமணி மகன் மோகன் என்கிற மோகன்ராஜ் (வயது 31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • நேற்று முதலாவது பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்
    • பழனிவேலுக்கு மீனாட்சி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் இருக்கின்றனர்.

    கடலூர்:

    நெய்வேலி புதுநகர் 3-வது வட்டம்என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் பழனிவேல் (வயது 55). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் முதலாவது சுரங்கம் 1 ஏ பிரிவில் வேலை பார்த்து வந்தார். நேற்று முதலாவது பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். 2-வது வட்டம் மாணிக்கவாசகர் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் இறந்தார். விபத்தில் பலியான பழனிவேலுக்கு மீனாட்சி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் இருக்கின்றனர். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

    • வேல்முருகன் மற்றும் அவரது நண்பர்கள் பத்மநாபனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது
    • போலீசார், தனஞ்செழியன், கவுதம், வேல்முருகன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அப்போது வேல்முருகன் மற்றும் அவரது நண்பர்கள் பத்மநாபனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த பத்மநாபன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார், தனஞ்செழியன், கவுதம், வேல்முருகன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கவுதமனை கைது செய்தனர்.

    ×