search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the flag pole"

    • இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கொடி கம்பம் இருந்து வந்தது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் மீன் மார்க்கெட் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் சில தினங்களுக்கு முன்பு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர் . கடலூர் புதுநகர் போலீசார் உரிய அனுமதியில்லாமல் கொடி கம்பம் வைக்க கூடாது என தெரிவித்தனர். அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள், இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கொடி கம்பம் இருந்து வந்தது. ஏற்கனவே இருந்த இடத்தில் கொடி கம்பம் புதியதாக வைக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிமெண்ட் கட்டை கட்டி கொடிக்கம்பம் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைக்கப்பட்டதாக கூறி அதிரடியாக கொடிக்கம்பத்தை அகற்றினார்கள். இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொடி கம்பம் அகற்றியதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் நிர்வாகிகள் மத்தியில் பரவியதால்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

    உடனடியாக மீண்டும் இன்று காலை புதிதாக கொடி கம்பம் வைத்தனர். இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் வருவாய் துறையினர் உள்ளனர். இந்த நிலையில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திரண்டு உள்ளதால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது.

    ×