என் மலர்tooltip icon

    கடலூர்

    • அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டது.
    • இதனால் பொதுமக்கள் முன்பை விட தற்போது அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்வதற்கு வாய்க்கால்கள் இருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் மழை நீர் மற்றும் கழிவு நீர் புகுந்து பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இதனால் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடலூர் வில்வ நகர் பகவதி அம்மன் கோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வந்த நிலையில், இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலியாக உள்ள இடங்களில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    மேலும், மழைநீர் வடிகால் வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல கடலூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்பை விட தற்போது அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு செய்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கொடி கம்பம் இருந்து வந்தது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் மீன் மார்க்கெட் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் சில தினங்களுக்கு முன்பு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர் . கடலூர் புதுநகர் போலீசார் உரிய அனுமதியில்லாமல் கொடி கம்பம் வைக்க கூடாது என தெரிவித்தனர். அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள், இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கொடி கம்பம் இருந்து வந்தது. ஏற்கனவே இருந்த இடத்தில் கொடி கம்பம் புதியதாக வைக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிமெண்ட் கட்டை கட்டி கொடிக்கம்பம் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைக்கப்பட்டதாக கூறி அதிரடியாக கொடிக்கம்பத்தை அகற்றினார்கள். இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொடி கம்பம் அகற்றியதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் நிர்வாகிகள் மத்தியில் பரவியதால்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

    உடனடியாக மீண்டும் இன்று காலை புதிதாக கொடி கம்பம் வைத்தனர். இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் வருவாய் துறையினர் உள்ளனர். இந்த நிலையில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திரண்டு உள்ளதால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது.

    • சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு அருகே வந்து பார்த்த போது பையில் வைத்திருந்த பர்சை காணவில்லை.
    • போலீசார் 2 பெண்களையும் ஜாமீனில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த மாலிக்ஜான் மனைவி தில்ஷாத் பேகம். கடந்த மே மாதம் புவனகிரியில் இருந்து வடலூர் நோக்கி தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு அருகே வந்து பார்த்த போது பையில் வைத்திருந்த பர்சை காணவில்லை. அதில் 7 பவுன் தங்க நகையை தில்ஷாத் வைத்திருந்தார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியில் 2 பெண்கள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    சேத்தியாதோப்பு இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் 2 பெண்களையும் ஜாமீனில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் சென்னை பெத்தேரி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி வேளாங்கண்ணி (வயது 26), அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி சத்யா (24) என்பது தெரியவந்தது. மேலும், இவ்விருவரும் தில்ஷாத் பேகத்திடமிருந்து 7 பவுன் நகையை திருடியது ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து நகையை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து கடலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம்.
    • வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகம் பகுதியில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்வமுடன் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்று வந்தனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படக்கூடிய துறைமுகத்தில் பொதுமக்கள் மிக மிக குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்று சென்றனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதன் காரணமாக மீன் வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் மிகுந்த தொய்வுடன் காணப்பட்டனர். மேலும் வரத்து குறைவால் மீன்களின் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. பொதுவாக ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும் பன்னி சாத்தான் மீன் கிலோ 250 ரூபாய்க்கும், ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படும் கனவா வகை மீன் ரூ.150-க்கும், 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • கடந்த ஜூலை 10-ந்தேதி காலை 8.00 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை
    • சரவணலட்சுமியின் தந்தை ரமேஷ், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. பெயிண்டர், இவரது மனைவி சரவணலட்சுமி (வயது 27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஜூலை 10-ந்தேதி காலை 8.00 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சரவணலட்சுமியின் தந்தை ரமேஷ், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சரவணலட்சுமியை தேடி வருகிறார்.

    • புவனகிரி அருகே நர்சிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
    • பழனிவேல் மகன் வீரமுத்துவை பார்ப்பதற்காக, எறும்பூரை சேர்ந்த ராயர் மகன் அருண் அடிக்கடி வந்து செல்வார்.

    கடலூர்:

    புவனகிரி அடுத்த பெரியநெல்லிகொல்லை அடுத்த துறிஞ்சிகொல்லை  கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகள் சிந்து (வயது 19). இவர் வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இவர் வசிக்கும் வீதியில் உள்ள பழனிவேல் மகன் வீரமுத்துவை பார்ப்பதற்காக, எறும்பூரை சேர்ந்த ராயர் மகன் அருண் அடிக்கடி வந்து செல்வார். இவருடன் சிந்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் இருவரும் அடிக்கடி போனில் பேசியுள்ளனர். சிந்துவை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய அருண், சிந்துவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதனையடுத்து, அருணுக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனை யறிந்த சிந்து மனஉலைச்சலில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொ லைக்கு முயன்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிந்து, நடந்த விஷயங்களை தனது பெற்றோரிடம் கூறினார். சிந்துவின் பெற்றோர், அருண் வீட்டிற்கு சென்று, தனது மகளை திருமணம் செய்துகொள்ள கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அருண் மற்றும் குடும்பத்தார், சிந்து மற்றும் அவரது பெற்றோரை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது தொடர்பாக சிந்து மற்றும் அவரது பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, சிந்துவை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய அருண் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    • புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து நிதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் நிதீஷ்குமார் நாகலட்சுமியை திருமணம் செய்ய சம்மதித்தார்.
    • நிதீஷ்குமாரிடம் போலீசார் இனிமேல் நாகலட்சுமியிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பூவனூர் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார் பி.ஏ பட்டதாரி.

    இவர் எம்.பரூர் கிராமத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்ணை கடந்த 6 வருடமாக காதலித்து வந்தார். நாகலட்சுமி மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த கடைக்கு நிதீஷ்குமார் அடிக்கடி சென்று வருவார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் பலமுறை சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாகலட்சுமி 6 மாத கர்ப்பமானார்.

    இதனைதொடர்ந்து நாகலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிதீஷ்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு நிதீஷ்குமார் திருமணம் செய்ய மறுத்துவிட்டு நாகலட்சுமியை விட்டு விலக ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி விருத்தாசலம் பூவனூரில் உள்ள நிதீஷ்குமார் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். நிதீஷ்குமார் வீட்டின் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து நாகலட்சுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து நிதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் நிதீஷ்குமார் நாகலட்சுமியை திருமணம் செய்ய சம்மதித்தார். இதனைதொடர்ந்து இருவீட்டாரின் முன்னிலையில் விருத்தாசலம் வண்ண முத்துமாரியம்மன் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் நிதீஷ்குமாரிடம் போலீசார் இனிமேல் நாகலட்சுமியிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • வீராணம் ஏரியில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
    • ஏரியிலிருந்து மெட்ரோ நிறுவனம் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் அனுப்பி வருகிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலுார் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடைமடை டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    பாசன வசதிக்காக பூதங்குடியில் தொடங்கி லால்பேட்டை வரை 32 மதகுகள் உள்ளது. இந்த ஏரியை நம்பி கடைமடை டெல்டா பாசன பகுதியான காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, புவனகிரி உள்ளிட்ட வட்டாரங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஏரியிலிருந்து மெட்ரோ நிறுவனம் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் அனுப்பி வருகிறது.

    டெல்டா பாசன பகுதியான கந்தகுமரன், நெடுஞ்சேரி, புத்துார், கண்ணங்குடி, மதுராந்தகநல்லுார், பன்னப்பட்டு, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் ஆடி மாதத்தில் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.

    மேட்டூரிலிருந்து தண்ணீர் வரத்து தற்போது இல்லாத நிலையில், கடும் வெயிலால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 38 அடியாக உள்ளது. சென்னைக்கு 454 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது முளைவிட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், தண்ணீர் திறப்பதை திடீரென ஒத்தி வைத்தனர். இதனால், ஆவலுடன் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    வேறு வழியின்றி நெற்பயிர்கள் கருகிய பகுதிகளில் விவசாயிகள் மறு உழவு செய்து விதைப்பு செய்து வருகின்றனர். நெற்பயிர்கள் கருகி வருவதை தடுக்க நேரடி நெல் விதைப்பிற்கு விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலமுறை அந்த வடிகால் வாய்க்காலை சரிசெய்யுமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.
    • அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மேல கொளக்குடி பகுதியில் ஈஷா ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அந்த பகுதியில் உள்ள விவ சாய நிலங்களுக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரிக்கு நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் உபரி நீர் வருகிறது. இதனையடுத்து இந்த ஏரியில் உள்ள வடிகால் வாய்க்காலை என்.எல்.சி நிறுவனம் அடைத்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த ஏரியின் வடிகால் வாய்க் காலை அடைத்ததால் ஏரியில் தண்ணீர் நிரம்பி வடிவதற்கு வழி இல்லை. இதனால் ஊருக்குள் ஏரியின் தண்ணீர் புகும் அபாயம் ஏற்படும் என பலமுறை அந்த வடிகால் வாய்க்காலை சரிசெய்யுமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு எந்த வித நடவடிக்கையும் என்.எல்.சி. அதிகாரிகள் மூலம் எடுக்கவில்லை.

    இதனால் இன்று காலை ஏரியின் அருகே கோட்டகம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் அந்த வடிகால் வாய்காலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த தகவல் குறித்து அறிந்த என்.எல்.சி. நிர்வாகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் நீங்கள் இதுபோன்று செய்யக்கூடாது. இத னால் எங்களுக்கு தண்ணீர் வருவதில் பிரச்சனை ஏற்படும் என்று அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகளிடமும், என்.எல்.சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.

    • மாணவர்களை ஏற்றி அவரவர் இடத்தில் இறக்கி விட்டு அதே பகுதியில் நிறுத்திவிட்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
    • ரோந்து போலீசார் அந்த பள்ளி பஸ்சை வேப்பூர் பகுதியில் மடக்கி பிடித்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோலியூர் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சை டிரைவர் நேற்று மாலை மாணவர்களை ஏற்றி அவரவர் இடத்தில் இறக்கி விட்டு அதே பகுதியில் நிறுத்திவிட்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டார்.நள்ளிரவு 2 மணி அளவில் அங்கு வந்த விருத்தாசலம் வி.கநகரை சேர்ந்த சிவக்குமார் மகன் அருணாச்சலம் (வயது 23) அந்த பள்ளி பஸ்சை திருடி சென்றுள்ளார். இதனையடுத்து பஸ் திருடி செல்லும்போது டிரைவருக்கு செல்போனிற்கு டிராக்கிங் மூலம் குறுஞ்செய்தி வந்தது. இந்த செய்தி மூலம் டிரைவர் பஸ் செல்லும் வழியை பார்த்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இந்த சம்பவ குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து போலீசார் அந்த பள்ளி பஸ்சை வேப்பூர் பகுதியில் மடக்கி பிடித்தனர். உடனே பஸ்சில் இருந்த அருணாச்சலம் தப்பி ஓடினார். போலீசார் அவரை பின்தொடர்ந்து மடக்கி பிடித்தனர். போலீசார் பஸ்சை ஆய்வு செய்தபோது பஸ்சின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்து இருந்தது. இதனையடுத்து வேப்பூர் போலீசார் திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் பஸ் மற்றும் பஸ்சை திருடி சென்ற அருணாச்சலத்தை ஒப்படைத்தனர். திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் பஸ் சேதமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தவுள்ளது
    • கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பயிற்சி மற்றும் தகவல் கையேடுகளை வெளியிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்தி றனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு 2023 தகவல் வெளியீடு குறித்து கையேடுகள் வெளியிடும் நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பயிற்சி மற்றும் தகவல் கையேடுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு மாற்று த்திறனாளிகள் நலத்து றை, உரிமைகள் திட்ட த்தின் கீழ் மாற்றுத் திறனாளி களுக்கான கணக்கெடுப்பை செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தவுள்ளது. இக்கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கக் களப்பணியாளர்களும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களும் தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொள்வார்கள். கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படும். அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தங்கள் தகவல்களை இக்கணக்கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி வழங்க கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறினார். அப்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • இன்று காலை வீட்டில் தனியாக இருந்த செல்வ குமாரி புடவை துணியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்: 

    பண்ருட்டி அருகே கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளி கம்பட்டு காலனியை சேர்ந்தவர் முத்து கூலி தொழிலாளி, இவரது மனைவி செல்வகுமாரி (21) இவர்களுக்கு திருமணம் நடந்து ஓராண்டு ஆகிறது. தற்போது செல்வகுமாரி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இன்று காலை வீட்டில் தனியாக இருந்த செல்வ குமாரி புடவை துணியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வகுமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். செல்வகுமாரி தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×