என் மலர்tooltip icon

    கடலூர்

    • சொந்தமான வாகனத்தில் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம்.
    • நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டியானை வாகனத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி - கோழியூர் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இதற்கு சொந்தமான வாகனத்தில் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்த வாகனத்தை நிறுவனத்தின் உள்ளே நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நிறுவனத்தின் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த குட்டியானை வாகனம் இரும்பு வேலியின் மோதி நகர முடியாமல் நின்றி ருந்தது. இதனை பார்த்த நிறுவன உரிமையாளர் கார்த்திக் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நிறுவனத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மர்மநபர் ஒருவர் குட்டியானை வாகனத்தில் அமர்ந்து அதனை இயக்குகிறார். இந்த வாகனம் அருகில் இருந்த இரும்பு வேலியில் மோதி நிற்கிறது. இதனை வெளியில் எடுக்க முயற்சிக்கும் மர்ம நபர், குட்டியானை வாகனத்தை இயக்க முடியாததால், அங்கேயே விட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனைக் கண்ட உரிமையாளர் கார்த்திக், இது தொடர்பாக திட்டக்குடி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர். இதில் கருவேப்பிலங்குறிச்சியை அடுத்துள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தங்கமுத்து மகன் விக்னேஷ் (வயது 24) என்பதும், இவர் தனியார் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டியானை வாகனத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து திட்டக்குடி போலீசார் விக்னேஷை கைது செய்தனர். திட்டக்குடி பகுதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்றவைகள் அடிக்கடி திருடி போயின. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பஸ், குட்டியானை போன்ற வாகனங்களும் திருடப்படுகின்றன. இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற்றது.
    • மானியத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலு வலகத்தில் இன்று திங்கட் கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத்தி லிருந்து ஏராளமான பொது மக்கள் தங்கள் கோரிக்கை கள் தொடர்பாக மனு அளித்தனர்.

    இந்த நிலையில் மாற்று திறனாளிகள் புது வாழ்வு நல சங்கம் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையிலும் மாவட்ட செயலாளர் அமரேசன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மாற்றத்திறனாளிகள் திரண்டு இருந்தனர். பின்னர் மாற்றுத் திறனாளிகள் நிலம் மற்றும் மனை வாங்குபவர்களுக்கு பத்திரப்பதிவு இலவசமாக செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கத்தின் மூலம் விண்ணப் பிக்கப்படும் வங்கி கடன் மானியத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    மாற்று திறனாளி கள் வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிக்கும் போது ஜாமீன் இல்லாமல் கடன் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் உள்ளாட்சித் துறைகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திற னாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷமும் எழுப்பி னார்கள். அவர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    • நகர தலைவர் திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் கூறினர்.

    கடலூர்:

    வடலூரில் பா.ஜ.க. நகர ஆலோசனைக் கூட்டம் நகர தலைவர் திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் அக்கினி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி, வந்தே பாரத் ரெயில் திட்டம், பெண்கள் இட ஒதுக்கீடு வரவேற்பு, புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கருத்து கள் ஆலோசிக்கப்பட்டது. இதில் வந்தே பாரத் ெரயில், மகளிர் இடஒதுக்கீடு குறித்த பிரசாரம் வடலூரில் நடைபெறவில்லை எனவும், பா.ஜ.க. பெண் நிர்வாகி களுக்கு சிலர் போன் செய்து மிரட்டுவதாகவும் கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் கூறினர்.

    இதனை தொடர்ந்து இதே கருத்தினை வலி யுறுத்தி பலரும் ஒரே சம யத்தில் பேசினர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப் பம் ஏற்பட்டது. அப்போது, ஒருசிலர் எழுந்து நாற்காலி களை தூக்கிவீசினர். இத னால் கை கலப்பு ஏற்படும் சூழல் உருவானது. அப்போது, பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள், தலை யிட்டு அனைவரையும் சமா தானம் செய்தனர். இதை யடுத்து ஆலோசனைக் கூட்டம் முடிந்து அனை வரும் கலைந்து சென்றனர்.

    • கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்தனர்.
    • ஆலய நிலங்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டவிரோதமாகவும் விற்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    இந்து மக்கள் கட்சி கடலூர் மாவட்ட தலைவர் தேவா தலைமையில் பொதுச் செயலாளர் சக்திவேல், அமைப்பு பொதுச் செயலாளர் ஜம்புலிங்கம், கடலூர் ஒன்றிய தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்தனர்.

    பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-  பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆறுகால கட்டளை பூஜைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், பல ஏக்கர் விவசாய நிலங்கள் கணக்கில் இருக்கின்றதா? இல்லையா? என உண்மை தன்மையை கண்டறிந்து சொத்துக்களை மீட்க உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். ஆலய கட்டளை மற்றும் ஆலய நிலங்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டவிரோதமாகவும் விற்கப்பட்டுள்ளது.

    அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலின் உள்ளே செயல் அலுவலர் அலுவலகம் செயல்படுவதால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் வெளியூரிலிருந்து வருவோருக்கு திருமண பதிவு சான்றிதழ் பெறுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் அலுவலகத்தை கோவிலின் வெளிப்புறம் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டி மனு அளிக்க வந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனை யில் மட்டும் கடந்த ஒரு வார மாக தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சளி, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் சிறுவர்களே அதிகள வில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்ட தில், 83 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டி ருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதற்கிடையே சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்டோர் இன்று கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் பதிவு சீட்டு வாங்கும் இடத்தில் நோயா ளிகள் கூட்டம் அலை மோதியது. இவர்களில் பெரும்பாலானோர் காய்ச்ச லால் பாதிக்கப்பட்ட தங்க ளது குழந்தைகளுடன் வந்தி ருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சிகிச்சை பெற்று சென்றனர்.

    இதில் 3 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்ட 70-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் காய்ச்சல் பரிசோ தனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு நாளை (செவ்வாய்க்கிழமை) தெரி விக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 36 ேபர்கள் டெங்கு காய்ச்ச லால் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்க தாகும்.

    • 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்்ளது. இங்கு கிள்ளை பகுதியை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர். இந்நிலையில் கிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் இருளர் சமூக மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 10 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர். இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். கிள்ளை பகுதியில் வசிக்கும் இருளர் சமுதாய மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இருளர் மக்கள் வந்தாலே, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கும் டாக்டர்கள், நர்சுகளை பணி நீக்கம் செய்ய வேண்டுமென போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாசலில் அமர்ந்து இருளர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இத்தகவல் அறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இருளம் இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மற்ற சமுதாய மக்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதை போல, தங்களுக்கும் சிகிச்சை வழங்க வேண்டும். கிராம மக்களிடையே பாரபட்சம் காட்டும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி னர். இருளர் இன மக்களின் திடீர் போராட்டத்தால் கிள்ளை பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • டெங்கு காய்ச்சலுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டது.
    • 36 பேர் டெங்கு காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கென தனி வார்டு அமைக்காததால், அங்கிருந்த நோயாளிகள் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையி னர் மேற்கொண்டு வருகின்ற னர்.

    கடலூர் அரசு மருத்துவ மனையில் 23 நபர்களும், சிதம்பரம் அரசு மருத்துவ மனையில் 3 நபர்களும், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 நபர்களும் ஆக மொத்தம் 36 பேர் டெங்கு காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. இது 5 மடங்கு உயர்ந்து தற்போது 36 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 260-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. பொது மக்கள் சுத்தமாகவும் சுகா தார மாகவும் இருந்து, டெங்குவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் கணிசமாக உயர்ந்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

    • வேலி அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
    • விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கடலூர்:

    சேத்தியா தோப்பு அருகே என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் வேலி அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக் கத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை சேத்தியாதோப்பு அருகே உள்ள கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழகன், ஊ. ஆதனூர், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, வி. சாத்தப்பாடி உள்ளிட்ட 7 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. கடந்த 2 மாதத்திற்கு முன் வளையமாதேவியில் கையகப்படுத்திய நிலத்தில் என்.எல்.சி. சார்பில் புதிய பரவனாறு வெட்டப்பட்டது.

    புதிய பரவனாறு வெட்டும் பணியின் போது குறுவை சாகுபடி நெற் பயிர்களை அழித்து பணியை செய்ததால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதர வாக என்.எல்.சி. நுழைவு வாயில் முன்பு பா.ம.க. சார்பில் நடைபெற்ற போராட்டம் கலவரமானது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் விவசாயிகள் பயிரிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் வளையமாதேவியில் கையகப்படுத்திய நிலங்க ளில் அத்து மீறி யாரும் பிரவேசிக்க கூடாது என என்.எல்.சி. சார்பில் அறி விப்பு பலகை வைக்கப் பட்டது. தற்போது அங்கு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    • ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
    • அதிவிரைவு வண்டிகள் நின்று செல்லும் நிலையமாக விருத்தாச்சலம் சந்திப்பு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் ெரயில்வே நிலையம் மாவட்டத்தில் மிக முக்கிய மான ெரயில்வே சந்திப்பு நிலையம் ஆகும். அருகில் இருக்கும் நெய்வேலி, பெண்ணாடம், வேப்பூர், திட்டக்குடி, தொழுதூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல விருத்தாசலம் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் விழுப்புரம் -திருச்சி இடையே கார்டு லைனில் ஓடும் அனைத்து ெரயில்களும் நின்று செல்லும் முக்கியமான நிலையமாக விருத்தாசலம் உள்ளது.சென்னை -மதுரை இடையே ஓடும் தேஜஸ் விரைவு ெரயிலை தவிர அனைத்து விரைவு மற்றும் அதிவிரைவு வண்டிகள் நின்று செல்லும் நிலையமாக விருத்தாச்சலம் சந்திப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி- சென்னை இடையே புதிய வந்தே பாரத் ெரயிலை தொடங்கி வைத்தார். இந்த ெரயிலின் கால அட்டவணையில் விருத்தாசலம் ெரயில் நிலையத்தில் வண்டி நிற்காது என்ற அறிவிப்பு விருத்தாசலம் பயணிகளி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடலூர் மற்றும் அருகில் இருக்கும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள எந்த நிலையத்திலும் நிற்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விழுப்புரம் -திருச்சி இடையே உள்ள சுமார் 180 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த நிலையத்திலும் நிற்காது என்ற அறிவிப்பும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே விருத்தாசலம் ெரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும் என ரயில்வே அமைச்சர், இந்திய ெரயி ல்வே, தென்னக ெரயில்வே மற்றும் ெரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு விருத்தாச்ச லம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்கட்டணத்தை இரு மடங்காக அரசு உயர்த்தி உள்ளது.
    • முந்திரி நிறுவனங்கள் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கடலூர்:

    தொழிற்சாலைகள் மின்கட்டணத்தை இரு மடங்காக அரசு உயர்த்தி உள்ளது. இதனால் முந்திரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி அரசு மின்கட்டண உயர்வை கைவிட கோரி தமிழக முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் அனைத்து முந்திரி நிறுவனங்கள் முழு விடுப்பு அளித்து "ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தத்தில்" ஈடுபட்டு உள்ளனர். மிக முக்கியமான முந்திரி நகரமாக திகழும் பண்ருட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய முந்திரி நிறுவனங்கள் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ள அனைத்துமுந்திரி உற்பத்தி யாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்திஇன்றுகாலை 10.30 மணி அளவில் பண்ருட்டிபஸ் நிலையம் பின்புறம் பஸ் வெளியே வரும் வழியில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு முந்திரி சங்க தேசிய செயலாளர் பண்ருட்டி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் மலர் வாசகம், பொருளாளர் சி.ஆர். செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான முந்திரிஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், முந்திரி நிறுவன அதிபர்கள் திரளாக கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கைவிட கோரி கோஷம் எழுப்பினர்.5 ஆயிரம் முந்திரி நிறுவனங்கள் மூடப்பட்டதால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஊராட்சி மன்ற தலைவர் விருதகிரி.
    • மது போதையில் ஆவினங்குடி அருகே சென்று கொண்டிருந்தார்.

    திட்டக்குடி, செப்.25-

    கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டூர் ஊராட்சி மன்ற தலைவராக விருதகிரி (வயது 34) உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை மது போதையில் ஆவினங்குடி அருகே சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த மாடு மீது பைக் மோதியது. இதை மாட்டின் உரிமை யாளரான ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த செந்தில் மனைவி மகாலட்சுமி (39) தட்டி கேட்டுள்ளார்.அப்போது ஊராட்சி மனற தலைவர் விருதகிரி, பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து மீண்டும் நேற்று காலை மகாலட்சுமி வீட்டிற்கு ஊராட்சி மன்ற தலைவர் விருதகிரி சென்று தகராறு செய்து அசிங்கமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மகாலட்சுமி ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் விருதகிரியை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டி வந்தார்.
    • தம்பியை தேடி பண்ருட்டிக்கு குணசேகரன் வந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள அம்மாபேட்டையை சேர்ந்தவர் குணசேகரன் (51) இவரது தம்பி செல்வம் (45)தி.மு.க. பிரமுகர். இவர்கள் இருவரும்குணசேகரன் மகனை பார்ப்பதற்காக நேற்று இரவு புதுவை மாநிலம் குருவிநத்தத்துக்கு சென்றனர் பின்பு இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டி வந்தார். .வரும் வழியில் புதுவை மாநிலத்தில் இருவரும் மது அருந்திவிட்டு வந்தனர்.பண்ருட்டி காந்தி ரோடு சாரதா பள்ளி அருகே சென்று கொண்டி ருந்த போதுஇவர்களுக்கு போதை அதிகமாகி காந்தி ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் முன்பு படுத்தனர்.

    பின்பு குணசேகரன் மோட்டார்சைக்கிள் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.காலை 6 மணிக்கு போதை தெளிந்து தம்பியை தேடி பண்ருட்டிக்கு குணசேகரன் வந்தார். பண்ருட்டியில் தம்பி செல்வம் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் -இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ்மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் போதையில் இறந்தாரா? வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×