search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர்  கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபர்:போலீசார் விசாரணை
    X

    பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபரிடம் தாசில்தார் மனுவை பெற்றுக்கொண்ட காட்சி.

    கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபர்:போலீசார் விசாரணை

    • போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து உட னடியாக பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.
    • எங்களது இடத்தில் திடீரென்று அத்துமீறி சிமெண்ட் சாலை அமைத்துவிட்டனர்.

    கடலூர், செப்.26-

    கடலூர் கலெக்டர் அலு வலகத்திற்கு இன்று காலை வாலிபர் ஒருவர் தனது தந்தை மற்றும் உறவினருடன் வந்தார். பின்னர் மனு கொடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை சோதனை செய்தபோது பெட்ரோல் கேன் இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்த போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து உட னடியாக பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த னர்.

    அந்த வாலிபரிடம் விசா ரணை நடத்திய போது, விருத்தாச்சலம் முதனை கிராமத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி என்பது தெரிய வந்தது.அவர் போலீசாரிடம் கூறியதாவது:-எங்களது இடத்தில் திடீரென்று அத்துமீறி சிமெண்ட் சாலை அமைத்து விட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சிமெண்ட் சாலை அமைத்த இடம் எங்க ளுக்கு சொந்தமான இடம். அதனால் அதிகாரிகள் உரிய அளவீடு செய்து நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி எங்கள் இடத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார். பின்னர் தாசில்தார் பலராமன் அந்த வாலிபரி டம் இருந்த மனுவை பெற்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத் தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×