என் மலர்
கடலூர்
- இவர் செல்போனில் அதிகமாக பேசிக் கொண்டு இருந்ததால் கணவர் தங்கவேல் கண்டித்துள்ளார்.
- உறவினர்கள், ேதாழிகள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
கடலூர்:
கடலூர் பனங்காட்டு காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி ரஞ்சிதா (31). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடம் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். ரஞ்சிதா புதுவை மாநிலம் கன்னிய கோவிலில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் செல்போனில் அதிகமாக பேசிக் கொண்டு இருந்ததால் கணவர் தங்கவேல் கண்டித்துள்ளார்.
இதனால் ரஞ்சிதா கோபித்து கொண்டு வில்வநகர் பாப்பா தோட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ரஞ்சிதா பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், ேதாழிகள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து ரஞ்சிதாவின் கணவர் தங்கவேலு புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ரஞ்சிதாவை தேடி வருகிறார்கள்.
- கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், தி.மு.க. நிர்வாகி ராஜேஷ் மற்றும் பலர் அங்கு திரண்டு இருந்தனர்.
- வருங்காலங்களில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மார்க்கெட் அருகே ஏராளமான கடைகள் இருந்து வருகின்றன. இதில் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதன் பழக்கடையும் உள்ளது. தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதனின் கடை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி கடலூர் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையிலான ஊழியர்கள் ஜே.சி.பி. மூலம் இடிப்பதற்காக இன்று காலையில் சென்றனர். தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதனுக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், மகேஸ்வரி விஜயகுமார், பாரூக் அலி, கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், தி.மு.க. நிர்வாகி ராஜேஷ் மற்றும் பலர் அங்கு திரண்டு இருந்தனர். கடையை இடிப்பதற்காக வந்த நகரமைப்பு அலுவலர் முரளியிடம், மஞ்சக்குப்பம் சாலையானது தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மாநகராட்சி சார்பில் கடை ஆக்கிரமிப்பில் உள்ளதாக எப்படி கூறுகிறீர்கள்? இடிப்பதற்கு யார் உங்களுக்கு அனுமதி அளித்தனர்? ஒரு சிலருக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறும் கடையை இடிப்ப தற்கு அனுமதிக்க மாட்டோம் என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவியை செல்போனில் தொடர்பு கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் வந்தது குறித்து தெரிவித்தனர். உடனடியாக உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளுக்கு விரைவில் நோட்டீஸ் வழங்கி இடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். குறிப்பிட்ட கடைகளை மட்டும் இடிக்க மாட்டோம். ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பில் இருக்கும் இடங்களை கண்டறிந்து அகற்றப்பட உள்ளோம். தற்போது இந்த நடவடி க்கையை நெடுஞ்சாலைத் துறை எடுக்கவில்லை. வருங்காலங்களில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவோம் என திட்டவ ட்டமாக தெரிவித்தார். அப்போது அங்கு இருந்த தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பதற்கான உள்நோக்கம் என்ன? அதுவும் ஒரு கடையை மட்டும் இடிப்பதற்கு ஏன் வந்து உள்ளீர்கள்? என்று மீண்டும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். மேலும் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் மாநகராட்சி யை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கடும் எச்சரிக்கையும் விடுத்தனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் ஆளும் தி.மு.க. கவுன்சிலர் கடையை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்,தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோர் நேரில் வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர்.
- மேயர் சுந்தரி ராஜா, 21 தி.மு.க. கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக் கொண்டார்
கடலூர்:
கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி ராஜா, துணை மேயராக தாமரைச்செல்வன் இருந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மாநகரா ட்சி மேயர் தேர்தலில் சுந்தரி ராஜா போட்டியிட்டு கவுன்சிலர்கள் வாக்களித்து வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்றார் . இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம், கடலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்,தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோர் நேரில் வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரை ச்செல்வன் துணை மேயர் தேர்தலில் போட்டி யின்றி தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டடார். எங்கள் வார்டு பகுதிகளில் தொடர்ந்து துணை மேயர், வார்டு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார்கள் வந்துள்ளது. இதன் காரணமாக வருகின்ற மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, 21 தி.மு.க. கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக் கொண்டார் . தி.மு.க.தலைமை மற்றும் மாவட்ட செயலாளர் எடுக்கும் முடிவு இறுதியானதாகும் என தெரிவித்தார். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வருகின்றன. தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரே துணை மேயராக தாமரைச்செல்வன் மட்டும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென்று துணைமேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என போர்கொடி தூக்கி புகார் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பூர்ணிமா விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- பூர்ணிமா என்ன ஆனார் ? எங்கு சென்றார் ? யாரேனும் இவரை கடத்தி சென்றனரா ?
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் பூர்ணிமா (வயது 18). இவர், விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பூர்ணிமாவை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பூர்ணிமாவின் தந்தை பாஸ்கரன் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல்ேபான பூர்ணிமா என்ன ஆனார் ? எங்கு சென்றார் ? யாரேனும் இவரை கடத்தி சென்றனரா ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேனை எடுத்துச் சென்று வாடகைக்கு ஓட்டி விட்டு மீண்டும் வேன் ஸ்டேன்டிலேயே நிறுத்திவிடுவார்.
- யாருக்கும வேன் குறித்த தகவல் தெரியவில்லை.
கடலூர்டு
சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு (வயது 43). இவர் சொந்த மான வேன் வைத்துள்ளார். இந்த வேனை சிதம்பரம் மேம்பாலம் அருகில் உள்ள வேன் ஸ்டேன்டில் நிறுத்தி வைப்பார். சவாரி வரும் போது, வேனை எடுத்துச் சென்று வாடகைக்கு ஓட்டி விட்டு மீண்டும் வேன் ஸ்டேன்டிலேயே நிறுத்திவிடு வார். அதன்படி, நேற்று இரவு வேனை ஸ்டான்டில் நிறுத்தினார். அனைத்து கதவுகளை மூடி பூட்டு போட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று காலை வேன் ஸ்டேன்டிற்கு வந்து பார்த்தபோது வேனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு, தனது வேன் குறித்து ஸ்டேன்டில் இருந்த டிரைவர்கள் மற்றும் வேன் உரிமையாளர்களிடம் விசாரித்தார். யாருக்கும வேன் குறித்த தகவல் தெரியவில்லை. இது குறித்து வேன் உரிமையாளர் பிரபு சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வேன் கதவை உடைத்து, கள்ளச் சாவி போட்டு திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே கிராமப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பயங்கரமான வெடி சத்தம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தகவல் அறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுக்குப்பம், மேட்டுக்குப்பம், கீழக்குப்பம் கிராமங்கள் உள்ளன. இன்று பகல் 12 மணிக்கு இக்கிராமங்களில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. இதில் அப்பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் அதிர்ந்தன.
இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தனர். அப்போது வானத்தில் ஜெட் விமானம் சென்றது போன்று தெரிந்தது. இதையடுத்து இளைஞர்கள் தங்களின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிராமத்தை சுற்றினர். வெடி சத்தத்திற்கான காரணம் ஏதும் தெரியவில்லை.
மேலும், வானத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டம் அடித்ததாகவும், சிறிது நேரம் கழித்தே பயங்கரமான வெடி சத்தம் வந்ததாகவும் விவசாய நிலங்களில் பணி செய்த தொழிலாளர்கள் கூறினார்கள். இதனால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி வெடித்திருக்கலாம் என்றும் பொதுமக்கள் பேசி வருகின்றனர்.
இருந்த போதும் வீடுகள் அதிர்ந்ததற்கான காரணம் தெரியாமல் அப்பகுதி மக்கள் குழம்பி வருகின்றனர். இத்தகவல் அறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே கிராமப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பயங்கரமான வெடி சத்தம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உடனடியாக அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு உறுதியளித்தனர்.
- பண்ருட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
கடலூர்:
பண்ருட்டி அருகேயுள்ள சேமக்கோட்டையில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அங்கிருந்த பஸ் நிறுத்த நிழற்குடை அகற்றப்பட்டது. இதனை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு உறுதியளித்தனர். இருந்த போதும், சேமக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட வில்லை.
இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பண்ருட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தேவராஜ் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சேமக்கோட்டையில் விரைவில் பயணியர் நிழற்குடை கட்டித் தரபடுமென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற் கல்வி ஆசிரியர் அறைக்குள் சென்று பார்த்தனர்.
- விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள விளையாட்டு உபகர ணங்கள் வைக்கப்பட்ட அறையின் பூட்டு உடைக் கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற் கல்வி ஆசிரியர் அறைக்குள் சென்று பார்த்தனர். அறை யில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டி ருந்தது.
இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இரவு நேர காவலர் பணி யிடம் காலியாக உள்ளது. இதனால் இப்பள்ளி வளாகத்தில் இரவு நேரத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர். இதனைத் தொடர்ந்தே பள்ளியில் உள்ள விளை யாட்டு உபகரங்கள் வைக்கும் அறையில் நேற்று இரவு திருட்டு நடைபெற்றுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். பள்ளியில் திருடிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2022 -ம் ஆண்டு காடாம்புலியூர் கணபதி நகர் என்ற இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
- இதுவரை வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடம் எங்கு உள்ளது என்பதை அதிகாரிகள் காண்பிக்கவில்லை.
கடலூர்:
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் மாநில துணைத்தலைவர் ஆதி மூலம், சமூக அலுவலர் ஆல்பேட்டை பாபு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-பண்ருட்டி வட்டத்தில் உள்ள 13 கிராமத்தில் பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த 16 குடும்பத்தினருக்கு கடந்த 2022 -ம் ஆண்டு காடாம்புலியூர் கணபதி நகர் என்ற இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்தை அதிகாரிகள் நேரில் காண்பித்து அளவீடு செய்து கொடுக்க வில்லை. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்ததன் பேரில் நேற்று எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் இடுகாடும் மற்றும் இறந்த உடல்களை புதைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு செட்டிபாளையம், திடீர் குப்பம் உள்ளிட்ட 5 கிராமத்தை சேர்ந்த 66 குடும்பத்தினருக்கும், கரும்பூரை சேர்ந்த 8 குடும்பத்தினருக்கும் இதுவரை வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடம் எங்கு உள்ளது என்பதை அதிகாரிகள் காண்பிக்கவில்லை. ஆகையால் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி அரசு வழங்கிய இடத்தை காண்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து உட னடியாக பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.
- எங்களது இடத்தில் திடீரென்று அத்துமீறி சிமெண்ட் சாலை அமைத்துவிட்டனர்.
கடலூர், செப்.26-
கடலூர் கலெக்டர் அலு வலகத்திற்கு இன்று காலை வாலிபர் ஒருவர் தனது தந்தை மற்றும் உறவினருடன் வந்தார். பின்னர் மனு கொடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை சோதனை செய்தபோது பெட்ரோல் கேன் இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்த போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து உட னடியாக பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த னர்.
அந்த வாலிபரிடம் விசா ரணை நடத்திய போது, விருத்தாச்சலம் முதனை கிராமத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி என்பது தெரிய வந்தது.அவர் போலீசாரிடம் கூறியதாவது:-எங்களது இடத்தில் திடீரென்று அத்துமீறி சிமெண்ட் சாலை அமைத்து விட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சிமெண்ட் சாலை அமைத்த இடம் எங்க ளுக்கு சொந்தமான இடம். அதனால் அதிகாரிகள் உரிய அளவீடு செய்து நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி எங்கள் இடத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார். பின்னர் தாசில்தார் பலராமன் அந்த வாலிபரி டம் இருந்த மனுவை பெற்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத் தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- ஈஸ்ட்ராஜ் வீட்டு அருகில் புதுவையில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கிவந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
- ஈஸ்ட் ராஜாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தார்.
கடலூர்:
பண்ருட்டி கீழ்கவரப்பட்டு மாதா கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்ட்ராஜ் (வயது 46) என்பவர் தனது வீட்டு அருகில் புதுவையில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கிவந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை பண்ருட்டி எஸ்.டி.ஓ.க்ரைம் டீமை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீ சார் ஈஸ்ட்ராஜை பிடித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து ஈஸ்ட் ராஜாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தார்.
- திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி நேபாள வாலிபர் பலியானார்.
- சார்ஜ் ஸ்கூட்டரில் மின்சாரம் பாய்ந்து ஜீபன் பொன்மகர் இறந்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி நேபாள வாலிபர் பலியானார். நேபாளம் பியு தான் மாவட்டம் ஸ்வர்கத்வாரி பகுதியை சேர்ந்தவர் பேஸ் பகாதூர் பொன் மகர். இவரது மகன் ஜீபன் பொன்மகர் (வயது22) இவர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு பெருமலை சாலையில் உள்ளஓட்டலுக்கு சொந்தமான இருப்பிடத்திற்கு சென்று விட்டார். அவரது மாநிலத்தை சேர்ந்த கிஷோர் அதிகாரி நள்ளிரவு பார்த்தபோது ஜீபன் பொன்மகர் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகே எலக்ட்ரிக்கல் ஆட்டோ ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபடி இருந்துள்ளது. சார்ஜ் ஸ்கூட்டரில் மின்சாரம் பாய்ந்து ஜீபன் பொன்மகர் இறந்ததாக கூறப்படுகிறது.
அவரது தலையின் பின் பகுதியில் காயம் உள்ளது. எனவே அவர் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று திட்டக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜீபன் பொன்மகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






