என் மலர்
கடலூர்
- பக்கத்து வீட்டுக்குச் சென்று பேசி இருந்த பொழுது கணவர் சதீஷ் ஏன் அங்கெல்லாம் சென்று பேசுகிறாய்.
- வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஜெயசங்கரியை தேடி வருகின்றனர்
கடலூர்:
பண்ருட்டி மாளிகை மேடு புது காலனியை சேர்ந்தவர் சதீஷ்இவரது மனைவி ஜெயசங்கரி (வயது 35) இவர் கடந்த 26-ந் தேதி அன்று பக்கத்து வீட்டுக்குச் சென்று பேசி இருந்த பொழுது கணவர் சதீஷ் ஏன் அங்கெல்லாம் சென்று பேசுகிறாய் என்று கேட்டு திட்டியதால் ஜெயசங்கரி கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் கணவர் சதீஷ் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஜெயசங்கரியை தேடி வருகின்றனர்
- ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
- தகுதியான விண்ணப்பதாரருக்கு, தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12- ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னி ட்டு கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் அரசு விதிகளை கடைபிடித்து, இணையதளம் அல்லது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் சட்ட விதிகளை கடைப்பி டித்து பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகா ப்பான இடமாக தேர்வு செய்து, ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் கடையின் வரைபடம் , உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான அசல் பத்திரம்,உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில், இடத்தின் கட்டட உரிமையாளரிடம் ரூ.20 க்கான முத்திரைதாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமக்க ட்டணம் ரூ.500 அரசுக் கணக்கு தலைப்பில் செலு த்தியதற்கான அசல் செலான் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் விண்ண ப்பதாரர்கள், இ-சேவை மையத்தின் மூலம் இணைய தளத்தில் விண்ணப்பி க்கலாம். மேலும், இணையத ளத்தின் மூலம் விண்ணப்பி க்கப்படும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரருக்கு தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும்.மேலும், தற்காலிக பட்டாசுக் கடை வைக்க உரிமம் கோரும் விண்ணப்ப ங்களை 24 -ந்தேதி ஆம் தேதி மாலை 5.45 மணி வரை இ-சேவை மையத்தி ன் மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 24-ந் தேதிக்கு பின்னர் விண்ண ப்பிக்கும், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரருக்கு, தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- பூச்சி மருந்து குடித்து விட்டேன் என்று தனது அண்ணன் மகன் மனோகருக்கு செல்போனில் தேவேந்திரன் கூறியதாக கூறப்படுகிறது.
- பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி ரத்தினம் பிள்ளை மார்க்கெட்டில் ஜே. ஜே. ஜெயபால் என்பவர் காய்கறிகடை நடத்தி வருகிறார். இவரிடம் காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தாழம்பட்டை சேர்ந்த வியாபாரி தேவேந்திரன் (வயது 45 ) காய்கறி கடன் வாங்கிய பணத்தை கொடுக்கவில்லைஎன்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் ஜெயபால், தேவேந்திரனை அசிங்கமாக திட்டி அவரது3 சக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கிக் கொண்டு அடித்து விட்டதாககூறப்படுகிறது. இதனால் அவமானம் தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து விட்டேன் என்று தனது அண்ணன் மகன் மனோகருக்கு செல்போனில் தேவேந்திரன் கூறியதாக கூறப்படுகிறது. மனோகர் மற்றும் தேவேந்திரன் மகன்கள், உறவினர்கள் பண்ருட்டியில் உள்ள ஜே .ஜே. காய்கறி கடைக்கு சென்று உரிமையாளரிடம் கேட்டு பார்த்தும் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் தேவேந்திரன் மகன் ராஜதுரை புகார்கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன காய்கறி வியாபாரி தேவேந்திரனை தேடி வந்தனர் . இந் நிலையில் தேவேந்திரன் பண்ருட்டி- சென்னை சாலை எல். என் .புரம் டி .ஆர். வி. நகருக்கு செல்லும் வழியில் பூச்சி மருந்து குடித்து இறந்து கிடந்ததைபண்ருட்டி போலீசார்க ண்டுபிடி த்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவில் சந்தேகம் உள்ளது எனக் கூறியும், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரியும் காய்கறி வியாபாரி தேவேந்திரன்கு டும்பத்திற்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் உடலை வாங்க மறுத்து3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பண்ருட்டி, காடாம்புலியூர் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திவ ருகின்றனர். இதற்கிடையில் கடையின் உரிமையாளர் ஜெயபா லிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடுத்த கடனை கேட்டதற்காக வியாபாரி மீது கொலைப்பழி சுமத்துவதா? இந்த வழக்கை சட்டப்படி சந்திக்க போவதாக காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவரும் பண்ருட்டி நகர் மன்ற துணைத் தலைவருமான சிவா மற்றும் வியாபாரிகள்தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தன.
- நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது.
கடலூர்:
கடலூர்-மடப்பட்டு சாலை விரிவாக்க பணி நெடுஞ்சாலை துறை சார்பில் 230 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றது. இதில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை ஒரு கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒரு சிலருக்கு ஆதரவாக லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யாமல் ஒருபுறம் கால்வாய் அமைக்காமல் சாலை அமைத்து வருவதை கண்டித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதன்படி இன்று காலை நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், முன்னாள்விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லை வேந்தன், நகர அ.தி.மு.க. செயலாளர் காசிநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், சமூக ஆர்வலர் குமரவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் திருமாறன், த.வா.க, கார்த்திக், பகுதி குழு செயலாளர் ஜெய பாண்டியன், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி, நகர தலைவர் ரவிக்குமார், பா.ஜ.க நகர தலைவர் வேலுமணி, வர்த்தக சங்க அபுசலீம், ஆட்டோ, வேன், கார் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொது நல அமைப்புகள் அரசியல் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் உரிய முறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்து சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
- தசரதன் தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதில் தங்கிக் கொண்டு இருந்தா
- அங்கு வைக்கப்பட்டு இருந்த 6¼ பவுன் தங்க காசினை திடீரென்று காணவில்லை.
கடலூர்:
காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 43). சம்பவத்தன்று தசரதன் தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதில் தங்கிக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் தசரதன் வெளியில் சென்று விட்டு மீண்டும் தங்கிய அறையில் வந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த 6¼ பவுன் தங்க காசினை திடீரென்று காணவில்லை. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பத்குமாருக்கு சொந்தமாக அண்ணா கிராமத்தில் கரும்பு தோட்டம் உள்ளது.
- இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
அண்ணா கிராமம் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருக்கு சொந்தமாக அண்ணா கிராமத்தில் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் கரும்பு எரிந்து சேதமடைந்தது.இந்த தீ மேலும் அதே பகுதியை சேர்ந்த சத்திய நாராயணன் என்பவரது கரும்பு தோட்டத்திற்கும் பரவியது. இதனால் அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலை அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
- அவரது 3 சக்கர வாகனத்தின் சாவியை பிடிங்கிக் கொண்டு அடித்து விட்டதாக கூறப்படுகிறது.
- காணாமல் போன காய்கறி வியாபாரி தேவேந்திரனை தேடி வந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி ரத்தினம் பிள்ளை மார்க்கெட்டில் ஜெயபால் என்பவர் காய்கறிகடை நடத்தி வருகிறார் இவரிடம் காய்கறி வாங்கிய தாழம்பட்டை சேர்ந்த தேவேந்திரன் (வயது 45) என்பவர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் ஜெயபால், தேவேந்திரனை அசிங்கமாக திட்டி அவரது 3 சக்கர வாகனத்தின் சாவியை பிடிங்கிக் கொண்டு அடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவமானம் தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து விட்டேன் என்று தனது அண்ணன் மகன் மனோகருக்கு செல்போனில் தேவேந்திரன் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மனோகர், தேவேந்திரன் மகன்கள் மற்றும் உறவினர்கள் பண்ருட்டியில் உள்ள காய்கறி கடைக்கு சென்று உரிமையாளரிடம் கேட்டு பார்த்தும் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பண்ருட்டி போலீசாரிடம் காணாமல் போன தேவேந்திரன் மகன் ராஜதுரை (35) புகார் அளித்தார்.
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன காய்கறி வியாபாரி தேவேந்தி ரனை தேடி வந்தனர். காணாமல் போன காய்கறி வியாபாரி தேவேந்திரன் பண்ருட்டி சென்னை சாலை எல்.என்.புரம் டி.ஆர்.வி நகருக்கு செல்லும் வழியில் பூச்சி மருந்து குடித்து இறந்து கிடந்ததை பண்ருட்டி போலீசார் கண்டுபிடித்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தை சாவில் சந்தேகம் உள்ளது எனக் கூறி தேவேந்திரன் உடலை வாங்க மறுத்த மகன்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
- வடலூர் அருகே வாலாஜா ஏரியில் விஷம் கலந்த தானியங்களை வைத்து பறவைகளை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பழனி என்பவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் மயங்கி விழுந்து இறந்தன.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த மேலக்கொளக்குடி பகுதியில் உள்ள வயல் வெளிகளில், குறுவை நெல் அறுவடைக்கு பின் வாத்துக்களை மேய்த்து வந்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் மயங்கி விழுந்து இறந்தன. இதேபோல சம்பங் கோழிகளும், அபூர்வ பறவைகளும் அதே இடத்தில் இறந்து கிடந்தன. இது குறிந்து பன பறவை பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலாஜா ஏரி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.
விசாரணை நடத்தியபோது, அவர்கள் கையில் வைத்திருந்த பையில், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களில் குருணை மருந்து கலந்து வைத்திருந்தனர். உடனடியாக 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் கருங்குழியை சேர்ந்த பிரபாகரன் (வயது 36), அருள்தாஸ் (56), மேலக்கொளக்குடி பொங்கல்மாறன் (57) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் வாலாஜா ஏரிகளுக்கு வரும் குருவி, கொக்கு, நாரை, நீர்க்கோழி போன்றவைகளை பிடிப்பதற்காக தானியங்களில் மருந்து கலந்து வைத்ததும், அதனை உண்ட 200-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
- தினசரி பிரபல பேச்சாளர்களின் பட்டிமன்றம், சொற்பொழிவுகள், ஊக்க உரை நடக்கிறது.
- விழாவின் நோக்கமே மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் திறனை ஊக்குவிப்பதே ஆகும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டமாக பிரிந்து 30 ஆண்டுகள் ஆகிறது. அதனை அனுசரிக்கும் விதமாக "கடலூர் 30" என்ற தலைப்பில் "நெய்தல் புத்தக திருவிழா," 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி வரை கடலூர் சில்வர் பீச்சில் நடைபெறுகிறது. இதற்காக 45 புத்தக அரங்கு களும், அரசின் பல்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட அரங்கு களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு திட்டங்கள் குறித்த கொள்கை விளக்க பொருட் காட்சியும் அமைக் கப்பட்டுள்ளது. மேலும் மாணவ- மாணவிகளி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தினசரி பிரபல பேச்சாளர்க ளின் பட்டிமன்றம், சொற் பொழிவுகள், ஊக்க உரை நடக்கிறது.தினசரி மாலை 4 மணி முதல் 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் தினசரி 2,500 முதல் 3 ஆயிரம் மாணவர்கள் வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 28 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாண வர்களின் வசதிக்காக 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மூலம் பள்ளி களுக்கே சென்று மாண வர்களை ஏற்றிவரவும், விழா முடிந்ததும் மீண்டும் அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழாவின் நோக்கமே மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் திறனை ஊக்குவிப்பதே ஆகும்.
மேலும் இங்கு வரும் குழந்தைகளுக்காக அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், பல்வேறு விளையாட்டு போட்டிகள், தமிழர் கலாசாரத்தை பறை சாற்றும் வகையி லான கலைநிகழ்ச்சிகளும் நடை பெறும். புத்தக திருவிழா வுக்கு வருபவர்களின் வசதிக்காக மொபைல் டாய்லெட், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து கொடுக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடலுக்கு செல்லாத வகை யில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுவார்கள். புத்தக திருவிழாவையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படா மல் தடுக்கும் வகையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உடனிருந்தார்.
- தயிர், சந்தனம் , பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது.
- கோவிலை வலம் இடமாகசுற்றி வந்துவிளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
கடலூர்:
திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 4மணிக்கு மூலவர் வீரட்டானே ஸ்வரர்க்கு பால், தேன், தயிர், சந்தனம் , பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை நடைபெற்றது. கூடவே சிவனின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. நந்தியின் 2 கொம்புகளுக்கிடையே தரிசின காட்சி காணும் வைபவம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுகாகவும் பிரதோஷ கால சுற்று முறையில் கோவிலை வலம் இடமாகசுற்றி வந்துவிளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதில் செயல் அலுவ லர் தின்ஷா மற்றும் உற்சவ தாரர்கள், சிவனடி யார்கள், சிவதொண்டர்கள் கலந்து கொண்டு இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
- டெப்போவில் ஏலம் விடப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட பழைய பஸ்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
- பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் தீப்பிடித்தற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கும்பகோணம் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ இயங்கி வருகிறது.
கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் இந்த டெப்போவில் இருந்துதான் தினமும் சென்று வருவது வழக்கம்.
இந்த டெப்போவில் ஏலம் விடப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட பழைய பஸ்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
தற்போது இந்த பழைய பஸ்களில் இருந்து உபயோகமான பொருட்களை வெல்டிங் வேலை ஆட்கள் மூலம் பிரித்து எடுத்து வந்தனர். நேற்று இந்த வெல்டிங் வேலை நடந்தது. பின்னர் மாலையில் வேலை முடிந்து வெல்டிங் வேலை ஆட்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
நள்ளிரவு 12 மணிக்கு டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டு வெல்டிங் வேலை பார்க்கப்பட்ட பழைய பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவி அந்த பஸ் முழுவதும் எரிந்தது சேதமானது. மேலும் இந்த தீ அருகில் இருந்த 3 பஸ்களுக்கும் பரவி அந்த பஸ்களின் முன்பகுதி சேதமானது. இதனால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதை பார்த்த டெப்போவில் இருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து டெப்போ அதிகாரிகளுக்கும், பண்ருட்டி தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை அதிகாரி வேல்முருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருகில் இருந்த மற்ற பஸ்களுக்கு தீ பரவாமல் போராடி தீயை அணைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் தீப்பிடித்தற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெப்போவில் இருந்த பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி சில்வர் பீச் வரை சென்று முடிவடைந்தது.
கடலூர்:
கடலூர் 30 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் சில்வர் பீச்சில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்தல் புத்தக திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அக்டோபர் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நெய்தல் புத்தக திருவிழா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை கடலூரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு சிவா வரவேற்றார். மினி மாரத்தான் போட்டி கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி சில்வர் பீச் வரை சென்று முடிவடைந்தது. இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள் பாபு, சுபாஷினி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.






