என் மலர்tooltip icon

    கடலூர்

    • சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி தன்வந்திரி பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழ மையையொட்டி சிறப்பு வழிபாடுநடந்தது. மூலவர்தன்வந்திரி பகவான் திருப்பதி சீனிவாசனாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சிறப்பு வழி பாட்டில் பட்டிமன்ற பேச்சா ளர் ராஜா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.அவருடன் பட்டிமன்ற குழுவினரும் வந்து சாமிதரிசனம்செய்தனர். இவர்களை பண்ருட்டி ஆரிய வைசிய சமூகத்தினர் வரவேற்றனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
    • சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துக் கிருஷ்ணா புரம் காலனியை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (வயது27), அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் என்கிற யுவராஜ் இவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கோவில் உண்டியலை கத்தியால் சேதப்படுத்தினர். இவர்களை அந்த பகுதியை சேர்ந்த நாட்டாமை சங்கர் (வயது 45) தட்டிக் கேட்டார். ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் நாட்டாமை சங்கரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர். காயமடைந்த நாட்டாமை சங்கர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மாரி முத்து, யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் புதிய பஸ் நிலையத்தை கடலூரின் மையப்பகுதியில் அமைக்க வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் மாயவேல், முனுசாமி, ராஜேந்திரன், கல்யாண குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பொது செயலாளர் தேவநாதன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி, திருமார்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

    தலைவர் பாலு பச்சையப்பன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டமை ப்பின் சிறப்பு தலைவர் மருதவாணன் பேசினார். இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜசேகரன், பன்னீர்செல்வம், செல்வகணபதி, கோமதிநாயகம், கோபால், பாஸ்கர், காசிநாதன், தில்லைநாயகம், வீராசாமி நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ரமணி நன்றி கூறினார். 

    • புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
    • கார் ஜாக்கி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை என தெரிய வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பிரித்து 30 ஆண்டுகள் ஆன நிலையில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அருகிலேயே அரசின் பல்துறை விளக்க கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. 11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்காக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் இந்த பகுதியில் பந்தல் அமைப்பாளர்கள் கொண்டு வந்த நாற்காலிகள் மற்றும் கார்பெட், கார் ஜாக்கி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை என தெரிய வருகிறது. இந்த பொருட்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தான் எடுத்திருக்க வேண்டும் என பொருள் உரிமையாளர்கள் போலீசில் தெரிவித்தனர். தேவனாம்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த பொருட்களை எடுத்து இருக்கலாம் என்பதால் அந்த கிராமத்தை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தில் இதுகுறித்து போலீசார் தெரிவித்தனர். மீனவ பஞ்சாயத்தார் இதுகுறித்து இன்று ஆட்டோ ஒன்றில் ஒலிபெருக்கி கட்டி தெரு தெருவாக அந்த பொருட்களை யாராவது எடுத்து இருந்தால் அதே இடத்தில் வைக்க வேண்டுகோள் விடுத்தனர்.

    நமது ஊர் கடற்கரையில் புத்தக கண்காட்சி நடைபெற்ற இடத்தில் இருந்து காணாமல் போன பொருட்களை எடுத்தவர்கள் மீண்டும் அதே இடத்தில் சென்று வைத்து விடுங்கள் . போலீசார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டால் ஊர் நிர்வாகம் இதற்கு பொறுப்பாகாது என்ற அறிவிப்பை தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தனர்.

    • 1000 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
    • ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலுார் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் நாளை( 1 ந்தேதி) முதல் தினசரி 1000 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் நாளை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் 126 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறு உபாதைகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்திடவும், தேவைப்படுபவர்களுக்கு மேல் சிகிச்சைக்கான பரிந்து ரையும் அளித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் களப்பணியாள ர்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று காய்ச்சல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு காய்ச்சல் பாதித்தவர்கள்சி கிச்சைக்காக மருத்துவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இதுமட்டுமன்றி உள்ளா ட்சியின் மூலம் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொ ள்ளப்படும். மேலும் கொசுப்புழு பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று கொசுப்புழு அளித்தல், புகை மருந்து அடித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதிசெய்யும் விதமாக உள்ளாட்சிகள் மூலம் மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்தல் குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்தல், குழிகுழாயினை அப்பு றப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும். பள்ளி மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு தேவைப்படும் சிகிச்சை அளிக்கப்படும். மேலும் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வராமல் இருக்கும் பள்ளி மாணவர்கள் குறித்த விவரத்தினை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொரு ட்டு அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவல ர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆகவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி காய்ச்சல் மருத்துவ முகாமில் பங்குபெற்று சிகிச்சை மேற்கொள்ள கேட்டு க்கொள்ள ப்படுகிறது. மேலும் டெங்குவை பரப்பும் கொசுவின் உற்பத்தியினை கட்டுப்படுத்திட தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்பு றத்தினை தூய்மையாக வைத்திடவும், காய்ச்சல் ஏற்பட்டால் சுய சிகிச்சை பெறுவதையும், மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கி உட்கொள்வதையும் தவிர்த்திட வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 250 வீடுகள் கடந்த ஆண்டு அதிரடியாக அகற்றப்பட்டது.
    • கூரை வீடுகளுக்கு மின்கம்பத்திலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து உபயோகித்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி களத்து மேட்டு ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த 250 வீடுகள் கடந்த ஆண்டு அதிரடியாக அகற்றப்பட்டது. இதில் 25 குடும்பங்கள் வேறு இடத்திற்கு செல்லா மல் அதே இடத்தில்வசித்து வந்தனர். இவர்கள் தங்கி இருந்த கூரை வீடுகளுக்கு மின்கம்பத்திலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து உபயோகித்து வந்ததாக கூறப்படுகிறது.இது பற்றி தகவல் அறிந்ததும்பண்ருட்டிமின்வாரியஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுத்த வர்களை எச்சரித்து மின் இணைப்புகளை துண்டித்த னர். இதனைக் கண்டித்து பண்ருட்டி களத்து மேட்டு தெருவை சேர்ந்த மகாரா ஜன் மனைவி அமலாதலை மையில் பண்ருட்டி மடப் பட்டு ரோடுகளத்து மேடு பஸ் நிறுத்தம் அருகில் திடீர்சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பண்ருட்டி- மடப்பட்டு சாலையில் போக்கு வரத்து பாதித்தது .இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் சுமூகத்தீர்வு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்கு வரத்து பாதித்தது.

    • பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது.
    • கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் பூஜை சில நாட்களுக்கு முன்பு முடிந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலையில் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் வேறு இடத்தில் சிதறி கிடந்தது.

    மேலும் கோவிலின் கலசத்தை எடுத்து பக்கத்தில் வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சேத்தியாதோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கோவில் உண்டியலில் இருந்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவதிகையில் அமைந்துள்ளது சரநாராயண பெருமாள் கோவில்.
    • இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அமைந்து ள்ளது சரநாராயண பெரு மாள் கோவில். இது திருமண வரம் அருளும் வைணவ தலமாக திகழ்கி றது. இந்த கோவில் இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடலூர், விழுப்பு ரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி கும்பிட்டு செல்வார்கள். இங்கு கடந்த 18-ந் தேதி முதல் புரட்டாசி மகோற்ச வம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மூலவர் சரநாராயண பெருமாள் திருமலை திருப்பதி மலையப்பனாக நெய் தீப ஒளியில் அருள்பாலித்து வருகிறார்.

    இங்கு புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் திருமலையில் நடைபெறும் அனைத்து சேவைகளும் நடக்கிறது. நேற்று ஏகதின பிரம்மோற்சவம் நடைபெ ற்றது. காலை 6 மணி அளவில் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் ஆகியவையும், 7 மணிக்கு பிரம்மோற்சவ கொடியே ற்றமும் நடந்தது. தொடர்ந்து 10 வாகனங்களில் சர நாரா யண பெருமாள் எழுந்தருளி ஏகதின பிரம்மோற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவி ந்தா" என்ற பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதனை தொட ர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • முத்துக்கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து.
    • கோவில் உண்டியை கத்தியால் சேதப்படுத்தினர் .

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துக்கி ருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது30) ,அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர்கள் இருவரும் நேற்று மாலை 6 மணி அளவில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு குடிபோதையில் அந்த வழியாக வந்த வாகனங்க ளை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டு ள்ளனர். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கோவில் உண்டியை கத்தியால் சேத ப்படுத்தினர் .இவர்களை அந்த பகுதியை சேர்ந்த நாட்டாமை சங்கர் (வயது 45) தட்டிக் கேட்டுள்ளார்.

    ஆத்திரம் அடைந்த போதை ஆசாமிகள் 2 பேரும் சங்கரை சரமாரி யாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். காயமடைந்த சங்கர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய போதை ஆசாமிகளை தேடி வருகிறார்.

    • பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடந்த சில நாட்களாக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சாத்தனூர்அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி யதால் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீ ரின் அளவும் அதிகரிக்க ப்பட்டது.

    அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் பிரதான மதகுகள் வழியாக திறந்துவி டப்பட்டு ள்ளதால் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகா ப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொது ப்பணி த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், பொது ப்பணித்து றை, வருவாய்த்து றையினர் மற்றும் காவல்து றையினர் மூலம் கண்காணி ப்பு பணிகளும் தீவிரப்ப டுத்தப்பட்டு ள்ளது. தொட ர்ந்து பெய்யும் மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என பொது ப்பணித்துறை அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    • மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.
    • இந்த விபத்தில் பணிமனையில் சுற்றுச்சு வர் மற்றும் இரும்பு கதவு உடைந்து சேதம் அடைந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டையில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கடலூர் இம்பீரியல் சாலையில் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரசு வாகனங்களின் பழுது நீக்கும் பணிமனையின் சுற்றுச்சுவர் மீது மோதி பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பணிமனையில் சுற்றுச்சு வர் மற்றும் இரும்பு கதவு உடைந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இது குறித்து கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு வந்தனர்.
    • பின்னர் உடனடியாக ஆம்புலன்சுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்ப ட்டினத்தில் நெய்தல் புத்தகத் திருவிழா இன்று தொடங்கப்பட்டது. வருகிற 9-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை ஏராளமான மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அரசு கல்லூரியை சேர்ந்த மாணவி மற்றும் பள்ளி மாணவி ஒருவர் என 2 பேர் திடீரென்று மயக்கம் அடைந்தனர். அப்போது அங்கு இருந்த தோழிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி டைந்தனர். பின்னர் உடனடி யாக ஆம்புலன்சுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×