பண்ருட்டி அருகே ரூ.10லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் பறிமுதல்

மது விற் பனை நடைபெறுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுரூ.38,௬௮௦ ஆகியவற்றை கைப்பற்றி காடாம்புலியூர் போலீசில் ஒப்படை த்தனர்.
பண்ருட்டி அருகே ரூ.10லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் பறிமுதல்
Published on

கடலூர்:

பண்ருட்டி ஒன்றியம் முத்தாண்டி குப்பம் அடுத்த வல்லம் பஸ்நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மது விற் பனை நடைபெறுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத்தொடர்ந்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி படை போலீசார் சோதனை செய்த தில் ரூ10லட்சம் மதிப்பிலான 1,245 மது பாட்டில்கள்மற்றும் பணம் ரூ.38,680ஆகியவற்றை கைப்பற்றி காடாம்புலியூர் போலீசில் ஒப்படை த்தனர்.காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பாப்பன் கொல்லை குமார் ,அருள்முருகன்ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com