குறிஞ்சிப்பாடியில்பேக்கரியில் பணம் திருடிய இலங்கை அகதி கைது

கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வர் ராம மூர்த்தி20 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
குறிஞ்சிப்பாடியில்பேக்கரியில் பணம் திருடிய இலங்கை அகதி கைது
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வர் ராம மூர்த்தி (வயது 42). இவர் அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் தனது பேக்கரியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது.பேக்கரியின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டு அங்கிருந்த 20 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி சப்- இன்ஸ்பெக்டர் வேல் குமார் தலைமையில் அதே பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது, முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்த தால் அவரிடம் போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டனர். அவர் குறிஞ்சிப்பாடி இலங்கை அகதி முகாமில் தங்கி உள்ள இலங்கை அகதி ரிஷி என்கிற ரதுஷன் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் பேக்கரி கடையில் பணம் மற்றும் லேப்டாப் திருடியதும் தெரிய வந்தது. போலீசார் ரிஷியை கைது செய்தனர். இந்த கொள்ளையில் மற்றொரு நபரும் ஈடுபட்டு இருப்பதால் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com