என் மலர்
கடலூர்
- சாலையின் அருகில் மின் ஒயர் இருந்ததால் உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலிருந்து புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்கு சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.
இதனை டிரைவர் பிரபாகரன் ஓட்டிச் சென்றார். இந்த லாரி ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டு பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது லாரியின் பின் பகுதியில் திடீரென்று தீ ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் மளமளவென தீப்பரவி லாரி முழுவதும் எரிய தொடங்கியது. டிரைவர் பிரபாகரன் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சாலையில் நடுவே லாரியை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக இறங்கி தப்பி ஓடினார்.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் டீசல் டேங்க் அருகே தீ பற்றி பெரிய அளவில் எரிய தொடங்கியது. இதனை பார்த்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சாலையின் அருகில் மின் ஒயர் இருந்ததால் உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இதில் லாரி முழுவதும் எரிந்து தீக்கரையானது. மேலும் லாரியில் இருந்த சிமெண்ட் மூட்டைகளும் தீ விபத்தில் எரிந்து நாசமானது.
சென்னை-நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து இருந்து வரும் நிலையில், நடு ரோட்டில் லாரி எரிந்த காரணத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
லாரி திடீரென்று எப்படி எரிந்தது? காரணம் என்ன? என ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிராமப்புறம் மூலமாக தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது என தெரிவித்துள்ளார்.
- புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் லால்புரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் தலைமை தாங்கினார். கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, கிராமப்புறம் மூலமாக தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இக்கிராமத்தில் அனைவரும் பாராட்டக்கூடிய செயல் ஒன்று நடைபெற்று உள்ளது. இதில் 1958 வீடுகளில் 1946 வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிகவும் பாராட்டுக்குரிய செயலாகும். மேலும் பொது வெளியில் கழிப்பறைக்கு செல்லாமல் பாதுகாப்பான முறையில் வீடுகளில் உள்ள கழிப்பறையில் செல்லும் போது சுகாதாரம் பேணிக் காக்கப்படும். மேலும் இந்த பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
இதன் மூலம் நகரப் பகுதி விரிவாக்கம் அடைவதோடு இந்த பகுதி பொருளாதார அடிப்ப டையில் முன்னேறக்கூடிய நிலை உருவாகி உள்ளது. இது மட்டும் இன்றி பஸ்நிலையம் அமைப்பதால் இந்த பகுதி வளரக்கூடிய மையமாக மாறக்கூடும். வருங்காலங்களில் லால்பு ரம் பெரிய நகரமாக மாறுவ தற்கு ஏதுவாக அமையும் . இது மட்டுமின்றி பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை நீர் சேகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு ஊராட்சி முழுவதும் சுகாதா ரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊராட்சி துணை இயக்குனர் சபனா அஞ்சும் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- நகர்புறங்களில் மாவட்டம் முழுவதும் 126 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்து.
- 1000 -க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பணியாளர்க ளும் இம்முகாமில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 15 தினங்களாக பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள காய்ச்சலை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார துறையும் மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கிராம மற்றும் நகர்புறங்களில் மாவட்டம் முழுவதும் 126 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்து. இதற்காக மாவட்டதில் பல்வேறு திட்டங்களிலுள்ள 52 நடமாடும் மருத்துவ குழுவினரும், 1450 சுகாதார துறை ஊழியர்களும், 727 கொசு புழு தடுப்பு பணியாளர்களும். 1000 -க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பணியாளர்க ளும் இம்முகாமில் ஈடுபடு த்தப்பட்டனர். கடலூர் ஒன்றியம் பச்சையா ன்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மருத்துவ முகாம்கள் நடத்தும் 25 நடமாடும் மருத்துவ வாகனங்களை கொடி அசைத்து தொடக்கி வைத்ததுடன் 25 புகைதெளிப்பு எந்திர இயக்கங்களையும் கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார். மேலும் ஊராட்சிகள் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணியினை மேற்கொண்டும், 727 கொசு தடுப்பு பணியாளர்களை க்கொண்டு கொசு புழு அழித்தல், புகை மருந்து தெளிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் முகாம் பகுதிகளிலுள்ள மேல் நிலை தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளோரி னேசன் செய்யப்பட்டது.
- மது விற் பனை நடைபெறுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
- ரூ.38,௬௮௦ ஆகியவற்றை கைப்பற்றி காடாம்புலியூர் போலீசில் ஒப்படை த்தனர்.
கடலூர்:
பண்ருட்டி ஒன்றியம் முத்தாண்டி குப்பம் அடுத்த வல்லம் பஸ்நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மது விற் பனை நடைபெறுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத்தொடர்ந்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி படை போலீசார் சோதனை செய்த தில் ரூ10லட்சம் மதிப்பிலான 1,245 மது பாட்டில்கள்மற்றும் பணம் ரூ.38,680ஆகியவற்றை கைப்பற்றி காடாம்புலியூர் போலீசில் ஒப்படை த்தனர்.காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பாப்பன் கொல்லை குமார் ,அருள்முருகன்ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சவுமியாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம்.
- மனம் தவழ்ந்த புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் .
கடலூர்:
பண்ருட்டி அடுத்த ஒறையூர் பலாப் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திரு ஞானம் .விவசாயி. இவரது மனைவி சவுமியா (வயது 27). இவர்களுக்கு திருமணம் ஆகி 2மகன்கள்உள்ளனர்.சவுமியாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த சவுமியா வீட்டில் யாரும் இல்லாத போது புடவை துணியால் தூக்கு போட்டுக் கொண்டார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மனம் தவழ்ந்த புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் . அங்கு இவரை பரிசோதித்த டாக்டர் , சவுமியா இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சவுமியா உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துஇது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 4 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கு
- மரவள்ளி கிழங்கு முழுவதும் எரிந்து.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி டி. பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியனுக்கும் முன்விரோத தகராறு இருந்து வருகிறது. இந்த முன் விரோதம் காரணமாக ஜெயராமனுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்குவை, சம்பவத்தன்று சுப்பிரமணியன் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதில் 4 ஏக்கர் மரவள்ளி கிழங்கு முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ஆகும். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முந்திரி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தார்.
- 2 பேர் உள்பட 4 பேர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த வல்லம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர்கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் அன்புச்செல்வன் (வயது 23) இவர் மேல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த பட்டுராசா மகன் சிவமணி யிடம்கடனாக முந்திரி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தார்.
தற்போது சொந்தமாக வாகனம் வாங்கி முந்திரி பயிர்ஏற்றி வருகிறார். இதனால் இவர்களுக்குள் தொழில் ரீதியாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அன்புச்செல் வனை சிவமணி, வெங்கடேசன் மற்றும் 2 பேர் உள்பட 4 பேர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த அன்புச்செல்வன் பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து மேல்மேட்டுக்குப்பம்சிவமணி, வெங்கடேசன்ஆகிய இருவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர்.
- விருத்தாசலம் தர்மநல்லூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழ்வாணன்
- பஸ்சில் பின்பக்க படியில் நின்று பயணம் செய்தார்.
கடலூர்:
விருத்தாசலம் தாலுக்கா தர்மநல்லூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 25). இவர் தனியார் பஸ்சில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே பஸ்சில் பின்பக்க படியில் நின்று பயணம் செய்தார். அப்போது எறும்பூர் பணஞ்சாலை அருகே வளைவில் பஸ் திரும்பிய போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தமிழ்வா ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது.
- பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.
கடலூர்:
திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமிக்கு மக்கள் நலன் பெற வேண்டி பால், தயிர், மஞ்சளால் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. 12 மணி அளவில் மூலவர் சஞ்சீவி ராய பெருமாளுக்கு மகா தீபாரதனை நடந்தது.
மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட சஞ்சீவி ராய பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளித்தார். மேலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தா்கள் மாவிளக்கு ஏற்றியும், சக்கரை பொங்கல், சுண்டல் வைத்து பெரு மாளுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.
இதேபோல் திட்டக்குடி, ராமநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வர் ராம மூர்த்தி
- 20 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வர் ராம மூர்த்தி (வயது 42). இவர் அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் தனது பேக்கரியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது.பேக்கரியின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டு அங்கிருந்த 20 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி சப்- இன்ஸ்பெக்டர் வேல் குமார் தலைமையில் அதே பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.
அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது, முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்த தால் அவரிடம் போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டனர். அவர் குறிஞ்சிப்பாடி இலங்கை அகதி முகாமில் தங்கி உள்ள இலங்கை அகதி ரிஷி என்கிற ரதுஷன் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் பேக்கரி கடையில் பணம் மற்றும் லேப்டாப் திருடியதும் தெரிய வந்தது. போலீசார் ரிஷியை கைது செய்தனர். இந்த கொள்ளையில் மற்றொரு நபரும் ஈடுபட்டு இருப்பதால் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
- மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.
கடலூர்:
சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக 85-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வருகிற 4-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை பெறுகிறது. விழாவிற்கு பல்கலைக் கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.
இதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தரு மான பொன்முடி பங்கேற்று பேசுகிறார். மேலும், இஸ்ரோ ஆராய்ச்சி மைய சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பட்டமளிப்பு விழா உரை யாற்றுகிறார். விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் ராம.கதிரேசன், பதி வாளர் சிங்காரவேல் மற்றும் சிண்டிகேட் உறுப்பி னர்கள், புல முதல்வர்கள் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.
- ஏரிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ் விவசாயி.
- புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை ஏரிப்பா ளையத்தை சேர்ந்தவர் ராம தாஸ் (வயது 56). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது அங்குசெட்டிபாளையம் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் அருகே சென்ற போது, எதிரில் வந்த ஆட்டோ விவசாயி மீது மோதியது.
இதில் பலத்த காயம டைந்த விவசாயி ராமதாசை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு விவசாயி ராமதாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்து போனார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






