என் மலர்tooltip icon

    கடலூர்

    • சினேகா கடந்த சில வருடங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
    • அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்தவர் சினேகா (வயது 21). பட்டதாரி. இவருக்கு கடந்த சில வருடங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் அவதியுற்று வந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியினை தாங்க முடியாமல் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றிக் கொண்ட சினோகா தீ வைத்துக் கொண்டார்.

    அப்போது சினேகாவில் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்றனர். அங்கு தீயில் கருகிய நிலையில் இருந்த சினேகாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி சினேகா நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் விவகாரம் பற்றி அறிந்த மகாலட்சுமியின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மணப்பெண் மகாலட்சுமி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடியை சேர்ந்தவர் மனோகரன் மகள் மகாலட்சுமி (வயது 19). இளங்கலை படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் தமிழ்வாணன் (24) என்பவரும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பற்றி அறிந்த மகாலட்சுமியின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேறொரு வாலிபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    இதனால் மனமுடைந்த மகாலட்சுமி நேற்று தமிழ்வாணனுடன் வீட்டை விட்டு வெளியேறி, திருவந்திபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மணக்கோலத்தில் இருவரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். மணப்பெண் மகாலட்சுமி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    அதில் உள்ளதாவது, எனக்கும், தமிழ்வாணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது பெற்றோர் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் எனக்கும், தமிழ்வாணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மணக்கோலத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரின் உடலை ஏற்றிக் கொண்டு பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்
    • 75 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென சாலையை கடக்க முயன்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 30)ஆம்புலன்ஸ் டிரைவர். இவர்,நேற்று இரவு பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் ஓடப்பன்குப்பத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரின் உடலை ஏற்றிக் கொண்டு பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார். இரவு சுமார் 8 மணி அளவில் கொஞ்சி குப்பம் அய்யனார் கோவில் அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக சைக்கிளில் வந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத வகையில் ஆம்புலன்ஸ் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த முதியவர் அதே ஆம்புலன்சில் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆம்புலன்ஸ் மோதி பலியான முதியவர் கொஞ்சிகுப்பத்தை சேர்ந்த ஏழுமலை (75) எனவும், இவர் அதே பகுதியில் சைக்கிளில் சென்று பாட்டில்கள் பொறுக்கி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய ஆம்புலன்சை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த ராமலிங்கத்தின் உடலை வேறு ஒரு ஆம்புலன்சில் ஏற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • அண்ணாமலை பல்கலைகழக சாஸ்திரி அரங்கில் நடைபெறும் 85-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவியின் வருகையொட்டி புதுவை மாநிலம், கடலூர் மாவட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தின் 85-வது பட்டமளிப்பு விழா இன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். இதற்காக கவர்னர் நேற்று இரவு சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக அண்ணாமலை பல்கலைகழக விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவரை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜசேகரன், சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், அண்ணாமலை பல்கலைகழக துணை வேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல்,தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    நேற்று இரவு அண்ணாமலை பல்கலைகழக விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதனைதொடர்ந்து இன்று காலை அண்ணாமலை பல்கலைகழக அரங்கில் பதக்கம் பெறும் மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பின்னர் காரில் அங்கிருந்து புறப்பட்டு காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆதனூர் கிராமத்திற்கு சென்றார்.

    காட்டுமன்னார்கோவில் அருகே மா.ஆதனூர் செல்லும் வழியில் பெரியகுளம் பகுதியில் கவர்னருக்கு கருப்புகொடி காட்டுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினர் திரண்டு இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கவர்னர் ஆதனூர் சென்று அங்கு நடைபெற்ற நந்தனார் குருபூஜையில் பங்கேற்றார். விழா முடிந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.

    பின்னர் அண்ணாமலை பல்கலைகழக சாஸ்திரி அரங்கில் நடைபெறும் 85-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்.

    பட்டமளிப்பு விழா முடிந்து மாலை 5.30 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி வழியாக சென்னை செல்கிறார். கவர்னர் ஆர்.என்.ரவியின் வருகையொட்டி புதுவை மாநிலம், கடலூர் மாவட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • ராமலிங்கம் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் பெட்ரோல் நிலையத்துக்கு வரவில்லை.
    • பிரேத பரிசோதனைக்காக ண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த ஒடப்பன் குப்பத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 31). திருமணம் ஆகாதவர். இவர்வீரசிங்கன் குப்பத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்ஒன்றில்வேலை செய்து வந்தார். நேற்று பிற்பகல் 12 மணி அளவில் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் பெட்ரோல் நிலையத்துக்கு வரவில்லை.

    இதற்கிடையில் வீட்டு தோட்டத்தில் உள்ள முந்திரி மரத்தில் ராமலிங்கம் தூக்கில் பிணமாக தொங்கியதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிகுப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • ஜீவா மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
    • இதில் ஜீவாவின் வயிறு, மார்பு உள்ளிட்ட 11 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி பழைய காலனியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா (17). இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (22) என்பவரும் நண்பர்கள். ஆனந்த் பி.இ. படித்து விட்டு மின் துறையில் தற்கா லிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஜீவாவை ஓரின சேர்க்கைக்கு ஆனந்த் அழைத்துள்ளார். இதற்கு ஜீவா மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இதற்கிடையே ஜீவா ஒரு பெண்ணுடன் பேசியதை ஆனந்த் ஸ்கிரின் ஷாட் எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவா, ஆனந்தின் செல்போனை பிடுங்கி உடைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே விரோதம் தீவிரமடைந்தது. நேற்று காலை ஜீவா பள்ளிக்கு செல்ல மேல்புளியங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள பெலாந்துறை வாய்க்காலுக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஆனந்த, ஜீவாவிடம் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

    இதில் ஜீவாவின் வயிறு, மார்பு உள்ளிட்ட 11 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவர் அலறினார் . இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனை பார்த்து ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த ஜீவா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சேத்தியா தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மதுபாலன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட ஜீவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவரை கொன்று விட்டு தலைமறைவான ஆனந்தை பிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • தொடர் விடுப்பில் அனைத்து பணியாளர்களும் செல்ல முடிவெடுத்தனர்.
    • இணை செயலாளர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரிடம் மனு கொடுத்தனர். இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வேளாண் கருவிகளை மண்டல இணைப்பதிவாளரிடம் ஒப்படைத்துவிட்டு, தொடர் விடுப்பில் அனைத்து பணியாளர்களும் செல்ல முடிவெடுத்தனர். அதன்படி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கடலூர் பீச் ரோட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு வேளாண் உபகரணங்களை ஒப்படைக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ஆலோசகர் பாண்டியன், மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் மாரிமுத்து, மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி நாராயிணி, மண்டல இணை செயலாளர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை தலைவர்கள் தாமோதரன், சாந்தகுமார், இணை செயலாளர்கள் வாசுகி, உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகின்றன.
    • விழுந்து அடிபடுமோ? என்ற அச்சத்தில் சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த கெடிலம் ஆற்றின் குறுக்கே அண்ணா மேம்பாலம் இருந்து வரு கின்றது. இதில் 24 மணி நேரமும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றது. மேலும் மிக முக்கிய பாலமாக இருந்து வருவதால் பொது மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகின்றன. இந்நிலையில் அண்ணா மேம்பாலத்தில் இரு புறமும் சாலை ஓரத்தில் மண் குவியலாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக சாலை ஓரத்தில் சைக்கிள், மோட்டார் சைக்கி ளில் செல்லக்கூடிய பொது மக்கள் மண் குவியலில் சிக்கிக் கொண்டு பிரேக் அடிக்கும் சமயத்தில் தவறி கீழே விழுகின்றனர்.

    இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் அபாய மும் நிலவி வருகின்றது. கடலூர் பாரதி சாலை யில் இரு புறமும் சாலை ஓரத்தில் மண் குவியல்கள் அதிகமாக இருந்து வருவதால் விபத்து ஏற்பட்டு வருகின்றது. இது சம்பந்தமாக அதி காரிகள் சாதாரண செயல் தானே என்று எண்ணா மல் ஒவ்வொரு முறையும் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடிய வர்கள் எப்போது விழுந்து அடிபடுமோ? என்ற அச்சத்தில் சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மண் குவியலை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருநங்கை திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • வாலிபர் திருநங்கை வினோதினியை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார்‌.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை 5-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேரில் வந்தனர். அப்போது ஒரு திருநங்கை திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார், அதிர்ச்சியடைந்து திருநங்கையிடம் இருந்த மண்எண்ணை கேனை பிடுங்கினர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் பாலூர் நடு காலனியை சேர்ந்த வினோதினி (வயது 26) திருநங்கை என்பது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கை வினோதினி வினோத்குமாராக இருந்தபோது, நத்தப்பட்டை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலர்களாக இருந்து வந்துள்ளனர்.

    அந்த வாலிபர் கூறிய காரணத்தினால் வினோத் குமார், திருநங்கையாக மாறினார். தற்போது அந்த வாலிபர் திருநங்கை வினோதினியை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார். எனவே, இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக திருநங்கை வினோதினி போலீசாரிடம் கூறினார். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
    • அவர்கள் என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலங்களை கொடுத்துள்ளோம்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார் கள். இவர்களில் தனியார் காண்டிராக்ட் ஒப்பந்த தொழிலாளர்கள் 13 பேர் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். என்.எல்.சி. சுரங்கம் -1 பாயிண்ட் நுழைவு வாயில் முன் அவர்கள் உள்ளிருப்பில் ஈடுபட்ட னர். அவர்கள் என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலங்களை கொடுத் துள்ளோம். பாதிக்கப்பட்ட எங்க ளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த 29-ந் தேதி 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • தனது மகள் பிரியா 15 பவுன் நகையுடன் காணாமல் போனதாக கூறியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேலி ருப்பு தெற்கு தெருவை சேர்ந்த வர் ஞானப்பிரகாசம் மகள் பிரியா (வயது 25). இவர் கடந்த 3 வருடங்க ளுக்கு முன்பு கடலூர் பெண்கள் கல்லூரில் படித்தார். பின்னர் வீட்டிலிருந்து முந்திரி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 29-ந் தேதி 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவரது தந்தை ஞானபிரகாசம் காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், தனது மகள் பிரியா 15 பவுன் நகையுடன் காணாமல் போனதாக கூறி யுள்ளார். இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து நகையுடன் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜீவா பள்ளி செல்வதற்காக மேல்புளியங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
    • கொலையாளி ஆனந்த் பி.இ. பட்டதாரியாவார். அவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா (வயது 17). இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவர் இன்று காலை பள்ளி செல்வதற்காக மேல்புளியங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண் டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த் அங்கு வந்தார்.

    அவர் திடீரென மாணவன் ஜீவாவை தனியாக பேசவேண்டும் என அங்குள்ள அழைத்து சென்றார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவாவை குத்தினார். அவருக்கு 8 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளி ஆனந்த் பி.இ. பட்டதாரியாவார். அவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வருகிறார். ஜீவா கொலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் போலீசார் அதனை உறுதி செய்யவில்லை. ஜீவா மற்றும் ஆனந்த் குடும்பதினரிடம் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் கொலை நடந்தபோது ஜீவாவின் நண்பர் பிரவீன் அங்கிருந்ததாக கூறப்படுகிறது. அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளி ஆனந்த் பிடிபட்டால்தான் கொலைக்கான முழு காரணம் தெரியவரும்.

    பிளஸ்-2 மாணவன் பட்டப்பகலில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×