குறைவான மின் விநியோகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

முறையான மின்வினியோகம் வழங்காததால் வீட்டில் உள்ள மின்விசிறி, மிக்சி, மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் வீணாகிறது. இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
Published on

கடலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்க்கல் பூண்டி சுற்றுவட்டார பகுதியில் மிகக் குறைவான மின்னழுத்தம் வருவதாகவும் முறையான மின்வினியோகம் வழங்காததால் வீட்டில் உள்ள மின்விசிறி, மிக்சி, மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் வீணாகிறது. மேலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். இதனை கண்டித்து ராமநத்தம், ஆத்தூர் சாலையில் கீழ்க்கல் பூண்டி பஸ் நிறுத்தம் அருகில் மின்வாரிய அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் பொது மக்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com