என் மலர்
நீங்கள் தேடியது "திருநங்கைகள் கைது"
- முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.
கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் வி.ஏ.ஓ.வாக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார்.
இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.
ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ராஜாராமன் மரணத்திற்கு இரண்டு திருநங்கைகள் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்று இரவில் ராஜாராமன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த திருநங்கையர் நிவேதா, ஸ்ரீகவியை போலீசார் கைது செய்த மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில், ராஜாராமன் செல்லூரில் போதையில் படுத்திருந்தபோது பணம், செல்போன், மோதிரம் பறித்து கொண்டு அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு திருநங்கைகள் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- திருநங்கை ரம்யாவுக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- ஆத்திரம் அடைந்த ரம்யா உள்பட 6 திருநங்கைகள் சேர்ந்து சரவணணை சரமாரியாக தாக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது49). கூலி தொழிலாளியான இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற திருநங்கை ரம்யாவுக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரம்யா உள்பட 6 திருநங்கைகள் சேர்ந்து சரவணணை சரமாரியாக தாக்கினர்.
இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து ரம்யா உள்பட 6 பேரை கைது செய்தனர்.
- மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர்.
புதுச்சேரி:
மயிலாடுதுறை மாவட் டம், திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது32).இவர் நாகப்பட்டினம், தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நாகப் பட்டினத்தில் இருந்து செம்பனார்கோவில் வரை மாணவர்களை அழைத்து சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று காலை மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது. அதனால் அன்று மாலை மோகன் பஸ்சை இயக்கவில்லை.
இரவு பஸ்சில் உள்ள கோளாறை சரி செய்து, மறு நாள் மாணவர்களை அழைத்து வருவதற்காக, நாகப்பட்டினத்தில் இருந்து செம்பனார் கோவிலுக்கு அன்று இரவு 10.30 மணிக்கு, காரைக்கால் டாக்டர் கலைஞர் புறவழி சாலை வழியாக சென்றார். அப்போது அந்த சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு ஐயனார் கோவில் அருகே பஸ்ஸை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க திருநங்கைகள் 2 பேர் திடீரென மோகனை வழிமறித்து, மோகன் கழுத்தில் அணிந்திருந்த 12 கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி யடைந்த மோகன், காரைக்கால் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பஸ் நிலையம் அருகே நின்றிருந்த பவானி (வயது 35), சுவாதி (23) ஆகிய 2 திருநங்கைகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, பஸ் டிரைவரிடம் நகையை பறித்ததை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 12 கிராம் தங்கச் செயினை போலீசார் மீட்டனர்.
- சில நேரங்களில் உல்லாசத்திற்கு அழைத்துச் செல்லும் ஆண்களிடம் அத்துமீறுவதோடு, அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை மிரட்டி வாங்கி கொண்டு செல்வதாக புகார்கள் வந்தன.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் பஸ் நிலையம் மற்றும் ஜவான் பவன் சாலையில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் திருநங்கைகள் அவ்வழியாக செல்லக்கூடிய நபர்களிடம் உல்லாசத்திற்கு அழைப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
மேலும் சில நேரங்களில் உல்லாசத்திற்கு அழைத்துச் செல்லும் ஆண்களிடம் அத்துமீறுவதோடு, அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை மிரட்டி வாங்கி கொண்டு செல்வதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் பஸ் நிலையம் பகுதியில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த 2 திருநங்கைகள் அந்த வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரிடம் கட்டாக இருந்த பணத்தை திடீரென்று 2 திருநங்கைகள் பறித்துக் கொண்டனர். மேலும் அந்த வாலிபரை மிரட்டி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்து கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலைய போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் உடனடியாக 2 திருநங்கைகளை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்களது பெயர் சந்தியா, அஞ்சு என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் சோதனை செய்தபோது வாலிபரிடம் இருந்து பறித்த 93 ஆயிரம் பணம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினார்கள். திருநங்கைகள் சந்தியா, அஞ்சுவை கைது செய்தனர்.
இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ஆண்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், இதனை மீறி யாரேனும் தட்டி கேட்டால் அவர்களை திருநங்கைகள் சூழ்ந்து மிரட்டி வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






