என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூர் அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எஸ்.என்.நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 52) கூலி தொழிலாளி. கடந்த சில மாதங்களாக சேகர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் மனஉளைச்சளில் இருந்த சேகர் சம்பவத்தன்று அதே பகுதியில் விவசாய நிலத்திற்கு அடிக்கக்கூடிய பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
    • 60 கடைகளுக்கு மேல் சாலையை ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் நேரில் வந்து மொட்டை அடித்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம். கடந்த இரண்டு வாரங்களாக தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்த நிலையில் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இதில் மிக முக்கியமாக 3-வது சனிக்கிழமை நாளை வர உள்ளதால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று இரவு முதல் கோவிலை சுற்றி தங்கி அதிகாலையில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டு செல்வது வழக்கம். இதன் காரணமாக அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை தேரடி வீதியில் சுமார் 60 கடைகளுக்கு மேல் சாலையை ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறையினர், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், திருப்பாதி ரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் திருவந்திபுரம் தேரடி வீதியில் ஆக்கிரமித்து அடுக்கி வைக்கப்ப ட்டிருந்த பொருட்களை உடனடியாக அகற்றி சீரமைத்தனர் . மேலும் பொதும க்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மீண்டும் சாலை ஆக்கிரமித்து பொரு ட்களை வைத்திருந்தால் அதனை முழுவதும் பறிமுதல் செய்து அபராதம் விதித்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் 3-வது வாரம் வியாழக்கிழமை என்பதால் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வந்ததோடு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலை த்துறை மற்றும் போலீ சார் அதிரடியாக சாலை யில் ஆக்கிரமித்து வைத்திரு ந்ததை அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசாக பணியில் இருந்து வரும் ரூபன் பதி கடந்த 3-ந் தேதி இரவு ஜெயமாலா வீட்டிற்கு வந்துள்ளார்.
    • அந்தப் பகுதியில் இருந்த தடயங்களை சேகரித்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம் சேலம் மெயின் ரோடு புதுநகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 5ஆண்டுகளுக்குமுன்இறந்துவிட்டார். இவரது மனைவி ஜெயமாலா (40) செங்கல்சூளையி ல்கூலிதொழிலாளி. இவர்களுக்கு ஜெகன் பிரியா, சத்யபிரியா ஆகிய2மகள், கிரி என்கிறஒரு மகன் உள்ளனர். மூத்தமகள்ஜெகன் பிரியாவை கடந்த 4வருடங்களுக்கு முன்புதிருமணம் செய்து கொடுத்தனர். இந்த நிலையில் மூத்த மகள் ஜெகன் பிரியாவின் கணவருடைய தம்பி ரூபன் பதி ஜெயமாலா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். உளுந்தூர்பேட்டையில் போலீசாக பணியில் இருந்து வரும் ரூபன் பதி கடந்த 3-ந் தேதி இரவு ஜெயமாலா வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் இரவு முழுவதும் அங்கிருந்த ரூபன் பதி மறுநாள் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். ரூபன் பதி வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில் வீட்டு தோட்டத்தில் உள்ள வேப்பமரம் ஒன்றில் துப்பட்டா துணியால் சத்திய பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் சத்யபிரியாவின் தம்பி கிரி புகார் கொடுத்தார் . அதில் தனது அக்காள் சத்யபிரியாவின் சாவில் சந்தேகம் உள்ளது என கூறியிருந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சத்திய பிரியா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூரில் இருந்து தடஅறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் தடயங்களைசேகரித்தனர்.தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலை மையிலான போலீசார் அந்தப் பகுதியில் இருந்த தடயங்களை சேகரித்து விசாரணையை முடுக்கிவிட்டனர். விசாரணையில் தாயாரும், தாயாரின்கள்ளக்காதலன் ரூபன் பதியும் சத்திய பிரியாவை தற்கொலைக்கு தூண்டியதுதெரியவந்தது. இவர்களது தொல்லையால் தான் இளம் பெண் சத்திய பிரியா தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதனைதொடர்ந்து தற்கொலை வழக்கைதற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்குபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
    • பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    கடலூர்:

    அ.தி.மு.க.ஆட்சியில் கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும். கடலூர் மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சீர்செய்திட வலியுறுத்தியும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம். சி.சம்பத் தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார். மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், ஒன்றிய செயலாளர் காசிநாதன், அழகானந்தம், ஒன்றிய குழு தலைவர் தெய்வ.பக்கிரி, பகுதி செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கந்தன், வினோத் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், மீனவர் அணி தங்கமணி, பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர். பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் தஷ்ணா, வினோத், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், ஒன்றிய செயலா ளர்கள் தமிழ்ச்செல்வன், நாகபூஷணம், சிவா, நகர செயலாளர் தாடி முருகன், பேரூராட்சி செயலாளர்கள் கனகராஜ், அர்ச்சுனன், இலக்கிய அணி ஏழுமலை, முத்து, மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர்கள் கெமிக்கல் மாதவன், வெங்கட்ராமன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • முறையான மின்வினியோகம் வழங்காததால் வீட்டில் உள்ள மின்விசிறி, மிக்சி, மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் வீணாகிறது.
    • இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    கடலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்க்கல் பூண்டி சுற்றுவட்டார பகுதியில் மிகக் குறைவான மின்னழுத்தம் வருவதாகவும் முறையான மின்வினியோகம் வழங்காததால் வீட்டில் உள்ள மின்விசிறி, மிக்சி, மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் வீணாகிறது. மேலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். இதனை கண்டித்து ராமநத்தம், ஆத்தூர் சாலையில் கீழ்க்கல் பூண்டி பஸ் நிறுத்தம் அருகில் மின்வாரிய அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் பொது மக்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடமும் பலமுறை மனுக்களும் தொலைபேசி வாயிலாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் .
    • செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் அறிவித்தனர்.

    கடலூர்:

    புவனகிரி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 13 ,14, 15, 16, 17 ஆகிய வார்டுகளில் குடிநீர் உப்பு நீராக மாறி மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்து கொடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடமும் பலமுறை மனுக்களும் தொலைபேசி வாயிலாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் . 

    ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புவனகிரி- விருத்தாச்சலம் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ,மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் அறிவித்தனர்.

    அதன்படி இன்று சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.இதனை அறிந்த புவனகிரி தாசில்தார் அன்பழகன், டிஎஸ்.பி. நாகராஜ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், செயலாளர் (பொறுப்பு) திருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி விரைவில் நல்ல குடிநீர் தருகிறோம் என்று கூறினர். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    • மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு பண்ருட்டி நகரில் 5-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாகனங்களை வைத்துள்ளனர்.
    • பறிமுதல் செய்து அந்த வாகனங்களுக்கு முறையான அனுமதி மற்றும் உரிமம் உள்ளதா?

    கடலூர்:

    பண்ருட்டி நகரில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேங்குகளில் சேகரமாகும் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு பண்ருட்டி நகரில் 5-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாகனங்களை வைத்துள்ளனர். இந்த வாக னங்கள் மூலம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேங்க் கழிவு களை அகற்ற அகற்றும் வாகனங்க ளில் எடுத்து சென்று பின்னர் அந்த கழிவுகளை பண்ருட்டி கெடிலம் ஆற்று பகுதி யில் திறந்த வெளியில் கொட்டு கின்றனர்.

    கழிவுகளால் அப்பகுதி யில் துர்நாற்றம் வீசுவ தோடு, சுகாதாரக் சீர்கேடும் ஏற்படு கிறது. இதனால் கழிவுகளை திறந்த வெளி யில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்ப தோடு, அத்துமீறி கொட்டு பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் பானுமதி, நகராட்சி துப்புரவு அலுவலர் முருகேசன் ஆகியோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இன்று அதிகாலை பண்ருட்டி கெடிலம் ஆற்றுப் பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுகளை திறந்து வெளியில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய 5 வாகனங்களை பறிமுதல் செய்து அந்த வாகனங்களுக்கு முறையான அனுமதி மற்றும் உரிமம் உள்ளதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பொதுமக்கள் அவர்களது ஊருக்கு செல்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஏறி உள்ளனர்.
    • போலீசாரை நியமித்து காலை மாலை நேரங்களில் பஸ்களை கண்காணிக்க வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து நல்லூர் செல்லும் பஸ்நேற்று மதியம் நபஸ் நிலையம் வந்தது. இந்தப் பஸ்சில் ஏறுவதற்கு பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த பொதுமக்கள் அவர்களது ஊருக்கு செல்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஏறி உள்ளனர்.அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திட்டக்குடியை அடுத்துள்ள கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் மனைவி அஞ்சலம் (65) செல்போன், ஆதார்கார்டு, ஏ.டி.எம்.கார்டு, 2 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் திட்டக்குடியை அடுத்துள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மனைவி மந்த்ராதேவி (35) என்ற பெண்ணிடமிருந்து பான்கார்டு, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகிய 2பேர்களிடம் பையிலிருந்த மணி பர்சை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட னர். யாரும் போலீசாரிடம் சிக்க வில்லை. திட்டக்குடி பஸ் நிலையத்தில் பெண்களிடம் பணம், நகை தொடர்ச்சியாக மர்ம நபர்கள் பறித்து செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கூடுதல் ேபாலீசாரை நியமித்து காலை மாலை நேரங்களில் பஸ்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அஜித் குமார் நண்பர்களுடன் சேர்ந்து வீண் செலவு செய்து வந்துள்ளா
    • இரவு மதுவில் முந்திரிக்கு அடிக்கும் மருந்தை கலந்து குடித்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி இவரது மகன் அஜித் குமார் (வயது 19), இவர், 10-ம்வகுப்பு வரை படித்து முடித்து விட்டு ஜே.சி.பி. ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து வீண் செலவு செய்து வந்துள்ளார்.இவரை இவரது பெற்றோர்கள் கண்டித்து உள்ளனர்.

    இதனால் கோபித்துக் கொண்ட அஜித் குமார் நேற்று இரவு மதுவில் முந்திரிக்கு அடிக்கும் மருந்தை கலந்து குடித்துள் ளார். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அஜித்குமாரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலகுருவிற்கும், இவரது மனைவி செல்வமணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.
    • இதனையடுத்து சிறிது நேரத்தில் மயங்கி கிழே விழுந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு செல்வநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகுரு விவசாயி. இவரது மனைவி செல்வமணி (வயது 43). இந்நிலையில் பாலகுருவிற்கும், இவரது மனைவி செல்வமணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் நேற்றும் இவர்களுக்கிடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சளில் இருந்த செல்வமணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்த விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் மயங்கி கிழே விழுந்தார்.

    பின்னர் வீட்டிற்கு வந்த பாலகுரு வீட்டில் மயங்கி கிடந்த மனைவி செல்வமணியை மீட்டு அருகில் இருந்தவர்களின் உதவியுடன் சிகிச்சைக்காக சிதம்பரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் செல்வமணியை சேர்த்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வமணி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் பாலகுரு கொடுத்த புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சில நேரங்களில் உல்லாசத்திற்கு அழைத்துச் செல்லும் ஆண்களிடம் அத்துமீறுவதோடு, அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை மிரட்டி வாங்கி கொண்டு செல்வதாக புகார்கள் வந்தன.
    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையம் மற்றும் ஜவான் பவன் சாலையில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் திருநங்கைகள் அவ்வழியாக செல்லக்கூடிய நபர்களிடம் உல்லாசத்திற்கு அழைப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

    மேலும் சில நேரங்களில் உல்லாசத்திற்கு அழைத்துச் செல்லும் ஆண்களிடம் அத்துமீறுவதோடு, அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை மிரட்டி வாங்கி கொண்டு செல்வதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் பஸ் நிலையம் பகுதியில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு நின்றிருந்த 2 திருநங்கைகள் அந்த வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரிடம் கட்டாக இருந்த பணத்தை திடீரென்று 2 திருநங்கைகள் பறித்துக் கொண்டனர். மேலும் அந்த வாலிபரை மிரட்டி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்து கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலைய போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் உடனடியாக 2 திருநங்கைகளை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்களது பெயர் சந்தியா, அஞ்சு என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் சோதனை செய்தபோது வாலிபரிடம் இருந்து பறித்த 93 ஆயிரம் பணம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினார்கள். திருநங்கைகள் சந்தியா, அஞ்சுவை கைது செய்தனர்.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ஆண்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், இதனை மீறி யாரேனும் தட்டி கேட்டால் அவர்களை திருநங்கைகள் சூழ்ந்து மிரட்டி வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுநகரை சேர்ந்தர் சக்திவேல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
    • இவரே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா?

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் சேலம் மெயின் ரோட்டில் உள்ள புதுநகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி ஜெயமாலா (வயது 40). கூலி தொழிலாளி. இவர்களது மகள் சக்தி (19) கல்லூரி மாணவி. இவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் (பொறுப்பு) சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி சக்தி கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? அல்லது இவரே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×