என் மலர்
உள்ளூர் செய்திகள்

புரட்டாசி 3-வது சனிக்கிழமைைய ெயாட்டி கடலூர் துறைமுகம் வெறிச்சோடியது.
புரட்டாசி 3-வது சனிக்கிழமை கடலூர் துறைமுக மீன்பிடி தளம் வெறிச்சோடியது
- பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி செல்வது வழக்கம்.
- இதே போல இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் மிக மிக குறைவாக காணப்பட்டது. .
கடலூர்:
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் மாதம் முழுவதும் பெரும்பாலான மக்கள் விரதம் இருந்து அவர் அவர்கள் தங்கள் நிலைக்கு ஏற்ப முதல் வாரம் முதல் நான்காம் வாரம் வரை சனிக்கிழமைகளில் வீட்டில் பூஜை நடத்தி வழிபடுவது வழக்கம். இதன் காரணமாக புரட்டாசி மாதம் முழுவதும் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டமின்றி மிகக் குறைந்த அளவில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கடலூர் துறைமுகம் மீன்பிடி தளம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் அதிகாலை முதல் மீன் விற்பனை நடைபெறும் கடலூர் மீன்பிடித்தளத்தில் ஒரு சிலர் வியாபாரிகள் மட்டுமே இன்றுமீன் விற்பனையில் ஈடுபட்டனர்.ஆனால் பொதுமக்கள் யாரும் மீன் வாங்க வரவில்லை. இதே போல இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் மிக மிக குறைவாக காணப்பட்டது. பெரும்பாலான இறைச்சி கடைகள் திறக்கப்படாமல் காணப்பட்டது.






