கடலூர் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 3 பேர் கைது

கடலூர் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.3 பேர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டனர்.
கடலூர் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 3 பேர் கைது
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த அகரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27). இவருக்கும் குள்ளஞ்சாவடியை சேர்ந்த மற்றொரு பாலாஜி (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலாஜி தனது மோட்டார் சைக்கிளில் அகரம் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

அப்போது அங்கு இருந்த பாலாஜி உட்பட 3 பேர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலாஜி உடனடியாக மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சி செய்தபோது, அவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து பாலாஜி தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து பாலாஜி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் குள்ளஞ்சாவடியை சேர்ந்த பாலாஜி (23), வன்னியர் பாளையத்தை சேர்ந்த ராகுல் (23), குள்ளஞ்சாவடியை சேர்ந்த குமரகுரு (33) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com