அனைத்து மாநிலங்களும் 'வாட்' வரியை குறைக்க வேண்டும்: மாயாவதி கோரிக்கை

விலை மேலும் குறைய, மத்திய அரசின் அறிவுரையை பின்பற்றி, உத்தரபிரதேசம் உள்பட அனைத்து மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை குறைக்க வேண்டும் என்று மாயாவதி கூறியுள்ளார்.
கேரளா, ராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது மகாராஷ்டிரா

மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியைக் குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டிருந்தார்.
பிசாசுக்கும் ஆழ்கடலுக்கும் இடையே இருப்பதுபோல் மாநிலங்களின் நிலை- ப.சிதம்பரம் கருத்து

மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதியை வழங்காத வரை அல்லது அதிக மானியங்களை வழங்காத வரை, அந்த வருவாயை விட்டுக்கொடுக்க முடியுமா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
அப்போது ஆலோசிக்காத மத்திய அரசு இப்போது குறைக்க சொல்வது நியாயமில்லை- பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசுக்கு முன்பே தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசலுக்கான செஸ் வரியை குறைக்க வேண்டும்-ப.சிதம்பரம் கருத்து

இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்திவிட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 என விலை குறைப்பது கொள்ளை அடிப்பதற்கு சமமானது.
தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

‘மக்களுக்கு நீதி’ வழங்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதுவும் ‘திராவிட மாடல்’ போலும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும்.
கேரளாவை தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது ராஜஸ்தான்

பொது மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாநிலங்களை வலியுறுத்தி இருந்தார்.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமல் - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சலுகை விலையில் கச்சா எண்ணெய் - இந்தியாவை மீண்டும் புகழ்ந்த இம்ரான்கான்

மக்களின் நலனுக்காக அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி ரஷியாவிடமிருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்தார்.
மக்களை முட்டாளாக்காதீர்கள் - பெட்ரோல் டீசல் விலை குறைப்பில் மத்திய அரசை சாடிய காங்கிரஸ்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கலால் வரி குறைப்பு எதிரொலி- வாட் வரியை குறைத்தது கேரளா

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பொதுமக்களின் சுமையை குறைக்கும்- பிரதமர் மோடி கருத்து

எரிபொருள் விலை குறைப்பு பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் விலையை குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி- பாஜக தலைவர் அண்ணாமலை

திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் பங்குகளை விற்க முடிவு

எல்.ஐ.சியின் பொதுப்பங்குகள் சமீபத்தில் விற்கப்பட்ட நிலையில், தற்போது பி.பி.சி.எல் நிறுவனத்தையும் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 நிர்ணயிக்க வேண்டும்- மறுசீரமைப்பு கூட்டத்தில் தொழிற்சங்கம் வலியுறுத்தல்

ஆட்டோ கட்டணத்தை மீண்டும் மறுசீரமைக்கும் பணியை போக்குவரத்து துறை தற்போது தொடங்கி உள்ளது. ஆட்டோ தொழிற்சங்கத்தினரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு- கடலூரில் பரபரப்பு

இதில் சில பெட்ரோல் குண்டுகள் வெடிக்காததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்- மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

மற்ற மாநில முதல்-அமைச்சர்களுடனும் கலந்து பேசி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு மின் உற்பத்திக்கு தேவையான கூடுதல் அளவிலான நிலக்கரியை உரிய நேரத்தில் கொள்முதல் செய்திடவேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.