என் மலர்
கடலூர்
- ஏரியில் இருந்து வினாடிக்கு 54 கன அடி நீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
- ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் முழுகொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. சென்னைக்கு இந்த ஏரியில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீரே வீராணம் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரம் ஆகும். மேட்டூர் அணை நீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மழைக்காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து காட்டாறுகள் மூலம் ஏரிக்கு நீர் வந்து சேரும்.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் கடந்த மாதம் கீழணையில் இருந்து 8 அடி தண்ணீர் ஏரிக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் 46 அடி வரை உயர்ந்தது.
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததாலும், கீழணையில் தண்ணீர் இல்லாததாலும், தொடர்ந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்ததாலும் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்தது.
ஏரியின் நீர் மட்டம் தற்போது 41.85 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 54 கன அடி நீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
விவசாய பணிகளுக்காக வினாடிக்கு 200 கன அடியும், வி.என்.எஸ்.எஸ். வடிகால் மதகு வழியாக விவசாய பணிகளுக்கு 30 கன அடியும் என மொத்தமாக வினாடிக்கு 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து கொண்ட வருகிறது.
இன்னும் ஒரு வாரம் வரை தான் ஏரியில் தண்ணீர் இருக்கும் என கூறப்படுகிறது . இதனால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில் ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
- இலவச பயிற்சி வகுப்புகளும் மற்றும் அத்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
- கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது
கடலூர்:
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் மற்றும் அத்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு களும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வு வகுப்புகளில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படும் குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல்நிலை தேர்விற்கான பாடவாரியான மற்றும் முழு மாதிரி தேர்வுகள் 17- ந்தேதி முதல் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இந்த இலவச மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தேர்வாளர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு 9-ந் தேதி முதல் 16-ந் ேததி வரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். டி.என்.பி.எஸ்.சி.குரூப் 1, குரூப் 2 தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர்கள் இம்மாதிரி தேர்வுகளில் கலந்துக் கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
- கடலூர் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 3 பேர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த அகரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27). இவருக்கும் குள்ளஞ்சாவடியை சேர்ந்த மற்றொரு பாலாஜி (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலாஜி தனது மோட்டார் சைக்கிளில் அகரம் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
அப்போது அங்கு இருந்த பாலாஜி உட்பட 3 பேர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலாஜி உடனடியாக மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சி செய்தபோது, அவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து பாலாஜி தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து பாலாஜி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் குள்ளஞ்சாவடியை சேர்ந்த பாலாஜி (23), வன்னியர் பாளையத்தை சேர்ந்த ராகுல் (23), குள்ளஞ்சாவடியை சேர்ந்த குமரகுரு (33) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் சண்டை நடந்தது.
- அவரது மனைவி விஜய ராணிஆகிய இருவரையும் அடித்து உதைத்து மிரட்டியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவிவிஜயராணி (வயது45),இவர்களது மகள்வித்யா (24), வித்யாவை புதுவை மாநிலம் கொம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜூக்கு கடந்த 5ஆண்டு க்கு முன்திருமணம் செய்து கொடுத்தனர்.இவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.இதே போலகடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் சண்டை நடந்தது. வித்யா சண்டை போட்டுக் கொண்டே தாய் வீடான பூண்டி கிராமத்திற்கு வந்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் கடந்த 28-ந் தேதி 10.30மணி அளவில் பூண்டி கிராமத்திற்கு சென்று மாமியார் வீட்டின் கதவு,வாசலை உடைத்து உள்ளே புகுந்து மாமனார் ரகுநாதன், அவரது மனைவி விஜய ராணிஆகிய இருவரையும் அடித்து உதைத்து மிரட்டியுள்ளார். இதனால் காயம் அடைந்த கணவன் மனைவி இருவரும் பண்ருட்டி ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர் இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து செல்வ ராஜை கைது செய்தனர்.
- பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி செல்வது வழக்கம்.
- இதே போல இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் மிக மிக குறைவாக காணப்பட்டது. .
கடலூர்:
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் மாதம் முழுவதும் பெரும்பாலான மக்கள் விரதம் இருந்து அவர் அவர்கள் தங்கள் நிலைக்கு ஏற்ப முதல் வாரம் முதல் நான்காம் வாரம் வரை சனிக்கிழமைகளில் வீட்டில் பூஜை நடத்தி வழிபடுவது வழக்கம். இதன் காரணமாக புரட்டாசி மாதம் முழுவதும் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டமின்றி மிகக் குறைந்த அளவில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கடலூர் துறைமுகம் மீன்பிடி தளம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் அதிகாலை முதல் மீன் விற்பனை நடைபெறும் கடலூர் மீன்பிடித்தளத்தில் ஒரு சிலர் வியாபாரிகள் மட்டுமே இன்றுமீன் விற்பனையில் ஈடுபட்டனர்.ஆனால் பொதுமக்கள் யாரும் மீன் வாங்க வரவில்லை. இதே போல இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் மிக மிக குறைவாக காணப்பட்டது. பெரும்பாலான இறைச்சி கடைகள் திறக்கப்படாமல் காணப்பட்டது.
- நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து செல்வது உறுதி செய்யப்பட்டது.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி காப்பு காட்டில், வனச்சரக அலுவலர் ரகுவரன், வனவர் சிவகு மார், பன்னீர்செ ல்வம்வ னக்காப்பாளர்கள் நவநீதகி ருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வண்ணா ன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல், சின்ராசு, வேலாயுதம் மற்றும் ஒலையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி ஆகியோர் மோசட்டை சுடுகாடு அருகே அரசு அனுமதி இல்லாமல் மாட்டு வண்டியில் திருட்டு த்தனமாக மணலை எடுத்து சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை வனச்சரக அலுவலர் ரகுவரன் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது, அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து செல்வது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாட்டு வண்டி உரிமையாளர்கள் 4 பேர் மீதும்தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலா 20 ஆயிரம் வீதம் வண்டிகளுக்கு 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நள்ளிரவு முதல் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் தங்கி காலை சாமி தரிசனம் செய்து சென்றார்கள்.
- கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
இக்கோவிலில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் புரட்டாசி மாதம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று 3-வது சனிக்கிழமை என்பதால் நேற்று முன்தினம் முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருவந்திபுரத்திற்கு வந்தனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்று, சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் தேவநாதசாமி கோவிலில் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷம் தொடர்ந்து எழுப்பியவண்ணம் இருந்ததை காண முடிந்தது. நேற்று முன்தினம் முதல் இன்று மதியம் வரை திருவந்திபுரம் சாலக்கரை இலுப்பைதோப்பில் அமைந்துள்ள மொட்டை அடிக்கும் கூடாரத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடைன செலுத்தும் வகையில் மொட்டை அடித்து சாமி கும்பிட்டு சென்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நள்ளிரவு முதல் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் தங்கி காலை சாமி தரிசனம் செய்து சென்றார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த காரணத்தினால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நுழைவு தேர்விற்கான பயிற்சிக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது
- இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும்
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கானசட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி க்கு இலவசமாகவழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும் முறை நேரிடையாகவும் நடைபெறும்.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழைவுத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளான, நேர்காணல், குழு விவாதம், எழுத்துத் தேர்வு ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
- எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது
- தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்
கடலூர்:
நெய்வேலி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 44 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள் இன்று காலை என்.எல்.சி. பொதுமருத்துவமனை முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-என்.எல்.சி. நிறுவனம் தற்போது மருத்துவமனையில் பணி செய்வதற்காக நேரடியாக ஆட்களை நியமனம் செய்ய எழுத்து தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது. மீதி பேருக்கு வரவில்லை. ஆகவே அதில் எங்களுக்கு முதலில் முன்னுரிமை அளித்து விட்டு அதன் பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்து 4-ந்தேதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.
தொடர் போராட்டம்...அப்போது எங்களிடம் நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் நாங்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏவிடமும் நேரில் சென்று இந்த பிரச்னை தொடர்பாக மனு கொடுத்ேதாம். ஆனால் நாங்கள் கொடுத்த மனுவிற்கு இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் நாங்கள் மீண்டும் இன்று காலை மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்கும்வரை இந்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.
- எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமை
- 1,200 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்
கடலூர்:
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம், மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா கடலுாரில் நடைபெற்றது . இப்போட்டியை வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். பின், சில நிமிடங்கள் சிலம்பம் சுற்றினார்.நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாநகர மேயர் சுந்தரி ராஜா, அகில இந்திய சிலம்பம் சம்மேளன பொதுச் செயலாளர் ஐரின் செல்வராஜ், மாவ ட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க செயலாளர் தட்சணா மூர்த்தி குத்துவிள க்கேற்றினர்.
செயின்ட் ஜோசப் கல்லுாரி செயலர் சுவாமிநாதன், மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க கவுரவத் தலைவர் வித்யாபதி வாழ்த்துரை ஆற்றினார். விழாவில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், ஒன்றிய செயலாளர் விஜய சுந்தரம், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் பிரசன்னா, பகுதி துணை செயலாளர், கார் வெங்கடேசன் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜமாணிக்கம், அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டியில், தமிழ்நாடு, அரியானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, காஷ்மீர் உட்பட 22 மாநிலங்களைச் சேர்ந்த 1,200 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஏற்பாடுகளை துணைத் தலைவர் ஆறுமுகம், பயிற்சியாளர் எழிலரசன் செய்திருந்தனர்.
- இதனை அடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
- இந்த கட்டிடத்தை பயன்படுத்தி கொண்டு சட்ட விரோதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு மங்களூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விற்பனை கூடம் கட்டிடம் கட்டி இயங்கி வந்தது. நாளடைவில் அந்தக் கட்டிடம் சேதமடைந்தும், இடியும் தருவாயில் இருந்தது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மணல்மேட்டில் இயங்கி வந்த இடம் நீர்நிலை புறம்போக்கு என்பதால் அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் திட்டக்குடி அடுத்துள்ள பட்டூர் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
தற்போது மங்களூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விற்பனை கூடம் கட்டிடம் சேதமடை ந்தும், பாழடைந்தும், எந்த நேரத்திலும் விழும் தருவாயில் உள்ளது. அதுமட்டுமின்றி சமூக விரோதிகள் இந்த கட்டிடத்தை பயன்படுத்தி கொண்டு சட்ட விரோதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பழைய வேளாண்மை கட்டிடத்திற்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் இந்த கட்டிட த்தை ஆய்வு செய்து ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள் இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அரசு பஸ் டிரைவர் நந்தகோபால கிருஷ்ணன் பஸ்சை ஓட்டி வந்தார்
- அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயம் இன்றி தப்பினர்.
கடலூர்:
நெய்வேலியில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று மாலை பண்ருட்டி நோக்கி வந்தது. அரசு பஸ் டிரைவர் நந்தகோபால கிருஷ்ணன் பஸ்சை ஓட்டி வந்தார்.அரசு பஸ் மோதியது பண்ருட்டி ஒன்றியம் அன்னக்காரன் குப்பம் அங்காளம்மன் கோவில் அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது அரசு மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அன்னக்காரன் குப்பம் வடக்குத் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் மகன் சம்பத்குமார் (வயது 23), என்பவரும் பின்னால் உட்கார்ந்து வந்த அவரது தங்கை சவுந்தர்யா ஆகிய 2 பேரும் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த விபத்தால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயம் இன்றி தப்பினர்.
விசாரணை இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






