என் மலர்tooltip icon

    கடலூர்

    • பஸ் கம்மாபுரம் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.
    • பஸ் நிறுத்திய டிரைவர், பின்பக்கம் வந்து பார்த்து, உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு டவுன் பஸ் ஒன்று இன்று காலை விருத்தாசலத்திற்கு புறப்பட்டது. இந்த பஸ் கம்மாபுரம் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர், பஸ்சின் மீது கற்களை வீசியுள்ளார். இது பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த திடீர் நிகழ்வால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் அலறினர்.பஸ் நிறுத்திய டிரைவர், பின்பக்கம் வந்து பார்த்து, உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த பஸ்சினை பின்தொடர்ந்து வந்த மற்றொரு டவுன் பஸ் டிரைவரும், பஸ்சினை ஓரங்கட்டி நிறுத்தினார்.கல்வீசிய மர்மநபரை கைது செய்தால் மட்டுமே பஸ்சினை எடுப்போமென 2 பஸ் டிரைவர்களும் கூறினர். இதனால் வேலைக்கு செல்வதற்காக பஸ்சில் வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கம்மாபுரம் போலீசார், அரசு பஸ் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவரை பிடித்து விடுவோம். நீங்கள் பயணிகளின் நலன் கருதி பஸ்சினை இயக்குங்கள் என்று போலீசார் கூறினர்.இதனை ஏற்ற அரசு டவுன் பஸ் டிரைவர்கள், அங்கிருந்து பஸ்சினை இயக்கினர். இதையடுத்து பஸ்சில் வந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி பயணம் செய்தனர். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    3 மாதங்களாக அடிக்கடி தனிமையில் இருப்பதும், தானாக பேசுவதுமாக இருந்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவியில் வசித்து வந்தவர் ஜெய கோபி (வயது55). இவருக்கு கடந்த ஆண்டு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சையில் இருந்துவந்தார். மேலும் சர்க்கரை நோய்க்கும் மருந்துகள் சாப்பிட்டு வந்தார். கடந்த 3 மாதங்களாக அடிக்கடி தனிமையில் இருப்பதும், தானாக பேசுவதுமாக இருந்துள்ளார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று மதிய உணவுக்காக மகள் யோகேஸ்வரி, தந்தை இருந்த அறை கதவை தட்டியபோது, திறக்கவில்லை. ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, ஜெயகோபி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து, பிருத்திவிராஜ், நிரவி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் உடலை கைபற்றி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகேந்திரனை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மகேந்திரன் உறவினர்கள் திண்டிவனம் -திருவண்ணா மலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் 35, இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இவர் பட்டணத்தில் இருந்து வெண்மணி ஆத்தூ ரில் உள்ள அவரது உறவி னர் வீட்டுக்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாக னத்தில் மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சென்னையில் இருந்து செஞ்சி வந்த மினி லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய மினி வேனை அடித்து நொறுக்கினர்.அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.மேலும் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகேந்திரனை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மகேந்திரன் உறவினர்கள் திண்டிவனம் -திருவண்ணா மலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வெகு நேரம் ஆகியும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வராததால் மகேந்திரன் உடலை ரோட்டில் ஓரமாக வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் திருவண்ணாமலை -திண்டிவனம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்த வந்த ரோசனை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மகேந்திரன் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்சில் அனுப்பி வைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.மறியல் காரணமாக சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேலாக வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றது . இதுகுறித்து யோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மினி வேனின் முன்பக்க டயர் வெடித்து விபத்துக் குள்ளானது ெதரிய வந்தது.

    சிறுவனின் தந்தை ஏற்க னவே இறந்து விட்டார். இந்நிலையில் அந்த சிறுவனை அவரது தாயார் அடிக்கடி ஒழுங்காக படிக்கும்படி கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு நேற்று நள்ளிரவு சிறுவன் ஒருவன் கடலுக்குள் இறங்க முயற்சித்துள்ளான். இதை பார்த்த அங்கு இருந்த நரிக்குறவர்கள் பார்த்து அந்த சிறுவனைபிடித்து வைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமை யிலான போலீசார் அங்கு சென்று அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

    அவன் பண்ருட்டி அருகே உள்ள பண்டரக்கோ ட்டையை சேர்ந்த 11 வயது சிறுவன் என்பதும் 6-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த சிறுவன் அவரது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சென்று தனது தாயார் பணம் வாங்கி வர சொன்னதாக கூறி, பணத்தை வாங்கிக் கொண்டு பண்ருட்டி யில் இருந்து கடலூர் பஸ் நிலையம் வந்துள்ளான். பின்னர் அங்குள்ள கடை யில் எலி மருந்து கேட்டுள்ளான். அந்த கடையில் இல்லை என்று சொன்ன தால், மீண்டும் பஸ் ஏறி தேவனாம்பட்டி னம் சில்வர் கடற்கரைக்கு சென்றபோது அங்குள்ள வர்கள் பிடித்து போலீசி டம் ஒப்படைத்தது தெரிய வந்தது.

    மேலும் மாணவனின் தாயாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர். அந்த மாணவன் தாயாரை பார்த்ததும் அவரிடம் செல்லாமல் அழுதுள்ளான். பின்னர் குழந்தைகள் பாது காப்பு அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு, சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுவன் தனது தாயாருடன் செல்வ தாக கூறியுள்ளான். இதன் பின்னர் சிறுவனின் தாயா ருக்கும் அறிவுரை கூறி அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது0

    • முன்விரோத தகராறு காரணமாக இருவ ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • குமரவேல் உட்பட 2 பேர் திடீரென்று பழனி வேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த தியாக வல்லி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 47). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமர வேலுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று முன்விரோத தகராறு காரணமாக இருவ ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது குமரவேல் உட்பட 2 பேர் திடீரென்று பழனி வேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த பழனி வேல் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற் றோர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்பாக பிடிக்கப்பட்ட லாரி ஒன்று பல மாதங்களாக நின்று கொண்டிருந்தது.
    • கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பா திரிப்புலியூர் நத்தவெளி சாலையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு விசாரணை வழக்கு தொடர்பாக பிடிக்கப்பட்ட லாரி ஒன்று பல மாதங்களாக நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை நின்று கொண்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது.இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து உடனடியாக மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    பின்னர் தீயை அணைக்க முயற்சி செய்த நிலையில், தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த லாரியின் தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • பண்ருட்டி அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • 100 பாக்கெட்டு சாராயத்தை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாமூர் பாலத்தின் அருகே புதுவை மாநிலம் மடுகரை முத்துநகர் 4-வது தெருவை சேர்ந்த தங்கமணி என்பவரது மகன் கர்ணன் (வயது 39) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது . இதனை தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 100 பாக்கெட்டு சாராயத்தை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நிவேதா கடலூர் பெண்கள் கல்லூரியில் பி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இதையடுத்து நிவேதாவின் தந்தை ராஜா பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்

    கடலூர்:

    பண்ருட்டி விழமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ரேவதி (எ) நிவேதா (வயது 17). இவர் கடலூர் பெண்கள் கல்லூரியில் பி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நிவேதாவின் தந்தை ராஜா பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றார்.

    • கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வல்லம் தெற்கு தெருவை சேர்ந்த வர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி ராணி (வயது 65). இவர், திருவந்திபுரம் கோவிலுக்கு சென்று விட்டு பண்ருட்டி பஸ் நிலையத்தில் டவுன் பஸ்சில் ஏறி இறங்கி பார்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.

    • பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் அலைமோதி பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்தனர்.
    • தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் கடந்த 3 வாரமாக பொதுமக்கள் விரத முறையை கடைப்பிடித்தனர். நேற்று 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் அலைமோதி பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை முடிந்த நிலையில் இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் கடந்த மூன்று வாரமாக பொது மக்கள் இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டதோடு, நேற்று ஆங்காங்கே இறைச்சி கடைகள் மூடப் பட்டு இருந்தது. இன்று அதிகாலை 3 மணி முதல் வியாபாரி களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

    இதில் வஞ்சரம் கிலோ 650 முதல் 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரைக் கும், பன்னி சாத்தான் மீன் 350 ரூபாய்க்கும், பாறை மீன் 350 ரூபாய்க்கும், கனவா வகை மீன்கள் 250 ரூபாய்க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல இறைச்சி கடைகளிலும் பொது மக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப் பட்டது.

    • சிதம்பரம் அருகே வெடிபொருள் தயாரித்தவர் கைது செய்யப்பட்டார்.
    • வெடிப் பொருள்கள் தயாரிக்கும் மூலப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உரிமம் இன்றி குடியிருப்பு பகுதியில் வெடிப் பொருள்கள் கள்ளத்தனமாக தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அண்ணா மலைநகர் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கூத்தன்கோ வில் காலணி அருகே குடியிருப்பு பகுதியில் கள்ளத் தனமாக வெடிப் பொருள்கள் தயாரித்த சிதம்பரம் எம்.கே.தோட்டம் பிச்சை முத்து நகரைச் சேர்ந்த ஜெயசங்கர் (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து வெடிப் பொருள்கள் தயாரிக்கும் மூலப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அண்ணா மலைநகர் போலீசா வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பழனி கடந்த 29-ந்தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்
    • சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 60). இவர் கடந்த 29-ந்தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×