என் மலர்tooltip icon

    கடலூர்

    • கோவில் நகை- உண்டியல் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் திருட்டு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கோவில்களில் உண்டியல் உடைத்து திருடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்ததையடுத்து கடலூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், டி.எஸ்.பி.ரூபன்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் வட்டத்தூர், கொண்டசமுத்திரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து பணம் திருடியது குறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் சேத்தியா த்தோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி.ரூபன்குமாரின் தனிப்படை போலீசார் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பாபு, கோபி, ஏட்டுகள் மணிகண்டன், சங்கர், ரஜினி, விஜயகுமார், புகழ் ஆகிய குழுவினர் அடங்கிய போலீசார் திருட்டு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கண்மணி ராஜா (37) என்பவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் வட்டத்தூர், கொண்ட சமுத்திரம், பாளையங்கோட்டை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கோவில் நகைகள், உண்டியலை உடைத்து பணம் திருடியதாக அவர் ஒப்புகொண்டார். அவரிடமிருந்து ரூ.8லட்சம் மதிப்புள்ள 15½ பவுன் கோவில் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் கண்மணி ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

    • திட்ட அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
    • அசம்பாவிதம் நடைபெறா மல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

    கடலூர்:

    கடலூர் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில் முற்றுகை போராட்டம் கடலூர் பச்சையாங்குப்பம் இரட்டை ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று சிப்காட் திட்ட அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கவுன்சிலர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன. ஆனால் த.வா.க வினர், எங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்ட மாக தெரிவித்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் போலீசார் சார்பில் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதற்கு பதில் கடலூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு அனுமதி அளித்தனர். இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆயிரக்க ணக்கானோர் காலை முதல் போராட்ட த்தில் கலந்து கொள்வதற்கு திரண்டு வந்தனர். இதனைத் தொட ர்ந்து கடலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பே ட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரம் போலீசார் கடலூர் பகுதியில் குவிக்கப்பட்டனர் . மேலும் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெறா மல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சிப்காட்டில் இயங்கி வரும் தொழி ற்சாலைகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்மு ருகன் எம். எல்.ஏ தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் கவுன்சிலர் கண்ணன் வரவேற்றார். இதில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால் வளவன், மாநில அமைப்பு செயலாளர் கண்ணன், மாநில அமைப்பு குழு உறுப்பினர் ஆனந்த் , மாநகர மாவட்ட செயலாளர் லெனின், மாநகராட்சி கவுன்சிலர் அருள் பாபு உட்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தால் கடலூரில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. த.வா.க.வினரின் போராட்டம் காரணமாக கடலூரில் கடும் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் அதனை சரி செய்தனர். போராட்டத்தால் கடலூர் ஸ்தம்பித்தது.

    • மாயகிருஷ்ணன், தெய்வசிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    • மாணவர்கள் மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

    கடலூர்:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் போட்டி களை தொடங்கி வைத்த னர். இதில் இணை ஒருங்கிணை ப்பாளர் ராஜராஜ சோழன், உடற்கல்வி ஆசிரியர்கள் முருகானந்தம், கருப்பையன், மனோகர் பயிற்சியாளர் மாயகிருஷ்ணன், தெய்வசிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றது. 14 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போ ட்டிகள் நடைபெறுகிறது. இதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

    • சம்பவத்தன்று சுதாகர் தொழில் தொடங்கப் போவதாக கூறி ஜெனிதாமேரிடம் பணம் கேட்டார்.
    • 16 பவுன் நகையை தருமாறு சுதாகரிடம் கேட்டார். அவர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ஜெனிதாமேரி. விருத்தாச்சலம் பூதாம்பூரை சேர்ந்தவர் சுதாகர். இருவரும் நண்பர்கள். சம்பவத்தன்று சுதாகர் தொழில் தொடங்கப் போவதாக கூறி ஜெனிதாமேரிடம் பணம் கேட்டார். அவர் வைத்திருந்த 16 பவுன் நகையை சுதாகரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து சுதாகர் அந்த நகையை ரூ.3 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில் ஜெனிதா மேரி தனது 16 பவுன் நகையை தருமாறு சுதாகரிடம் கேட்டார். அவர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஜெனிதா மேரி குறிஞ்சிப்பாடி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதனை கண்ட கட்டிட உரிமையாளர், தனியார் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.
    • இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பூட்டை உடைத்து கதவை திறந்தனர்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரில் தனியார் நிறுவன ஏ.டி.எம். 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பண்ருட்டி யூனியன் அலுவலகம் எம்.ஜி.ஆர். சிலை பின்புறம் உள்ள தனியார் கட்டிடத்தில் ஏ.டி.எம். இயங்கி வருகிறது. இந்த ஏ.டி.எம். நேற்று இரவு இருண்டு கிடந்தது. இதனை கண்ட கட்டிட உரிமையாளர், தனியார் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். இன்று காலை தனியார் நிறுவன ஊழியர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் பின்புறமுள்ள கதவை திறக்க முடியவில்லை. அதில் ஏற்கனவே இருந்த பூட்டிற்கு பதிலாக வேறு ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    அந்த அறையில் இருந்த இன்வெட்டர், பேட்டரி போன்ற மின் சாதனப் பொருட்களை காணவில்லை. இதனால் மின் விநியோகம் தடைபடும் போது ஏ.டி.எம்.ல் இருள் சூழ்ந்து பணிசெய்யாமல் போனதை கண்டறிந்தனர். இது குறித்து பண்ருட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஏ.டி.எம். கொள்ளை யர்களின் கைவரிசையா? அல்லது பேட்டரி திருடர்கள் இதனை செய்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வி நடுக்குப்பத்தில் உள்ள முந்திரி கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
    • இதுகுறித்து பண்ருட்டி போலீசார்வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி முத்து நாராயணபுரம் பாலூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர்அய்யனார். இவரதுமனைவி செல்வி வயது (32). அய்யனார் கடந்த 3வருடத்திற்குமுன்பு இறந்துவிட்டார். செல்வி நடுக்குப்பத்தில் உள்ள முந்திரி கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒருமகளும் உள்ளனர். இவரது மகன்கள் இருவரும் கடலூர் செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார்கள். இவரது மகள் செல்வகுமாரி பட்டாம்பாக்கம் போர்டிங் பள்ளியில்அங்கேயே தங்கி பிளஸ்-2படித்து வருகிறார். செல்வி கடந்த 5-ந் தேதி காலை 10 மணியளவில் தனது வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நடுக்குப்பத்தில் உள்ள தனது அக்காள் சிவசக்தி வீட்டில் மகன்களுடன்தங்கி விட்டார்.

    கடந்த 9 -ந் தேதி காலை 6மணியளவில் வீட்டிற்கு சென்று பார்த்த போது இவரது வீட்டின் பின் பக்கமுள்ள கீற்றினை பிரித்து யாரோ வீட்டினுள் நுழைந்து வீட்டில் இருந்த இரும்பு பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் செயின், ½ பவுன் சுத்து மாட்டல் -1 ஜோடி, 2 ஜோடி கொலுசுகள் ஆகியவைகளை திருடி சென்றதுதெரிய வந்தது. அக்கம் பக்கம் விசாரித்தும் எந்த தகவலும்தெரியா ததால்பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் திருட்டுபோன நகைகளை கண்டுபிடித்து தருமாறு செல்விபுகார் கொடுத்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார்வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர் கள் தங்கவேலு,பிரசன்னா, ேபாலீஸ்காரர்கள் அன்ப ரசு, ஷரிகரன்ஆகியோர் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவி ட்டனர். போலீசாரின் தீவிரவிசாரணையில் அதே ஊரை சேர்ந்த முத்தாலு(35) நகையை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தப்பியோட முயன்ற அவனை கைது செய்து அவனிடமிருந்துசெல்வி வீட்டில் திருடிய நகைகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கோழி சண்டை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பேய்க்காநத்தம் பகுதியில் உள்ள வயல்வெளியில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்ததை பார்த்தனர்.

    கடலூர்:

    குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று இரவு சோர்ந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ரோந்து பணி நடந்தது. அப்போது பேய்க்காநத்தம் பகுதியில் உள்ள வயல்வெளியில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்ததை பார்த்தனர். அங்கு சென்றபோது கோழி சண்டை நடத்தி சூதாட்டம் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கோழிச்சண்டை சூதாட்டம் நடத்திய கருப்பன்சாவடி விஜய், தா. பாளையம் பாஸ்கர், பேய்க்கா நத்தம் மனோ மூர்த்தி, வெங்கடாம்பேட்டை சதாசிவம் ஆகியோரை கைது செய்தனர். கோழிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுமியை நீண்ட நேரம் போராடி மீட்டனர்.

    கடலூர்:

    வேப்பூர் அருகே தரைக் கிணற்றில் தவறி விழுந்து 6வயது குழந்தை பலியானது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சித்தேரி காலனியை சேர்ந்தவர் மணி. கூலித் தொழிலாளி. இவரது மகள் கனிஷ்கா(வயது6).இவள் சித்தேரி அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று சிறுமி கனிஷ்காஅப் பகுதியில் உள்ள வயல் வெளியில் நடந்து சென்றார். அப்போது அங்குள்ள200 அடி ஆழ தரைக் கிணற்றில் தவறி விழுந்தாள்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கு ஓடி வந்து சிறுமியை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுமியை நீண்ட நேரம் போராடி மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே சிறுமி கனிஷ்கா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு கால சர்ப்ப மகாயாகம் நடைபெற்றது
    • ராகு மேஷ ராசியி லிருந்து மீன ராசிக்கும், கேது துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயற்சி யாகின்றனர்

    கடலூர்:

    சிதம்பரம் நடராஜர் நகர் ஸ்ரீவித்யா பாலா பீடத்தில் மகா திருபுரசுந்தரி சந்நிதியில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு கால சர்ப்ப மகாயாகம் நடைபெற்றது.ஞாயிற்றுக்கிழமை மாலை 3.40 மணிக்கு ராகு மேஷ ராசியி லிருந்து மீன ராசிக்கும், கேது துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயற்சி யாகின்றனர். இதனை முன்னிட்டு கால சர்ப்ப மகாயாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினர் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவித்தியா பாலா பீட நிறுவனர் செல்வரத்தின தீட்சிதர் செய்திருந்தார்.

    தேவபாண்டலம் சுடுகாடு அருகே பணம் வைத்து 7 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தேவபாண்டலம் சுடுகாடு அருகே பணம் வைத்து 7 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர்.

    விசாரணையில், தேவபாண்டலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 34), பிரகாஷ் (30), தயாநிதி (33), பத்ரிநாத் (23), அன்பரசன் (34) மற்றும் வடசிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (40), ராஜ்குமார் (28) என்பது தெரியவந்தது. 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த சங்கராபுரம் போலீசார் அவர்களை கைது செய்தனர்.


    • டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
    • கிராம பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடை பெற்று வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு கட்டமாக குறிஞ்சிப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். அகிலா உத்தரவின் படி தினந்தோறும் குறிஞ்சிப்பா டி வட்டாரத்தி ற்குட்பட்ட கிராம பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடை பெற்று வருகிறது. நேற்று கருங்குழி கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் (பொறுப்பு) பாண்டியராஜூ தலை மையில் சுகாதார ஆய்வா ளர் . கனகரத்தினம் மேற்பார்வையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மேற்கொள்ள பட்டது.காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டா ல் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்குள்ள டாக்டர்களை அணுகி சிகிச்சை மற்றுமி ஆலோசனை பெற வேண்டும் என வடலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். கனிமொழி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதேபோல குறிஞ்சி ப்பாடி வட்டாரம் பொன்ன ங்குப்பம் கிராமத்திலும் கொசு ஒழிப்பு பணிகள்

    நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் (பொறுப்பு) பாண்டியராஜூ தலைமை யில் சுகாதார ஆய்வாளர்கள் . ஜெயச்சந்திரன் மற்றும் கலாநிதி ஆகியோர் மேற்பார்வையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகள் மேற்கொ ள்ள பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு அளிக்க பட்டது. முதிர் கொசுக்களை அழிப்பதற்கு புகைமருந்து தெளிக்கும் பணிகளை வடக்குத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி துவக்கி வைத்தார். 

    கரும்பு பயிரிடப்பட்ட நிலத்தில் உடல் கருகிய நிலையில் உடல் கிடப்பதை பார்த்தனர். அருகே சென்றபோது மின் கம்பி அறுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கட

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியை அடுத்த சி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 56). விவசாய தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் விவசாய பணிக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று காலை வீட்டிலிருந்து சென்றார்.நேற்று மாலை வெகுநேரமாகி யும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தார் பழனிவேலை தேடினர். விளைநிலங்களில் இரவு நேரத்தில் தேடும் பணியை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டதால், காலை தேடிக் கொள்ளலாம் என்று வீடு திரும்பினர்.இன்று அதிகாலை முதல் அவர் பணிக்கு சென்ற விளைநில பகுதியில் மீண்டும் தேடும் பணியில் பழனிவேலின் குடும்பத்தார் ஈடுபட்டனர்.அப்போது, அங்கிருந்து கரும்பு பயிரிடப்பட்ட நிலத்தில் உடல் கருகிய நிலையில் உடல் கிடப்பதை பார்த்தனர். அருகே சென்றபோது மின் கம்பி அறுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இது தொடர்பாக மின் வாரியத்திற்கும், கருவேப்பிலங்குறிச்சிபோலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மின் விநியோகத்தை நிறுத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கருகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றினர். இதனைப் பார்த்த பழனிவேலுவின் குடும்பத்தார், இறந்தவர் பழனிவேல் என்பதை உறுதி செய்தனர்.மேலும், அங்கு அவர்கள் கதறியழுத காட்சி காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், பிரேத பரிசோதனைக்காக பழனிவேலுவின் உடலை விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விவசாய கூலி வேலைக்கு சென்றவர் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×