கடலூரில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் ரூ.3 லட்சம் பணம்- தங்க நாணயம் கொள்ளை

இன்று காலை வழக்கம் போல் தனியார் ஷோரூமை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. தடயவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
கடலூரில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் ரூ.3 லட்சம் பணம்- தங்க நாணயம் கொள்ளை
Published on

கடலூர்:

கடலூர் - சிதம்பரம் சாலையில் செல்லங்குப்பம் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமை நேற்று இரவு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்று விட்டனர். இன்று காலை வழக்கம் போல் தனியார் ஷோரூமை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்தி ருந்தது. அங்கு ஒரு அறை யில் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைந்து பொருட் கள் சிதறி கிடந்தது. பின்னர் லாக்கரை சென்று பார்த்த போது 3 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 6 கிராம் தங்க நாணயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. கொள்ளையர்கள் ஷோரூம் க்குள் எப்படி வந்தனர்? என பார்வை யிட்ட போது, பின்புறம் இருந்த ஜன்னலை அறுத்து மர்ம நபர்கள் உள்ளே வந்து பணம் மற்றும் தங்க நாணயத்தை திருடியது தெரியவந்தது.

இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப் புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். கடலூர் - சிதம்பரம் சாலையில் மக்கள் நட மாட்டமும், வாகன போக்கு வரத்தும் 24 மணி நேரமும் இருந்து வரும் நிலையில் மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நாணயத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com