கடலூரில் பெண் மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு

அன்பரசன் என்பவருக்கும் முன்விராத தகராறு இருந்து வந்தது. ரூபியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூரில் பெண் மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
Published on

கடலூர்:

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கும் இவரது உறவினர் அன்பரசன் என்பவருக்கும் முன்விராத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று முன்விரோத தகராறு காரணமாக அன்பரசன் அவரது மனைவி இந்துமதி ஆகியோர் முத்துக்குமரன் மனைவி ரூபியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ரூபி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் அன்பரசன், இந்துமதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com