search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரு லட்சுமி அறக்கட்டளை  சொத்து மீட்பு விவகாரம்: வேல்முருகன் எம்.எல்.ஏ. மீது அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குபதிவு
    X

    குரு லட்சுமி அறக்கட்டளை சொத்து மீட்பு விவகாரம்: வேல்முருகன் எம்.எல்.ஏ. மீது அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குபதிவு

    • 40 ஆண்டுகள் முடிவு பெற்ற பிறகு இந்து சமய அறநிலை துறை வசம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
    • இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் வட கைலாசம், காமராஜர் நகரில் உள்ள குருலட்சுமி அறக்க ட்டளைக்கு சொந்தமான இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் ரூ100கோடி மதிப்பிலா ன 1 ஏக்கர் 80 சென்ட் இடத்தை ராமச்சந்திரன் ,ரேவதி ,அன்பு ஆகியோர்களின் உறவினர்கள் 40 ஆண்டு குத்தகைக்கு வைத்திருந்து 40 ஆண்டுகள் முடிவு பெற்ற பிறகு இந்து சமய அறநிலை துறை வசம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    கோர்ட்டு உத்தரவுப்படி இந்த இடத்தை கடந்த19-ந் தேதி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கையகப்படுத்திய போது ராமச்சந்திரன், ரேவதி, அன்பு ஆகியோர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் தூண்டுதலின் பேரில் தான் நீங்கள் இடத்தை கையகப்படுத்துகிறீர்கள். நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம் என்று ராமச்சந்திரன், ரேவதி, அன்பு ஆகியோர்கள் மிரட்டியதாக ராமச்சந்திரன், ரேவதி, அன்பு ஆகியோர் மீது வேல்முருகன் எம்.எல்.ஏ. உதவியாளர் ராஜசேகர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில்எம்.எல்.ஏ உதவியாளர் புகார்மனு கொடுத்துள்ளார். அதில்பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வேல்முருகன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×